Tuesday, June 30, 2009

இந்திய மாணவர்களை பகைக்க விரும்பாத அவுஸ்திரேலியா அரசு?

0 comments

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இனவெறித்தாக்குதல்கள் இன்னமும் குறைந்த பாடில்லை. நடாத்திய ஆர்ப்பாட்டங்கள், விடப்பட்ட அறிக்கைகள், வழங்கிய உறுதிமொழிகள் அனைத்தையும் தாண்டி வெல்கிறது, இவ் இனவெறி.

அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் மட்டும் 97 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். அண்மைக்காலமாக விக்டோரியா மாகாணத்திலேயே அதிகமாக இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதனால் அச்சமடைந்துள்ள அங்குள்ள இந்திய மாணவர்கள் 'இந்தியாவில் இருந்து யாரும் அவுஸ்திரேலியாவுக்கு படிக்க வர வேண்டாம்' என தமது இந்திய நண்பர்களுக்கு எச்சரிக்க தொடங்கியிருக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க..

இராணுவ மயமாயகப்போகும் தமிழர் பிரதேசங்கள்?

0 comments


வன்னியில் மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்ட பின்னரும், அம்மக்களுடனேயே இராணுவத்தினர் தங்கியிருப்பார்கள் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க

Monday, June 29, 2009

மர்ம விபத்தில் ஏமன் விமானம், 150 க்கும் அதினகமானோர் பலியென அச்சம்.

0 comments

விமான விபத்துக்கள் ஏதோ வாராந்திர நிகழ்வுகள் போலாகிவிட்டது. அந்திலாந்திக்கில் ஏர் பிரான்ஸ் விமானம் விழுந்த பரபரப்பு அடங்கு முன்பதாகவே, ஏமன் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 150 பேருடன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.

தொடர்ந்து வாசிக்க

என் குழந்தைகள் மைக்கல் ஜாக்சனின் குழந்தைகளல்ல - ஜாக்சன் மனைவி

0 comments

மைக்கல் ஜாக்சனின் மரணப்புதிர் அவிழவதற்கு முன்னமே, மற்றொரு பிரச்னை கிளம்யுள்ளது. எனன்னுடைய இரு குழந்தைகளுக்கும் தந்தை மைக்கேல் ஜாக்சன் அல்ல. எனது இரு குழந்தைகளையும், செயற்கைமுறையில் கருத்தரித்தே நான் பெற்றேன் என ஜாக்சனின்இரண்டாவது மனைவியான டெபோரா ரோ தெரித்துள்ளார். மைக்கேல் ஜாக்சன் உடல் நலமின்றியிருந்த போது, அவரைக் கவனிக்க வந்தவர் அவர். ஆனால், மைக்கேல் ஜாக்சன், அவரை விரும்பி மணந்து கொண்டார்.
தொடர
0 comments

மத்திய அமெரிக்காவின் ஹோண்டூராஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் இராணுவ புரட்சியினால் அந்நாட்டு அதிபர் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம், அமெரிக்க கண்டத்தினையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

தொடர்ந்து பேச

Sunday, June 28, 2009

புலம்பெயர் மக்கள் எமது அமைச்சகத்தின் மூலம் முகாம் மக்களுக்கு உதவலாம்! - கருணா

0 comments

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவ நினைக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் நேரடியாக எனது அமைச்சின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தினால் ஒத்துழைப்புக்களை வழங்க தயார் என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேரடி செவ்வி ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ள அவர், 'தேசிய ஒருமைப்பாடு மற்றும் மீள் இணக்கப்பாடு அமைச்சின் மூலம், இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு நேரடியாக உதவ முடியும் எனவும், இதன் மூலம் புலம்பெயர் மக்கள் தமது உதவிகளை பாதுகாப்பாக வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளதுடன், அமைச்சின் காரியாலத்தை தொடர்புகொள்ளும் பட்சத்தில், இது குறித்து பேச முடியும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' Final - ஒரு கலக்கல் பார்வை

0 comments

தமிழகத்தின் மிகப்பிரபல்யமான நடன நிகழ்ச்சிகளில் (Reality Show) ஒன்றான விஜய் டீ.வி.யின் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' இறுதிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த நடனப்போட்டியில் கிட்டத்தட்ட ஒருவருட காலத்தை அண்மித்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்ட 8000 போட்டியாளர்களில் இறுதிப்போட்டிக்கு 4 பேர் தெரிவாகியிருந்தனர்.

முயற்சி, கடின உழைப்பு, நடனத்தில் இருந்த நாட்டம் என்பன இவர்களை பல சுற்றுக்களை கடந்து இறுதிப்போட்டிவரை கொண்டு வந்து விட்டது.இறுதிப்போட்டிக்கு பிரேம் கோபால் (இலங்கையை சேர்ந்தவர்), செரிப், நந்தா மற்றும் மனோஜ் குமார் ஆகிய நான்கு பேர் தெரிவாகினர்.

