Friday, February 27, 2009

வன்னி வான்பரப்பில் சிறிலங்கா விமானப்படையின் தாக்குதல் விமானம் சுட்டு விழுத்தப்பட்டுள்ளது

1 comments

வன்னி வான்பரப்பில் பொது மக்கள் மீ தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இன்று முற்பகலில் , வான் தாக்குதல் நடாத்த வந்த விமானத்தின் மீது தரையிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணையால் நடத்தப்பட்ட தாக்குதலில் விமானம் விழுத்தப்பட்டுள்ளதாகச் முந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் எரிந்தவாறு விழுந்ததைப் பொது மக்கள் கண்டதாகவும் அறியப்படுகிறது. இது குறித்த விபரங்கள் ஏதும் இன்னமும் விடுதலைப்புலிகளாலோ, சிறிலங்கா அரச தரப்பாலோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள் விரைவில்...

Sunday, February 22, 2009

தொடரும் தமிழக வக்கீல்கள் போராட்டம் பிற மாநிலங்களுக்கும் விரிவுபெறலாம்

0 comments

தமிழகத்தில் வக்கீல்களுக்கும், காவற்துறையினருக்குமான மோதல் அரசியல் முக்கியத்துவம் மிக்கப் பிரச்சனையாக மாறிவருகிறது. ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கோரி முத்துக்குமார் தீக்குளித்த நாள் முதலாக பல்வேறு போராட்டங்களைத் தமிழகத்தில் வக்கீல்கள் முன்னெடுத்து வந்தனர்.

இந்தப் போராட்டங்களைத் திசை திருப்பும் வகையில், சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலை முன் வைத்து வக்கீல்கள் மீது காவற்துறை ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் வக்கீல்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த உத்தரவு உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டுமென்றும், இல்லையென்றால் இன்று தடையை மீறி உள் நுழையும் போராட்டம் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு ( தமிழகத்தின் இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகளின் ஆடீயோ இணைப்பு )

Friday, February 13, 2009

விடுதலையெனும் பெயரில் சிறைப்படுத்தப்படும் வன்னி மக்கள்

0 comments


வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு வரும் தமிழ்மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பதாக சிறிலங்கா அரசால் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் தற்போது இவ் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டிருக்கும் தமிழ் மக்களை, 'நலன்புரி முகாம்கள்' எனும் பெயரில் நீண்ட காலத்துக்குச் தனிமைச்சிறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாக அறிய முடிகிறது. இந்நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

மேலும் செய்திகளுக்கு

Thursday, February 12, 2009

ஐ.நா. சபையின் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளிப்பு

1 comments



சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா சபை அலுவலகத்துக்கு முன்பாக, ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்திரப்பதாகச் சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவில் தொடர்ச்சியாக ஈழத் தமிழ் மக்கள் மேல் நடத்தபட்டுவரும் இனப்படுகொலைகளைக் ஐ.நா சபை முதல், அனைத்துலகமும் கண்டும் காணாதிருக்கும் நிலையைக் கண்டித்தே அவர் தீக்குளித்திருப்பதாக அறியப்படுகிறது.

இலங்கைக்கு வெளியே ஈழம் உருவாகுதல் சாத்தியமா..?

0 comments
தமிழீழக் கோரிக்கை , இன்று ஈழத் தமிழ் மக்களுக்குமப்பால் மேலும் பல இடங்களிலும் பேசப்படுகின்ற விடயமாகவுள்ளது. அரசியல் உயர்பீடங்களிலிருந்து இணையக் குழுமங்கள் வரை உரையாடப்படுகின்றன. இந்த உரையாடல்களில் பேசப்படும் விடயங்கள் பல ஈழத்தமிழர்களுக்கு ஏற்புடையதாகவும் , எதிரானதாகவும் இருந்து வருகின்றன. சில கருத்துக்கள் புதிய சிந்தனையாகவும், இன்னும் சில கருத்துக்கள் ஈழப்பிரச்சினை தொடங்கிய காலந்தொட்டுக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கருத்துக்களாகவும் இருக்கின்றன. இதைவிட வேறு சிலகருத்துக்கள் பல உள் நோக்கம் கொண்டவையாகவும் இருக்கின்றன.

மன்றத்தில் உரையாட

Thursday, February 5, 2009

சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கல்லெறி

3 comments


சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், பிரேமதாச ஸ்ரேடியத்தில் இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சற்றுமுன் இந்திய வீர்களை நோக்கிக் பார்ரவையாளர்கள் பகுதியில் இருந்து கல்லெறியப்பட்டதாகவும், அதனை இந்தி அணியின் தலைவர் டோனி நடுவரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து விளையாட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய வீர்ரகள் சிலர் மைதானத்தை விட்டு விலகியதாகவும், நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு

Wednesday, February 4, 2009

சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரிலுள்ள ஐ.நா சபை முன்பாக ஈழத்தமிழ் மக்கள் கடலெனத் திரண்டிருக்கின்றார்கள்.

1 comments
ஜெனிவா நகரிலிருந்து நேடியாத் தொகுக்கப்படும் செய்திகள்:
சிறிலங்கா அரசின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4ம் திகதியை, ஈழத்தமிழ்மக்கள் தங்கள் கரிநாளெனப் பிரகடனப்படுத்தி, சுவிற்சர்லாந்தின் ஜெனிவாநகரில் அமைந்துள்ள ஐ.நா சபையின் முன்னாக, பல்லாயிரக்கணக்கில் கடலெனத் திரண்டெழுந்து தங்கள் உணர்வுபூர்வமான கண்டனங்களைப் பேரெழுச்சியாகத் தந்நத வண்ணமிருக்கின்றார்கள். காலையில் இருந்தே இந்நிகழ்வு நடைபெறும் ஐ.நா முன்றலை நோக்கி பெருமளவில் திரண்டவண்ணமேயிருந்தார்கள்.

Tuesday, February 3, 2009

வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்

2 comments

வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

மேலும் வாசிக்க

Monday, February 2, 2009

ஐயோ...! இந்தியா நாசமாப் போக...

1 comments




"ஐயோ...! இந்தியா நாசமாப் போக.."

இந்த வாசகத்தைக் கேட்டதும் உங்களுக்குப் பதற்றம் வருகிறதா..? பெருங்குரலெடுத்து ஒப்பாரிவைத்த அந்தப் பெண் திடீரென இப்படிக் கத்தினாள். சற்றும் எதிர் பார்க்கவில்லை ஆனால் அந்த அபலைத் தாயின் கதறலால் அதிர்ந்து போனேன். ஈழத்து மக்கள் பலரின் மனதிலும், இந்திய மத்திய அரசு ஈழத் தமிழ்மக்கள் குறித்துச் செயற்படும் விதம் பற்றி அதிருப்தியான மனநிலை காணப்பட்டாலும் கூட, யாரும் வாய்விட்டுச் சொல்லாத வாசகங்கள் அவை. ஆனால் வன்னியிலிருந்து கதறியழுத ஒரு தாயின் வாயிலிருந்து வந்து விழுந்த வாசகங்கள் இவை.

தொடர்ந்து வாசிக்க