Tuesday, March 31, 2009

சீமானைச் சிறை வைத்தது என்ன நியாயம் ? - பாவாணன்

0 comments

தமிழகத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளும், கூட்டணி முடிவுகளும் ஓரளவுக்குத் தீர்மாகிவிட்டது. வாக்காளர்கள் நியமனங்களும், பிரச்சாரங்களும் இன்னமும் தொடங்கப்பட்டாத நிலையிலேயே, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கான எதிர்பிரச்சாரம் வலுத்து வருவதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுகவினதும், காங்கிரசினதும், ஆதரவாளர்களாக இருந்தவர்களே இத்தகைய எதிர் பிரச்சாரத்தில் குதித்திருப்பது இந்தக் கூட்டணியின் தேர்தல் வெற்றிப்பிரச்சாரத்துக்குச் சற்றுச் சவாலாகவே தென்படுகிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆடிய நாடகமே இந்த அதிருப்பதி நிலை தோன்றக் காரணமெனச் சொல்லப்படுகிறது.

ஈழத்தமிழர் போராட்டதை ஆதரித்துப் பேசிய, தமிழுணர்வாளர், இயக்குனர் சீமானை, கொளத்தூர் மணி, ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், திமுகத் தலைவர் கருணாநிதியை நேசித்த பாவாணன், காங்கிரசிலிருந்து விலகிய தமிழருவி மணியன் ஆகியோர், இக்கட்சிகளின் நடவடிக்கைகளை, மேடைகளில் மிக்கக்கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இவர்களது இந்த விமர்சன உரைகளுக்குப் பலத்த ஆதரவும் கிடைக்கின்றது.

அன்மையில் நடந்த நிகழ்வொன்றில் புதுக் கோட்டைப் பாவாணன் திமுக, காங்கிரஸ் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துப்பேசினார். சீமானைச் சிறையிலடைத்தது என்ன நியாயம் எனஆவேசமாக குரல்கொடுத்தார்.

அந்த உரையை முழுமையாகக் கேட்க:

உங்கள் பதிவுகளை இங்கே இணைத்து விட்டீர்களா?

Monday, March 30, 2009

ரியாலிட்டி ஷோக்களின் உண்மை நிலை என்ன?

0 comments
குறிப்பிட்ட காலங்களுக்குள் தமிழ்த் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்திருக்கும் , நிகழ்ச்சிதான் ' ரியாலிட்டி ஷோ '. எல்லாத் தொலைக்காட்சிகளும், ஏதோ ஒரு பெயரில், ஏறக்குறைய ஒரே மாதிரியான ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றை நடத்திக்கொண்டிருக்கின்றன.

இந்நிகழ்ச்சிகளின் பெயர்களும், நடத்தும் நிறுவனங்களும் மட்டுமே வேறாக இருக்கும். மற்றும் படி நிகழ்ச்சி உள்ளடக்கத்தில் இருந்து, பங்குகொள்ளும் கலைஞர்கள் வரை பலவற்றில் மாற்றம் ஏதுமிருப்பதில்லை. இதற்கு வரும் பிரபலங்களிலும் பெரிதும் மாற்றம் இருப்பதில்லை.
அதைவிடக் கொடுமை என்னன்னா, அவங்க அந்நிகழ்ச்சியைப் பாராட்டிப்பேசும் வசனங்கள் கூட பெரிதாக மாறியிருப்பதில்லை. ' இந்த மாதிரி நிகழ்ச்சி வேறெதுவுமெ இல்லையென்பார்'.. அதையே இரு வாரங்களுக்கு முன் மற்றொரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியிலும் சொல்லி இருப்பார்.

' என்ன கொடுமை சரவணா..' என எண்ணுகின்றீர்களா?. அல்லது இதன் சாதக பாதகங்கள் பற்றி யோசித்திருக்கின்றீர்களா? எதுவாயினும் உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். இருவாரங்களின் நிறைவில் இங்கு பகிரப்படும் கருத்துக்களினையும் உள்ளடக்கி, உரியவர்கள் சிலரது கருத்துக்களையும் இணைத்து, உண்மைநிலை காண்போம்.

