Sunday, December 28, 2008

சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றம். அம்பலமாக்கியது வீடியோப்பதிவு

0 comments

சிங்கள இனவெறி இராணுவத்தின் வக்கிர உச்சமாக, போரில் களப்பலியான பெண் போராளிகளை நிர்வாணப்படுத்திப் பாலியல் வக்கிரம் செய்த பின் அதை காட்சிப்பதிவு செய்து மகிழ்ந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கிறது. எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வீடியோப் பதிவில் மனதை அதிரவைக்கும் அந்தக் கொடூரம் பதிவாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனோம். பெண் போராளிகளை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்த அந்தக் காட்சிப்பதிவினை வெளியிட எமது மனச்சாட்சி இடந்தரவில்லை. ஆயினும் இந்தப் போரியற் குற்றத்தை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டிய ஊடக தார்மீக அவசியம் கருதி அக்காட்சிப் படிமத்தில் சில படங்களைத் தணிக்கை செய்து வெளியிடுகின்றோம். விரிவான செய்திகளுக்கு

Friday, December 19, 2008

திரைப்பட இயக்குனர் சீமான் மீண்டும் கைது

4 comments
இயக்குனர் சீமான் இன்று முற் பகல் இரண்டாவது தடவையாக தமிழ காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த விரிவான செய்திகள், ஆடியோ செய்தி காண

Tuesday, November 25, 2008

சிறிலங்கா அரசைப் போர்நிறுத்தத்துக்கு அழைத்துவர யாரால் முடியும்..?

1 comments

இந்திய மத்திய அரசு போர்நிறுத்தத்துக்கு வலியுறுத்து. உள்நாட்டுப் போருக்கு அரசியல் தீர்வு காண யுத்த நிறுத்தம் அவசியம் என் அமெரிக்கப்பிரதிநிதி தெரிவிப்பு. தமழ்மக்கள் மீதான போரை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் அறிவிப்பு. போரில் ஈடுபடும் இரு பகுதியினரும் போரை நிறுத்தி அரசியல் ரீதியான தீர்வுக்கு முயலவேண்டும் என ஐ.நா பிரதிநிதி அறிவிப்பு. இவ்வாறான தலைப்புச் செய்திகள் பல,

முழுமையாக வாசிக்க

Wednesday, November 19, 2008

தமிழ்த்திரையுலகின் மூத்த நடிகர் எம். என் நம்பியார் மறைந்தார்

0 comments

தமிழத்திரையுலகின் முதுபெரும் நடிகர் எம் என் நம்பியார் மறைந்தார். உடல்நலக்குறைவாக இருந்த அவர் இன்று பிற்பகல் மறைந்தார். கோபாலபுரத்தில் அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக கோபலபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மேலதிக செய்திகள்

Saturday, November 15, 2008

சுவிஸ் தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பபின் "உண்மைக்காய் எழுவோம்" நேரடி வீடியோ ஒளிபரப்பு

0 comments

சுவிற்சர்லாந்து தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வு தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது! சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் முன்நின்று ஈழத்தின் இளைய தலைமுறை இந்த போராட்டத்தினை தமது கைகளில் எடுத்திருக்கிறோம்! என அறுதியிட்டு, உறுதியிட்டு உரக்க உலகுக்கு சொல்லுகின்ற ஒரு அடையாளமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது! அந்தளவுக்கு ஈழத்தமிழர்களுடைய இன்னல்களை இந்நாட்டின் மூன்று மொழிகளிலும், தமிழ் இளையோர் அமைப்பினர் (ஜேர்மன், பிரான்சு, இத்தாலி) விளக்கி உரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்!

நேரடியான வீடியோ ஒளிபரப்பைக்காண

Thursday, November 13, 2008

Gmail இன் உள்ளே வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையை ஆரம்பித்தது கூகுள்.