தொடர்ந்து வாசிக்க..

ககா,ரொனால்டோ இருவரையும் வாங்க 153 மில்லியன் யூரோ? - ஸ்பெயின் அதிருப்தி

0 comments

மேன்செஸ்டர் யுனைட்டட்டில் இருந்த கிரிஸ்டியானோ ரொனால்டோவை, ரியல் மட்ரிட் அண்மையில் வாங்கியிருந்தது. அதேபோல ஏசி மிலானில் இருந்து 'ககா'வையும் ரியல் மட்ரிட் வாங்கியிருந்தது. உலகின் காற்பந்து ஜாம்வான்களாக கருதப்படும் இவ்விருவரையும் வாங்குவதற்கு மொத்தம் 153 மில்லியன் யூரோவை செலுத்தியிருந்தது ரியல் மட்ரிட்.

எனினும் ரியல் மட்ரிட்டின் இந்த நடவடிக்கையை, கடுமையாக விமர்சித்திருக்குறது ஸ்பானிய நிதி அமைச்சு. வங்கிகள் தற்சமயம் நிதிப்பற்றாக்குறை நிலவுவாதல், தனிப்பட்ட பல வர்த்தகர்களே மிக நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கும் இந்நிலையில், இரு காற்பந்து வீரர்களுக்காக,

தொடர்ந்து வாசிக்க

தமிழினத்தின் அழிவுக்குக் காரணம், தமிழன் தமிழனாக தமிழகத்தில் இல்லை - சீமான்

0 comments

'ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும்' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிரணியால், பேரணியொன்று நடாத்தப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார். பேரணியைத் திரைப்பட இயக்குநர் சீமான் பேரணியை தொடங்கி வைத்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்

Saturday, June 27, 2009

'நியூயோர்க்' - பொலிவூட் திரையுலகம் சென்றிருக்கும் புதிய இடம்

0 comments


மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 'நியூயோர்க்' திரைப்படம் நேற்றைய தினம் (ஜூன் 26) வெளியாகியிருக்கிறது. கபீர் கானின் இயக்கத்தில் ஜோன் ஆப்ரஹாம், கட்ரினா கைப்,நெயில் நெட்டின் முகேஷ், மற்றும் இர்பான் ஆகியோருடன் அமெரிக்க கலைஞர்களும் இணைந்து நடித்த இவ் பொலிவூட் திரைப்படம், முழுவதுமாக நியூயோர்க்கினை மையமாக கொண்டு உருவாக்கபப்ட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Friday, June 26, 2009

மைக்கேல் ஜாக்சனின் மரணத்தில் மர்மம்.

0 comments

பாப் இசை உலகின் சக்கரவர்த்தி என கருதப்படும், பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மரணச்செய்தி நேற்று உலகிலுள்ள அனைத்து ஊடககங்களிலும் வெளியாயிருந்தன. நேற்று பல தொலைக்காட்சிச் சேவைகளும், இவர் தொடர்பான விவரணங்களைத் தொடர்ந்து ஒளிபரப்பின

மேலும்

'வணங்கா மண்' வரும்.., ஆனா வராது - சிறிலங்கா

0 comments
வன்னி மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பாவிலிருந்து சென்ற 'வணங்கா மண் ' கப்பலை மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கும் உத்தேசம் எதுவும் இல்லை சிறிலங்கா ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்

(வீடியோ இணைப்பு) பொப் இசை மன்னர் மைக்கல் ஜக்சன் வாழ்வும் மரணமும்

0 comments

பொப் இசையுலகின் முடிசூடா சக்ரவர்த்தி மைக்கல் ஜக்சன் இன்று அதிகாலை லொஸ் ஏஞ்ஜல்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 50. அவருடைய மரணத்தை பொலீசாரும், குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.மைக்கல் ஜக்சனின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மைக்கல் ஜக்சனின் சுருக்கமான வரலாறு வீடியோ இணைப்புடன்- தொடர்ந்து வாசிக்க

Thursday, June 25, 2009

விபத்துக்குள்ளான 'எயார் பிரான்ஸ்' விமானத்தின் தலைமை விமானியின் உடலம் கண்டுபிடிப்பு

0 comments

விபத்துக்குள்ளான எயார் பிரான்ஸ் விமானத்தின் தலைமை விமான ஓட்டுனரின் உடலம் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதாக, எயார் பிரான்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.பிரேசிலின் ரியோ டீ ஜனீரியோ விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட எயார் பிரான்ஸின் 'எயார் பஸ் 330' என்ற விமானம் கடந்த ஜூன் முதலாம் திகதி அத்திலாந்திக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது தெரிந்ததே. 228 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இந்த விமானம் அத்திலாந்திக் கடற்பரப்புக்கு மேலாக பறந்துகொண்டிருக்கையில்....