எங்கே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் பார்ப்போம்!

Sunday, March 29, 2009

வணங்கா மண் ( வன்னிக்கு இலண்டனிலிருந்து உதவிக் கப்பல்)

0 comments

வணங்கா மண். வன்னியில் மனிதப் பேரவலத்தக்குள் சிக்குண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்களுக்கு, மனிதாய உதவிகள் சுமந்து, பிரித்தானியாவில் இருந்து வன்னி நிலம் நோக்கிச் செல்லவிருக்கும் உதவிக்கப்பலுக்கு உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்மக்கள் உதவி வருகின்றார்கள்.

இந்தச் செயற்திட்டம் குறித்து அதன் அமைப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் திரு: மூர்த்தி அவர்களுடனான சந்திப்பு
ஒலி,ஒளி வடிவங்களில் காண்க

Saturday, March 28, 2009

தமிழக சமகால அரசியல் மீதான விமர்சனம் - தமிழருவி மணியன்

1 comments

சென்னை மயிலை மாங்கொல்லையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில்,ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த 16 தியாகிகளின் படத்திறப்பு விழா, வீர வணக்க மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டில் பெரும்திரளான தமிழர்களும், பல்வேறு அமைப்பாளர்களும், பேச்சாளர்களும், கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில் தமிழகத்தின் சமகால அரசியற்கட்சிகள் மீதான தமிழருவி மணியனின் சிறிப்புரையைக் கானொளியில் காண்க

Thursday, March 26, 2009

காதலில் விழாத விஜய்காந்

1 commentsதமிழகத்தில் சென்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளாவிடினும், திமுக, அதிமுக, ஆகிய இரு கட்சிகளினும் பல்லாயிரக் கணக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுமளவிற்குத் தேறியிருந்தது. இது திமுக, அதிமுக, ஆகிய இரு கட்சிகளினாலும் துன்பப்பட்ட மக்கள் தேடிய புதிய விருப்பத்தில் தேமுதிகவிற்குக் கிடைத்த வாக்குக்களாகவும் இருக்கலாம். அல்லது விஜய்காந்தின் பிரச்சாரத்திற்குக் கிடைத்த வெற்றியாகவும் இருக்கலாம். எதுவாயினும், தேமுதிகவின் இந்த வெற்றி குறித்து திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், ஆகிய பெருங்கட்சிகள் அப்போது பெரிதும் அலட்டிக் கொள்ளாத மாதிரி நடந்த போதும், அவர்களின் அடிவயிற்றில் கிலிகொள்ள வைத்ததென்னவோ உண்மைதான்.

அதனாற்தான் இம்முறை தேர்தலில் விஜய்காந்தின் தேமுதிகவினைத் தங்கள் கூட்டுக்களிலல் சேர்த்துக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் கொண்டிருந்தன.

தொடர்ந்து வாசிக்க

Wednesday, March 25, 2009

தமிழகத்தில் காங்கிரசுக்கெதிரான பிரச்சாரம் வலுக்கிறது

2 comments
தமிழகத்தில் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரசுக்கெதிரான பிரச்சாரங்கள் வலுக்கின்றன என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்களிலும், அரசியற்கட்சிகள் அனைத்தும் தற்போது மும்மரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில், அவைகள் முடிந்து வேட்பாளர் நியமனங்களும், தேர்தற் பிரச்சாரங்களும் தொடங்கிவிடும்.
இந்நிலையில், வழமைக்கு மாறாக இம்முறை பல்வேறு பொது அமைப்புக்களும், தேர்தலில் கலந்து கொள்ளாத அரசியல் அமைப்புக்களும், அரசியற்கட்சிகளுக்கெதிரான பிரச்சாரப் பரப்புரையை ஆரம்பித்து விட்டதாகத் தெரிய வருகிறது.