0 comments
பல புதுமைகளின் மூலம் எப்போதும் வாடிக்கையாளரை அசத்தும் கூகுள் புதிதாக Gmail கணக்கின் உள்ளே video மற்றும் audio அரட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் அறிய

Wednesday, November 12, 2008

தமிழர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு.பழ.நெடுமாறன் கைது (படங்கள் ஆடியோ செய்தி இணைக்கப்பட்டுள்ளன)

0 comments














தமிழர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு.பழ நெடுமாறன் இன்று காலை சென்னையில் கைதாகினார்.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய். இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் செய்யாதே எனும் கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த போதே தமிழக காவல்துறையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக செய்திகள்

Monday, November 10, 2008

தமிழீழம் அமைவதை எந்தக் காலத்திலும் இநதிய அரசு விரும்பவில்லை - தொல்.திருமாவளவன்.

0 comments

சென்னைச் சேப்பாக்கம் மைதானத்தில், 09.11.08 அன்று, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சின்னத்திரைக் கலைஞர்கள் நடாத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தமிழீழம் அமைவதை எப்பொழுதும் இந்திய அரசு விரும்பவில்லை. அதற்காகவே இந்தியாவும், அமெரிக்காவும், அவற்றைப் பின்தொடரும் ஏனைய நாடுகளும் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டார். அவரது முழுமையான உரையின் ஒலிவடிவை இங்கே கேட்கலாம்

சின்னத்திரைக் கலைஞர்களின் உண்ணாநிலைப் போராட்ட ஒளிப்பதிவு

0 comments
நேற்று 09.11.08 ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். சின்னத்திரைக் கலைஞர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடாத்தியிருந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன், இயக்குனர் செல்வமணியுட்பட மற்றும் பலரின் உரைகளின் பகுதியடங்கிய பிரத்தியேக

வீடியோத் தொகுப்பு

Saturday, November 8, 2008

நீங்கள் நினைக்கும் நாங்கள் உங்களை போல் அல்ல!

0 comments
உங்கள் வீடுகளில்
3 மணி நேர மின்வெட்டாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

உங்கள் தெருக்களில் உள்ள குழாய்களில்
நல்ல குடிநீர் வருவதில்லையாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

உங்கள் கிராமங்களில்
உள்ள தெருக்கள் குன்றும் குழியுமாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

உங்கள் நகரங்களில்
வாகன நெரிசல் அதிகமாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக
50 ரூபாய் எரியவைக்கும்
ஒரு தீப்பெட்டிக்கும் ,

ஆறடி ஆழத்தில்
தோண்டிய பின் கிடைக்கும்
அரைச்சொட்டு தண்ணீருக்கும்,

பதுங்கு குழி அமைப்பதற்கு
வேறிடமில்லாமல் கைவைக்கும்
மண் பாதை ஹைவேக்களுக்கும்

சைக்கிள்களையும், செல்ல நாய்க்குட்டிகளையும்
ஏற்றிச்செல்லவதற்காகவாவது, இடம் தரும் மாட்டுவண்டிகளுக்குமே
நாம் இப்போது அதிகம் முயற்சிக்கிறோம்!

ஸாரா

இங்கிருந்து எடுக்கப்பட்டது.

அனுமதித்த ஸாராவுக்கு நன்றி.

யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை - ஒரு ஒளிப்பதிவு சாட்சியம்

0 comments
வாசல்கள் அடைக்கப்பட்ட யாழ் குடாநாட்டிலிருந்து. மின்னலாய் பதிவு செய்திருக்கின்றது தொலைக்காட்சி ஊடகமொன்று அங்குள்ள மக்களின் இன்றைய நிலைதான் என்ன? தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் புதிய முயற்சி இது எந்தவொரு ஊடகமோ புகமுடியாத குடாநாட்டில் துணிவுடன் இறங்கி மக்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்திய ஊடகத்தினருக்கு எமது பாராட்டுக்கள்.

நன்றி - Yathra

நன்றி - Ya TV

இங்கே ஒளிப்பதிவு சாட்சியம்

Monday, October 27, 2008

ஈழத்தமிழர் குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கிய உறுதி மொழிகள்.(ஸ்பெசல் சர்வே)

1 comments

நம்பிக்கையானது.
நடைமுறைச் சாத்தியமற்றது.
வெற்றுத்தனமானது
சூழ்ச்சிமிக்கது.

