Tuesday, November 25, 2008

சிறிலங்கா அரசைப் போர்நிறுத்தத்துக்கு அழைத்துவர யாரால் முடியும்..?

1 comments

இந்திய மத்திய அரசு போர்நிறுத்தத்துக்கு வலியுறுத்து. உள்நாட்டுப் போருக்கு அரசியல் தீர்வு காண யுத்த நிறுத்தம் அவசியம் என் அமெரிக்கப்பிரதிநிதி தெரிவிப்பு. தமழ்மக்கள் மீதான போரை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் அறிவிப்பு. போரில் ஈடுபடும் இரு பகுதியினரும் போரை நிறுத்தி அரசியல் ரீதியான தீர்வுக்கு முயலவேண்டும் என ஐ.நா பிரதிநிதி அறிவிப்பு. இவ்வாறான தலைப்புச் செய்திகள் பல,

முழுமையாக வாசிக்க

Wednesday, November 19, 2008

தமிழ்த்திரையுலகின் மூத்த நடிகர் எம். என் நம்பியார் மறைந்தார்

0 comments

தமிழத்திரையுலகின் முதுபெரும் நடிகர் எம் என் நம்பியார் மறைந்தார். உடல்நலக்குறைவாக இருந்த அவர் இன்று பிற்பகல் மறைந்தார். கோபாலபுரத்தில் அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக கோபலபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மேலதிக செய்திகள்

Saturday, November 15, 2008

சுவிஸ் தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பபின் "உண்மைக்காய் எழுவோம்" நேரடி வீடியோ ஒளிபரப்பு

0 comments

சுவிற்சர்லாந்து தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வு தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது! சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் முன்நின்று ஈழத்தின் இளைய தலைமுறை இந்த போராட்டத்தினை தமது கைகளில் எடுத்திருக்கிறோம்! என அறுதியிட்டு, உறுதியிட்டு உரக்க உலகுக்கு சொல்லுகின்ற ஒரு அடையாளமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது! அந்தளவுக்கு ஈழத்தமிழர்களுடைய இன்னல்களை இந்நாட்டின் மூன்று மொழிகளிலும், தமிழ் இளையோர் அமைப்பினர் (ஜேர்மன், பிரான்சு, இத்தாலி) விளக்கி உரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்!

நேரடியான வீடியோ ஒளிபரப்பைக்காண

Thursday, November 13, 2008

Gmail இன் உள்ளே வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையை ஆரம்பித்தது கூகுள்.

0 comments
பல புதுமைகளின் மூலம் எப்போதும் வாடிக்கையாளரை அசத்தும் கூகுள் புதிதாக Gmail கணக்கின் உள்ளே video மற்றும் audio அரட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் அறிய

Wednesday, November 12, 2008

தமிழர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு.பழ.நெடுமாறன் கைது (படங்கள் ஆடியோ செய்தி இணைக்கப்பட்டுள்ளன)

0 comments














தமிழர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு.பழ நெடுமாறன் இன்று காலை சென்னையில் கைதாகினார்.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய். இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் செய்யாதே எனும் கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த போதே தமிழக காவல்துறையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக செய்திகள்

Monday, November 10, 2008

தமிழீழம் அமைவதை எந்தக் காலத்திலும் இநதிய அரசு விரும்பவில்லை - தொல்.திருமாவளவன்.

0 comments

சென்னைச் சேப்பாக்கம் மைதானத்தில், 09.11.08 அன்று, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சின்னத்திரைக் கலைஞர்கள் நடாத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தமிழீழம் அமைவதை எப்பொழுதும் இந்திய அரசு விரும்பவில்லை. அதற்காகவே இந்தியாவும், அமெரிக்காவும், அவற்றைப் பின்தொடரும் ஏனைய நாடுகளும் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டார். அவரது முழுமையான உரையின் ஒலிவடிவை இங்கே கேட்கலாம்

சின்னத்திரைக் கலைஞர்களின் உண்ணாநிலைப் போராட்ட ஒளிப்பதிவு

0 comments
நேற்று 09.11.08 ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். சின்னத்திரைக் கலைஞர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடாத்தியிருந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன், இயக்குனர் செல்வமணியுட்பட மற்றும் பலரின் உரைகளின் பகுதியடங்கிய பிரத்தியேக

வீடியோத் தொகுப்பு

Saturday, November 8, 2008

நீங்கள் நினைக்கும் நாங்கள் உங்களை போல் அல்ல!

0 comments
உங்கள் வீடுகளில்
3 மணி நேர மின்வெட்டாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

உங்கள் தெருக்களில் உள்ள குழாய்களில்
நல்ல குடிநீர் வருவதில்லையாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

உங்கள் கிராமங்களில்
உள்ள தெருக்கள் குன்றும் குழியுமாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

உங்கள் நகரங்களில்
வாகன நெரிசல் அதிகமாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக
50 ரூபாய் எரியவைக்கும்
ஒரு தீப்பெட்டிக்கும் ,

ஆறடி ஆழத்தில்
தோண்டிய பின் கிடைக்கும்
அரைச்சொட்டு தண்ணீருக்கும்,

பதுங்கு குழி அமைப்பதற்கு
வேறிடமில்லாமல் கைவைக்கும்
மண் பாதை ஹைவேக்களுக்கும்

சைக்கிள்களையும், செல்ல நாய்க்குட்டிகளையும்
ஏற்றிச்செல்லவதற்காகவாவது, இடம் தரும் மாட்டுவண்டிகளுக்குமே
நாம் இப்போது அதிகம் முயற்சிக்கிறோம்!

ஸாரா

இங்கிருந்து எடுக்கப்பட்டது.

அனுமதித்த ஸாராவுக்கு நன்றி.

யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை - ஒரு ஒளிப்பதிவு சாட்சியம்

0 comments
வாசல்கள் அடைக்கப்பட்ட யாழ் குடாநாட்டிலிருந்து. மின்னலாய் பதிவு செய்திருக்கின்றது தொலைக்காட்சி ஊடகமொன்று அங்குள்ள மக்களின் இன்றைய நிலைதான் என்ன? தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் புதிய முயற்சி இது எந்தவொரு ஊடகமோ புகமுடியாத குடாநாட்டில் துணிவுடன் இறங்கி மக்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்திய ஊடகத்தினருக்கு எமது பாராட்டுக்கள்.

நன்றி - Yathra

நன்றி - Ya TV

இங்கே ஒளிப்பதிவு சாட்சியம்