தொடர்ந்து வாசிக்க

Monday, March 23, 2009

பாடையில் தொண்டர்கள், மேடையில் தலைவர்கள்

1 comments

மரணவீட்டுக்கு வந்தவர்கள், ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிப்பார்கள். என்றுமில்லா அக்கறையோடு அளவாவுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொள்ளாது போய்விடுவார்கள்.ஏறக்குறைய இதே நிலையில் தான் தமிழகத்தில் அரசியற் கட்சிகளின் ஈழத்து எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் இன்றிருக்கின்றன. கடந்த மாதங்களில் ' இன்று தமிழமெங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக...' என்று ஏதாவது ஒரு போராட்டத்தைத் தினமும் ஒரு கட்சி நடத்திக்கொண்டிருந்தது.

தினமும் மற்றக்கட்சிகளிடமிருந்து மாறுபட்டுத் தெரிய வேண்டுமென்பதற்காகவே புதிய புதிய வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டம் நடத்துவதற்குரிய வடிவத்தை உட்கார்ந்து யோசிப்பாங்களோ என எண்ணும் வகையில், புதுப் புது வடிவங்களில் போராட்டங்கள் நடந்தன.

தொடர்ந்து வாசிக்க

Friday, March 20, 2009

'வணங்கா மண்' கப்பலுக்கான உணவுப் பொருட்களை பெரும் உற்சாகத்துடன் வழங்கும் பிரித்தானியா மக்கள்

0 comments
தாயகத்தில் வாழும் ஈழத்தமிழமக்களின் நல வாழ்வை, சர்வதேச சமூகம் கண்டுகொள்ளா நிலையில் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழமக்கள் தமது கடமையெனக் கருதி, வன்னியி நிலம் வாழ் மக்களுக்கான உணவப் பொருட்கள், மருத்துவப் பொரட்கள் என்பனவற்றை, கப்பல் மூலம் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மிகத்துரிதமாக பிரிர்தானியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும்

Thursday, March 19, 2009

பிரித்தானியத் தொலைக்காட்சியில் சிறிலங்காப் பிரச்சனை குறித்த கருத்தியல் விவாதம்.

1 comments
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக, பிரித்தானியாவின் PressTV தொலைக்காட்சியின் Forum நிகழ்ச்சியில் பேசப்பட்டிருக்கிறது. பல்வேறு பிரச்சனைகள் குறித்த கருத்தியல் விவாதமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 10ந் திகதி நடைபெற்ற Forum நிகழ்ச்சியிலே இவ்விவாதம் நடைபெற்றிருக்கிறது. அதனைக் கீழே காணலாம். Jeremy Corbyn தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில்,

Douglas Wickramaratne
Nominee Srilankan Embassy London

Suren Surendiran
Spokesman, British Tamil Forum

Robert Evans
Labour Mep

Lord Nasby
Conservative Peer ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியைக் காண இணைப்பை அழுத்துங்கள்

Wednesday, March 18, 2009

ஜிமெலினுள் இருந்த வாறே ஹொட்மெயிலை பாவிப்பது எப்படி?

0 comments
அண்மையில் Microsoft ஹாட்மெயிலினுள் POP3 வசதியை மேம்படுத்தியது. இதனால் எங்கிருந்தும் ஹொட்மெயிலை பாவிக்கலாம். ஏன் உங்களுக்கு பிடித்தமான ஜிமெலினுள் இருந்த வாறே ஹாட்மெயிலையும் பாவிக்கலாம். அதற்கு இங்கே சென்று கூறப்பட்டிருக்கும் வழிகளை தொடருங்கள்.

இணைப்பு

தமிழகத் தேர்தல்களத்தில் ஈழப்பிரச்சனை

1 commentsதமிழகத்தில்
சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில், ஈழப்பிரச்சனையும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது இப்போதுதான் முதல் முறையாக நடப்பது அல்ல. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் ஈழப்பிரச்சனை, தமிழகத் தேர்தல் களங்களில் சற்று ஒலித்த விடயம்தான்.