நீங்களும் வாக்களிக்க 4tamilmedia.com இன் வாக்கெடுப்பு பகுதிக்கு (வல‌ப்பக்கம்) செல்லுங்கள்.

Friday, October 24, 2008

சீமான், அமீர் கைதை கண்டித்து நாளை திரைப்படங்கள் அனைத்தும் ரத்து (ஓடியோ செய்தி இணைப்பு)

4 comments
தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் சற்றுமுன்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சமயத்திலேயே, வீட்டில் வைத்து இக்கைது நடைபெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சீமான், மற்றும் அமீர் ஆகியோரின் கைதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து திரையரங்குகளும்

மேலும்

திரைப்பட இயக்குனரும், தமிழார்வலருமான இயக்குநர் சீமான் எந்நேரமும் கைது செய்யப்படலாம்

0 comments
தற்போது வந்த செய்தி:தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் எந்நேரமும் கைது செய்யப்படலாம். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முகன்னால் செய்தி அறிந்த திரைப்பட இயக்குனர்கள், துறைசார்கலைஞர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் குழுமியுள்ளதாக, அங்கிருந்து எமது செய்தியாளர் அறியத்தருகின்றார். ஊடகவியலாளர்கள் , காவற்துறைசார்ந்தோரும் குழுமியுள்ளதாகவும், தற்போது சீமான் வீட்டில் இல்லை. வெளியே சென்றுள்ள அவர் வீடு திரும்பும் சமயத்தில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், .

மேலும் விரிவாக

ஈழத்தமிழருக்காகத் தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிவரை கைகோர்த்துக் களமிறங்கினர். (ஓடியோ இணைப்பு)

0 comments
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தற்போது கொட்டும் மழையை துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்டு, மழை வெள்ளமோ, மக்கள் வெள்ளமோ என என்னும் வகையில், பெருமளவான மக்களுடன், உணர்வு பூர்வமாக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தக் களத்திலிருந்து எமது செய்தியாளர் தரும் குரல்வழிச்செய்தி

ஓடியோ இணைப்புக்கு

Thursday, October 23, 2008

தனித் தமிழ் நாடு அமையுமா? : கைதுக்கு முன் கண்ணப்பன் சிறப்புப் பேட்டி

0 comments

கைதுக்கு முன் கண்ணப்பன் சிறப்புப் பேட்டி - நமது சிறப்புச் செய்தியாளர். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். கைது சம்பவத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக கண்ணப்பன்

நமக்களித்த சிறப்புப் பேட்டி:

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கைது.

1 comments
ஈழத்தமிழர் பிரச்சனை வலியுறுத்தும் வகையில் இன்று தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரயில் மறிப்புப் போராட்டத்தில், விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். மேலதிக விபரங்கள் ஆடியோச் செய்திகளை இங்கே காணலாம்

Saturday, October 18, 2008

கலைஞர் பார்த்து கண் கலங்கிய ஈழத்துக் கண்ணீர் வீடியோ

0 comments

தமிழக முதலமைச்சர் கலைஞர் பார்துக் கலங்கிய ஈழத்துக் கண்ணீர் சீ.டி குறித்து, குமுதம் ரிப்போட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் என்ன இருந்நது எனும் விபரஙகளையும் வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கும்,
வீடியோவைக் காணவும்

Thursday, October 16, 2008

மக்கள் போராட்டம் பிறந்தது, மானாட மயிலாட மறந்தது.

1 comments

ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்தாற் போல் திடீர் அக்கறையும் பாசமும் கொண்டு தமிழக அரசியற்கட்சிகள் களங் குதித்திருப்பது, கனவு போலத் தோன்றினாலும்இதுவொன்றும் புதுமையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர் மீதான பாசமும் பரிவும்.

ஆனால் அதை எப்போதும் ஒரேமாதிரியாக வெளிப்படுத்த விடுவதில்லை, தலைமையேற்கும் அரசியற்கட்சிகள். தமக்குச் சார்ப்பான சாதகமான, இலயிப்புக்களுக்கு பாமரர்களைத் தாளம் போட வைப்பன அவை. அதே அரசியற் கட்சிகள் பாமரரின் நாடிபிடிக்கத் தேடிவரும் நேரம் தேர்தல்காலமொன்றுதான்.

