CoWIN கோவின் தளத்தில் சர்வதேசப் பயணிகள் தங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் சர்வதேச பதிப்பை பெறலாம். http://ow.ly/Vl2T50Glija
Tuesday, October 5, 2021
Monday, September 6, 2021
📺📻📪📫 4தமிழ்மீடியா News Letter : Sep 2021
Monday, August 30, 2021
Thursday, August 26, 2021
இத்தாலிக் கப்பூச்சினோவும் ஐரோப்பாவின் 'கிறீன் பாஸ்' சான்றிதழும் !
வா ர இறுதியில், இத்தாலியிலுள்ள ஒரு பெரும் வணிவ வளாகத்தில் பொருட் கொள்வனவுக்காக நடந்து களைத்த நேரத்தில், கண்ணில் தெரிந்தது அந்தக் கபே பார். அந்த வணிக வளாகத்தின் கபே பாரில் கிடைக்கும் கப்பூச்சினோவின் சுவையும், நடந்த களைப்பும், சேர அங்கிருந்த இளைப்பாறு பகுதியில் அமர்ந்து கொண்டேன்.
சேவையாற்றும் பெண் அருகே வந்தாள். கபேக்கான ஆடர் எடுக்க வருகிறாள் என நினைத்த போது, அருகே வந்த அவள், இங்கே உட்காருவதென்றால், உங்கள் 'கிரீன்பாஸ்' மருத்துவச் சான்றிதழை முதலில் உறுதி செய்து வாருங்கள் என்றாள். ஆகஸ்ட் 6ந் திகதி முதல் இத்தாலியில் உணவகங்கள் முதல் முக்கிய இடங்களில் கூடுவதற்கு 'கிரீன்பாஸ் ' கட்டாயமாக்கப்பட்டுள்ளமை அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ஆயினும் வணிக வளாகத்திற்குள் நுழைவதற்குத் தேவைப்படாத 'கிரீன்பாஸ்' அங்கே உள்ள கபே பாருக்குத் தேவைப்படுவது ஆச்சரியமாக இருந்தது. கேட்டபோது 'கபேற்றறியா' உணவகங்களின் சட்டவரைபுக்குள் வருவதனால் அது அவசியமாகிறது என்றாள்.
https://4tamilmedia.com/index.php/reviews/1960-2021-08-12-21-05-53