ஆனாலும் இம்முறை இதன் பிரதிபலிப்புச் சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை காலமும் அரசியற் கட்சித் தலைவர்களே, தங்கள் கட்சி அரசியலுக்காக ஈழத் தமிழர் பிர்ச்சரனையைப் பேசியிருக்கின்றார்கள். ஆனால் இம்முறை முதன் முதலாக ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்தியத் தலையீடு, தமிழக அரசியற் தலைவர்களின் அனுகுமுறை, என்பன குறித்து மக்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

தொடர்ந்து வாசிக்க

Monday, March 16, 2009

சாவிலும் எழுவோம்! ஜெனீவாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு

0 comments
இனவெறி சிங்கள அரசின் வல்லாதிக்கப் பிடியில் இருந்து ஈழத் தமிழினம் பிரிந்து சென்று தனி அரசு அமைத்திட அனைத்துலக சமூகமே அங்கீகாரம் வழங்கு! எனும் சுவிற்சர்லாந்து ஜெனிவா ஐ.நாவுக்கு முன்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வின் நேரடி

ஒளிபரப்பைஇங்கே காணலாம்.

ஊடகவியலாளர் வித்தியாதரனின் கைதுக்கான உண்மைக் காரணம் ?

0 comments

அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியின் 'டேட் லைன்' என்ற பெட்டக நிகழ்ச்சியின் நிருபர், ந.வித்தியாதரன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோது கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்தவாறு பதில்களை வழங்கினார். இச் செவ்வி நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. சிறிலங்கா அரசின் உண்மை உருவை வெளிப்படுத்தும் வகையில் முக்கியதொரு ஆவணமாக அமைந்து வருகிறது.

இந்நிகழச்சி ஒளிபரப்பானபின் இதன் இணையத்தளத்தில் பார்க்க முடிகின்ற அந்த செவ்வியம், அது தொடர்பாக எழுதப்படுகின்ற பார்வையாளர் குறிப்புக்களும் (இப் பத்தி எழுதப்படும் போது, 500க்கும் அதிகமான கமென்ட்டுக்கள் எழுதப்பட்டுள்ளன), செவ்வியில் சொல்லாத அல்லது மறைமுகச் சொல்லுகின்ற பல விடயங்களை எடுத்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Saturday, March 14, 2009

விடுதலைப்புலிகளின் சமராய்வுப் பொறுப்பாளர் திரு.யோகியின் பேட்டி ஒலி வடிவம்

1 comments

சுதந்திரம் கோரும் தமிழ் ஈழ மக்களை, இடம் பெயரவைப்பதில் அக்கறை கொள்ளும் அனைத்துலகம், அந்த மக்களின் அபிலாசைகளை அறிந்து கொள்ள முற்பட்டிருக்கிறதா? விடுதலைப்புலிகளின் சமராய்வுப் பொறுப்பாளர் திரு.யோகி அவர்கள், புலிகளின் குரல் வானொலியில் வழங்கிய உரையில் பல நியாயபூர்வமான கேள்விகளை அனைத்துலகத்திடம் முன் வைக்கின்றார்.

ஈழத் தமிழ்மககளின் போராட்டத்தில் துரோகத் தனம் இழைத்து வரும் அனைத்துச் சக்திகளும் தொலைத்து விட்ட மனித நியாயங்களைச் சுட்டடிக் காட்டும் வகையில் அமைந்துள்ள அந்த உரையின் ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.

Thursday, March 12, 2009

வை.கோவும், பிரபாகரனும் வன்னியில் சந்தித்த போது..