தொடர்ந்து வாசிக்க

Monday, October 6, 2008

திமுக ஈழஆதரவுப் பொதுக் கூட்டம் - வீடியோத்தொகுப்பு

1 comments











06.10.08 சென்னை மயிலாப்பூரில் திராவிடமுன்னேற்றக்கழகம் நடாத்திய ஈழ ஆதரவுப் பொதுக் கூட்டம் தொடர்பான வீடியோத் தொகுப்பு, மற்றும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உரை ஒலித் தொகுப்பு என்பனவற்றைக் காண

Friday, October 3, 2008

கம்யூனிஸ்ட் கட்சியின் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்ட வீடியோத் தொகுப்பு பகுதி 1

0 comments











02.10.08 சென்னை சேப்பாக்கத்தில், ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய ஆதரவுப்போராட்டத்தின் சில துளிகள் வீடியோ ஒளிப்பதிவில்.

Video Link


Thursday, October 2, 2008

மூன்று தசாப்தங்களாக ஒடுக்கப்படும் ஈழத்தமிழ்மக்களுக்காக இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். - மத்திய குழு உறுப்பினர் டி. ராஜா

2 comments
மகாத்மா காந்தி நினைவு நாளான இன்று தமிழகமெங்கும், ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடாத்தப் போவதாக, அகில இந்திய கம்யூனிஷ்ட் கட்சி அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜய்காந் ஆகியோரும் மேலும் பல கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி மாநிலத்தின் பல் வேறு பகுதிகளிலும் இப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சேப்பாக்கத்திலிருந்து நேரடி ஆடியோ செய்தியைக் கேட்க

Tuesday, September 30, 2008

அனைத்து இணைப்பிற்கும் ஒரே URL (sharetabs.com)

1 comments
நீங்கள் இணையத்தில் உலாவரும் போது பல தளங்களின் இணைப்புக்களை tab இல் திறந்து பார்க்கிறீர்கள். அவற்றை உடனே நண்பருக்கு அனுப்பி அவரும் பயன் அடைய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நண்பருக்கோ நேரப்பற்றாக்குறை ஒவ்வொரு இணைப்பையும் ஒவ்வொன்றாக உலாவியில் திறந்து பார்க்க சாத்தியம் கவலை வேண்டாம் நீங்கள் விசிட் செய்த எல்லா இணைப்புக்களையும் ஒருசேர ஒரே இணைப்பாக அனுப்பும் வசதியுடன் இருக்கவே இருக்கிறது sharetabs.com

மேலும்

Sunday, September 28, 2008

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு

0 comments
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அகில இந்திய கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.

வீடியோ இணைப்புக்கு

Thursday, September 25, 2008

மானாட மயிலாடுகிறது தமிழகம், தான் வாழப் போராடுகிறது தமிழீழம்

1 comments


தமிழர்கள் மீது தனக்குப் பரிவு அதிகம் என்பதைப் பறைசாற்ற, பந்தாவாக ஐ.நாவில் தமிழில் உரையாற்றியிருக்கின்றார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இது ஐ.நாவில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அரசாங்க முதல்வர்களுக்கும் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தலைமுறைக் கணக்கில் சிங்கள்ப் பேரினவாதிகளின் பேதம்நிறை இப் பெரும்பாசம் பாதியும் உண்மையில்லை எனப் பலமாகவே புரியும். தொடர்ந்து வாசியுங்க

Wednesday, September 24, 2008

ஐ.நாவின் மெளனத்தை அமைதியாகக் கண்டித்தனர்

0 comments














சிறிலங்கா அரசால், தம் சொந்த மண்ணில் நிர்க்கதியாக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களின் துயரினைப் பேரவலத்தைக் கண்டும், மெளனித்திருக்கும், ஐ.நா சபையையும், சர்வதேச சமூகத்தையும், அமைதியாகக் கண்டித்தனர் ஆயிரமாய் திரண்ட தமிழீழமக்கள்..