தொடர்ந்து வாசிக்க

Wednesday, June 24, 2009

வணங்கா மண் கப்பல் குறித்து இந்திய மத்திய அரசு இன்று இறுதி முடிவு?

0 comments

இந்திய கடற்படை அதிகாரிகளால், வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு, சென்னை கடற்பரப்புக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டுள்ள 'வணங்கா மண்' கப்பல் குறித்து இன்று மத்திய அரசு முடிவு செய்யவிருக்கிறது. ஐரோப்பிய புலம்பெயர் மக்களின் நிவாரண பொருட்களை ஏற்றுக்கொண்டு, வன்னி நோக்கி புறப்பட்ட இக்கப்பல், சிறிலங்கா அரசினால் நிராகரிக்கப்பட்டதனால், பொருட்களுடன் சென்னை துறைமுகத்திற்கு அருகாமையில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தது...

இந்தியாவில் மூங்கில் உற்பத்தி அதிகரிப்பு

0 comments

இன்னும் சில ஆண்டுகளில் தென் இந்தியா முழுக்க மூங்கில் அல்வா, சாம்பார், வேட்டிகள், சட்டைகள், சேலைகள், சால்வைகள் பிரபலமாகி விடும். மூங்கில் சாகுபடி செய்த விவசாயிகள் வருடந்தோறும் நிரந்தர வருவாய் பெறும் அளவுக்கு செழிப்புடன் இருப்பார்கள் என திண்டுக்கல்லில் நடந்த மூங்கில் சாகுபடி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...

மாவோஜிட் தலைவர் தப்பியதாக கருதும் காவல்துறை

0 comments

மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஐம்பது கிராமங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாவோயிஸ்டுகள் தலைவர் அங்கிருந்து தப்பிவிட்டதாக, தேடுதல் வேட்டையிலுள்ள படையினர் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அவர்களை தீவிரவாதிகள் என அறிவி்த்திருக்கும் நிலையில், கோடீஸ்வரராவ் எனும் பெயருடைய இவர் தப்பிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அநேகமாக இவர் வங்கதேசத்திற்கு தப்பியிருக்கலாம் என காவற்துறை தரப்பில் நம்பப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க

அமெரிக்காவின் விமானத்தாக்குதல் - பாகிஸ்தானில் பலர் பலி

0 comments

ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள வசிரிஸ்டான் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 90 பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது. எனினும் சற்றுப் பிந்திய தகவல்கள் 45 பொதுமக்கள் தலிபான் தளபதி ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த போது ஏவுகணைகளால் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கின்றது.

மேலும் வாசிக்க...

Tuesday, June 23, 2009

போரில் சிக்கிய தமிழ் மக்கள் விடயத்தில் ஐ.நா பாதுகாப்பு சபை வரலாற்று பிழை- HRW

1 comments

சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின் போது, சிக்கியிருந்த பொதுமக்கள் விவகாரத்தில், ஐ.நாவின் பாதுகாப்பு சபை வரலாற்று தவிறிழைத்துள்ளதாக, மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. சிறிலங்கா,கொங்கோ குடியரசு,சூடான்,சாட்,போன்ற நாடுகளில் தொடரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக, பாதுகாப்பு சபை கடைப்பிடித்த அலட்சியப்போக்கை சுட்டிக்காட்டி ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் தூதுவர் குழுவுக்கு, மனித உரிமை கண்காணிப்பகம் எழுதியுள்ள கடிதத்திலேயே சிறிலங்கா தொடர்பாக இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தொடர்ந்து வாசிக்க

கும்மி.. மொக்கை..வாங்க பேசலாம்..

0 comments


வணக்கம் நண்பர்களே!

வாங்க பேசலாம். 4TamilMedia வின் மற்றுமொரு புதிய பகுதி வாங்க பேசலாம். தமிழ், ஆங்கிலம், தங்கிலிஷ், எல்லா வகையிலும் உரையாடலாம். உபயோகமாகவும் பேசலாம், ஒன்றுக்கும் உதவாத அரட்டையும் அடிக்கலாம். எப்போதும் இனிய நண்பர்கள் வட்டத்தில் கலந்திருக்க வாங்க.. பேசலாம்

`சி.பி.ஐ.-மாவோயிஸ்ட்' அமைப்புக்குத் தடை ஏன்? - ப.சிதம்பரம்

1 comments

மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 50 கிராமங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும், இந்தியத் துணை இராணுவப்படையினருக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பை, மாநில அரசின் விருப்பக் கருத்தையும் மீறி மத்திய அரசு, பயங்கரவாத இயக்கமாக அறிவித்துத் தடைசெய்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க

பிரபல தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர் கைதும் விடுதலையும்.