2 comments
அன்மையில் வன்னிக் களமுனையில், தமிழகத்தின் முக்கிய அரசியற்கட்சித் தலைவர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகப் சிறிலங்கா படைதரப்பின் தகவல்களினடிப்படையில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக மதிமுக பொதுச் செயலர் வை.கோ அவர்களும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் நின்றெடுத்த படத்தினையும் வெளியிட்டிருந்தார்கள். இது எதோ சிறிலங்காப்படைகள் தற்போது, தாம் புதிதாகக் கண்டுபிடித்த செய்தியாகப் பரப்புரை செய்தார்கள். Link


முழு வீடியோ இணைப்பு இங்கே

Wednesday, March 11, 2009

சீமான் நெல்லையில் ஆற்றிய எழுச்சி உரை (வீடியோ)

1 comments

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருக்கும், இயக்குனர், தமிழுணர்வாளர் சீமான் காவற்துறையிடம் தாமாகச் சரணடைவதற்கு முன்னதாக நெல்லையில் மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய எழுச்சி உரையின் பகுதிகள்

Prof. Ganganath Disanayaka abducted by a white van

0 comments
An unidentified group abducted Prof. Ganganath Disanayaka, Sri Jayawardhanapura university academic, from his Maththegoda house around 7.30 PM today. The gang pasted a plaster on the mouth of his wife before the professor was abducted.

Monday, March 9, 2009

உண்ணாவிரத மேடையில் செல்வி: ஜெயலலிதா ஆற்றிய உரை

0 comments
இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும், எனக் கோரி இன்று சென்னை சேப்பாக்கம் அரச விருந்தினர் விடுதி முன்பாக உண்ணாவிரதமிருந்த அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா, உண்ணாவிரத மேடையில் ஆற்றிய உரையின் முழுவடிவம்:

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அன்புச் சகோதரர்
திரு. டி. ஜெயக்குமார் அவர்களே,
வரவேற்புரை ஆற்றிய தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. வி.பி. கலைராஜன் அவர்களே,
வாழ்த்துரை வழங்க உள்ள வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. சேகர்பாபு அவர்களே,
சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அன்புச் சகோதரர் தா. பாண்டியன் அவர்களே,
திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே, தோழமைக் கட்சித் தலைவர்களே,
வணக்கத்திற்குரிய பெரியோர்களே,
என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே,
இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக உள்ள இளம் சிங்கங்களே, வீராங்கனைகளே, பொதுமக்களே, உடன்பிறப்புகளே,
உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது கனிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து வாசிக்க

Saturday, March 7, 2009

வீரத்தமிழ்மகன் முருகதாசனின் இறுதி ஊர்வலம் லண்டனிலிருந்து நேரடி ஒளிபரப்பு

0 comments
சுவிற்சர்லாந்தில் ஜெனிவாவிலுள்ள ஐ.நா சபை முன்பாக, ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கோரி, தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த வீரத்தமிழ்மகன் முருகதாசனின் இறுதி ஊர்வலம், இலண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை

இங்கே காணலாம்.

Friday, March 6, 2009

இதுவரை பயன்படுத்தியிராத Microsoft இன் சில இணைய சேவைகள்

0 comments
Windows Live - இல் நீங்கள் ஒரு கணக்கை திறந்திருந்தால் குறிப்பிட்ட Live ID ஐ பயன்படுத்தி Live இன் அனைத்து சேவகளையும் உபயோகிக்கலாம்.

Windows Live SkyDrive - முற்றும் இலவசமான 25 GB அளவுக்கு ஒன்லைன் storage சேவை வழங்குகின்றது

மேலும்

Thursday, March 5, 2009

இந்தியத் தேர்தலின் தமிழக களத்தில் ஈழப்பிரச்சனை

1 comments
அன்மைக்காலமாக தமிழகத்தில் எழுச்சி கண்டிருக்கும் ஈழத்தமிழர் போராட்டத்துக்கான ஆதரவு எழுச்சி நிலை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தேர்தல் களத்தில் என்னாகும் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..? உங்கள் கருத்தை இங்கே சொல்லுங்கள்

Monday, March 2, 2009

டுவிட்டரில் இணைந்தது Google

1 comments

தற்போது இணையத்தில் டுவிட்டர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அது கூகிளையும் விட்டு விடவில்லை. எவளவு பெரிய கிங்காக இருந்தாலும் டுவிட்டரை கூகிளால் அலட்சியம் செய்ய முடியவில்லை. மேலும்