மேலும் வாசிக்க, வீடியோச் செய்தியினைப் பார்க்க

Wednesday, September 17, 2008

ஈழத்தமிழருக்கான ஆதரவறிய மத்திய அரசு பொது வாக்கெடுப்பு நடத்தட்டும் - திருமாவளவன்

0 comments

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு, தமிழக மக்களிடம் எவ்விதம் நிறைந்திருக்கின்றதென்பதை பொது வாக்கெடுப்பின் மூலம் மத்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். மேலும் அறிய

Sunday, September 14, 2008

Google Chrome ஐ உபயோகித்து பார்க்க சில காரணங்கள்

1 comments
Google தனது Chrome எனும் புதிய இணைய உலாவியை அண்மையில் வெளியிட்டது. ஏனைய உலாவிகளை விட இது மேலும் அதிக வசதிகள் மற்றும் வேகம் கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்த உலாவியை நீங்களும் பரீட்சிர்த்து பார்க்க நிறைய காரணங்கள் உண்டு

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  • web search, web history, address bar ஆகியவற்றில் தட்டச்சு செய்ததும் தானகவே உங்களின் சொற்களிற்கேற்ப suggestions களை காட்டுதல். அனைத்து toolbar bookmark களை ஒரே பக்கத்தில் பார்க்க கூடிய வசதி. மேலும் அறிய

Friday, September 12, 2008

மலேசியாவில் வலைப்பதிவர் கைது.

1 comments

மலேசியாவில் பிரபல வலைப்பதிவர் ஒருவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டிருக்கின்றார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலதிக செய்திகளுக்கு

Monday, September 8, 2008

வவுனியா இராணுவ நிலைகள் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்.

0 comments

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் இன்று ஒன்பதாம் திகதி அதிகாலை வவுனியாவுக்கு அண்மையாக உள்ள சிறிலங்காப் படையினரின் நிலைகள் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

மூன்று விமானங்கள் ராடரில் தென்பட்டன. அதில் ஒரு விமானம் வவுனியாவுக்கு மேலாகப் பறந்து குண்டுகளை வீசியுள்ளது. இதன் பின்னர் புலிகள் வவுனியா முகாம்கள் மீது ஆட்லறி தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள் என்று இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சேத விபரங்கள் எவையும் இதுவரை தெரியவரவில்லை.பிந்திய தகவல்களுக்கு

Thursday, August 28, 2008

சங்கத்துச் சிங்கங்கள கும்முறாங்க

1 comments
சங்கத்துச் சிங்கங்கள இங்க கும்முறாங்க.

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிறது இச்சிறப்புக் கட்டுரை. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தின் ஆன்மீகக் குறியீடாக பல்வேறு நிலைகளிலும் பார்க்கப்டுகின்ற நல்லூர் குறித்த வரலாற்றுத் தகவல்கள், மற்றும் சமகாலப் பார்வை கொண்டதாக அமைகிறது இச் சிறப்புக்கட்டுரை.

மேலும் செய்திகளுக்கு :இங்கே

Saturday, August 16, 2008

இனிய ஆரம்பம்.

2 comments
14.08.2008 இல் இனிய ஆரம்பம்.

நன்றி.

Monday, August 11, 2008

ஒலிம்பிக் போட்டிகளில் இன்று

0 comments

ஒலிம்பிக் போட்டிகளில் நாளாந்தம் நடைபெறுபவற்றில் முக்கியமானவைகளை, தொகுப்பாகத் தொகுத்துத் தருகின்றோம். இன்றைய போட்டிகள் குறித்த தொகுப்புக்களில்,

ஆடவர் பிரிவிற்கான துப்பாக்கி குறி பார்த்து சுடும் போட்டி (Shooting 10m) மூலம் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்க்ப்பதக்கை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்தார் பிண்ட்ரா அபினாவ்! மொத்தம் 700.5 புள்ளிகளை பெற்று அவர் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். இந்தியாவின் சண்டிகாரை வதிவிடமாக கொண்ட பிந்த்ராவிற்கு 26 வயதுதான் ஆகிறது. கடந்த அதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட போதும் 7 வது நிலையே இவருக்கு கிடைத்தது. தனது பயிற்சியாலும், விடா முயற்சியாலும் அவருடைய தங்கப்பதக்க கனவு இம்முறை நனவாயிற்று! ஏற்கனவே 699.1 புள்ளிகளுடன் 2006 ற்கான உலக சாம்பியன்சிப் போட்டிகளில் முதலாவது இடத்தையும், 2005 ற்கான ஆசிய சாம்பியன்சிப் போட்டிகளில் 4 ம் இடத்தையும் அவர் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 4tamilmedia

இந்திய வீரருக்கு வாழ்த்துக்கள்

0 comments
உலக அரங்கில் தன் திறமையையும், தாய்நாட்டின் பெருமையையும், நிலைபெறச் செய்த, இந்தியாவின் பெருமைக்குரிய வீரர் அபினவ் பிந்த்ரா வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துப் பெருமிதம் கொள்கின்றோம்.

- 4tamilmedia Team

Saturday, August 9, 2008

இன்னும் சில தினங்களில்..

0 comments
இன்னும் சில தினங்களில், எமது சேவை முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இந்தத் தகவலையும் முகவரியையும், உங்கள் நண்பர்களுக்கும் அறியத்தாருங்கள். தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

4tamilmedia.com

ஒலிம்பிக் செய்திகளை இணைத்துள்ளோம்

0 comments
ஒலிம்பிக் விளையாட்டுக்களின் செய்திகளை, ஒலிம்பிக் செய்திகள் சிறப்புப்பகுதியில் காணலாம். இந்தச் சிறப்புப் பகுதியில், ஒலிம்பிக் குறித்த உங்கள் கருத்துக்களை கட்டுரைகளாகத் தர விரும்பின் info@4tamilmedia.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி

- 4tamilmedia Team

வாரமொரு வலைப்பதிவினை அறிமுகம் செய்கின்றோம்.

0 comments
இணையத்தில் புதிய வீச்சினைக் கொண்டிருக்கும் வலைப்பதிவுகளில், சிறப்பாகச் செயற்படும் வலைப்பதிவுகளை எழுதும் நண்பர்களுக்கு உற்சாகம் தரும் வகையில், அத்தகைய வலைப்பதிவுகளை, வாரமொன்றாக 4tamilmedia.com இல் அறிமுகம் செய்வதோடு, அவ்வலைப்பதிவினை அங்கும் வாசிக்க வகைசெய்துள்ளோம்.

info@4tamilmedia.com

புதிதாய் பிறந்தோம்.

1 comments
வளர்ந்து வரும் தகவற் தொழில்நுட்பத்துறையின் பெருவளர்ச்சி நுட்பங்களோடு, எமது மொழியில் உலகநடப்புக்களையும், மேலும்பலவற்றையும் உங்களுக்குத் தொகுத்துத் தர, மிக நல்ல செய்தியாளர்கள் குழுமத்துடன், இணையத்தில் வந்துள்ளோம். இத்தளம் தற்போது பரீட்சார்ந்த இணைப்பில் இருப்பதனால், இதன் நிறைகுறைகளை தயங்காமல் அறியத்தாருங்கள். மேலும் என்ன புதிய பகுதிகள் வேண்டுமென்பதையும் அறியத்தாருங்கள். சிறப்பாக இதன் சேவைகளை வடிவமைக்க அவை பேருதவியாக இருக்கும். உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்மக்களிடமிருந்து, உடனுக்குடன் அவர்கள் வாழும் சூழலில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ள, இங்கே தொகுத்துக்கொள்ள விருப்பமாயுள்ளோம். உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த விளம்பர அறிவிப்புக்களை, இங்கே பிரிசுரிக்க முடியும்.

செய்தித்துறையில் உங்களுக்கு ஆர்வமிருப்பின், உங்கள் பகுதிக்கான செய்தியாளராக நீங்கள் செயற்பட முடியும். ஆர்வமுள்ளவர்களைத் தொடர்பு கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.