0 comments
பிரமிட் சாய்மீரா. அன்மைக்காலங்களில், தமிழத்திரையுலகில் அதிக செல்வாக்குப் பெற்ற சினிமா நிறுவனம் எனலாம். இந்நிறுவனத்தின் தலைவர் சுவாமிநாதன் இன்று காவற்துறையால் கைது செய்யப்பட்டார். ஹரியானவைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்துடனான பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வழக்கில் நீதிமன்றத்துக்குச் சமூகந்தராமையே இவரது கைதுக்குக் காரணம் எனத் தெரியவருகிறது.

தொடர்ந்து வாசிக்க

Sunday, June 21, 2009

ஈரானில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பான இன்றைய நிலை

0 comments

ஈரானின் தேர்தல் கமிட்டி(Guardian council) வாக்களிப்பின் போது இடம்பெற்றதாக ஆர்ப்பட்டக்காரர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த ஒழுங்கீனங்கள் அனைத்தையும் முற்றாக நிராகரித்துள்ள நிலையில் ஈரானில் முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் மௌசவி பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோள் அவரது வெப்சைட்டில் வெளிவந்திருக்கிறது...

மேற்கு வங்கத்தில், மாவோயிஸ்ட்கள் பந்த் அறிவிப்பு. தொடரும் பதட்டம்.

0 comments

இந்தியாவின் மாவோயிஸ்ட் நக்ஸல் அமைப்பினர் மேற்கு வங்க மாநிலத்தில், பழங்குடியின மக்கள் வசிக்கும் ஐம்பது கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இவர்களது கட்டுப்பாட்டிலிருந்து, இக்கிராமங்களை மீட்டெடுக்கும் நோக்கில், கடந்த சில நாட்களாக மத்திய துணை இராணுவப்படையும், காவற்துறையும், தாக்குதல் தொடுத்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

பருவ நிலை மாற்றம் காரணமாக 300 000 பேர் ஒரு வருடத்தில் இறக்கின்றனர்.

0 comments

ஐ.நா வின் முன்னாள் செயலாளர் கோபி ஆனந்த் முன்னெடுத்த புதிய ஆய்வொன்றின் படி பருவ நிலை மாற்றம் காரணமாக ஒரு வருடத்தில் 300 000 பேர் மரணமடைவதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இம்மாற்றங்களால் 125 பில்லியன் டாலர் பொருளாதார நட்டமும் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றது..

மேலும் வாசிக்க..

ICC Twenty20, இறுதிப் போட்டியில் மண்ணை கவ்வியது சிறிலங்கா!

0 comments

சிறிலங்கா பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற, ICC யின் 20twenty உலக கிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டியில், சிறிலங்கா மண்ணை கவ்வியுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள், டில்ஷான், சனத் ஜெயசூர்ய இரண்டு பேருமே குறைவான ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

உணர்வுடன் ஒரணியாக, பேரணியாகத் திரண்ட பிரித்தானியத் தமிழர்கள்

0 comments


வன்னி யுத்தத்தில் காணாமல் போயுள்ளவர்கள் மீட்கப்பட வேண்டும், முகாம்களில் வாழும் மக்கள் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும், இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடிமறைப்போரும் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும், எனும் மூன்றம்சக் கோரிக்கைகளை முன் வைத்து, பிரித்தானியாவில் நேற்று புலம் பெயர் தமிழர்களால் மாபெரும் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க

Saturday, June 20, 2009

இளைய தளபதி விஜய் அதிரடி அரசியல் பிரவேசம் ?

3 comments


சமீபகாலமாகவே இதோ அரசியலுக்கு வருகிறார் விஜய் எனப் பராக் கோசமெழுப்பட்டு வந்த வேளையில், இன்றைய தொண்டன் நாளைய தலைவன் என மாறுவது ஒன்றும் புதிதல்ல. நற்பணி இயக்கமாகவிருந்த எமது மன்றங்கள் வலிமைமிகு மக்கள் இயக்கமாக இனிவரும் காலங்களில் மாறும். வலிமையும், ஆற்றலும் மிக்க இளைய சக்தியாக உருவெடுப்போம் எனத் தன் மெளனம் கலைந்து, அரசியற் பிரவேசத்துக்கான முன்னுயை வெளியிட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க

ஈரான் ஆர்ப்பாட்டத்தில் 19 பொதுமக்கள் பலி

0 comments

ஜூன் 20 சனி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சமீபத்தில் அங்கு இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்து நடந்த பேரணியின் போது 19 பொது மக்கள் போலிசாருக்கும் அவர்களுக்கும் இடையே பின்னர் உருவான மோதலில் பலியாகியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இம்மோதலின் போது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக சிஎன்என் செய்தித்தாபனம் தெரிவிக்கின்றது.

மேலும் வாசிக்க...

காத்திருக்கும் வணங்கா மண்

0 comments

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுவதற்காக,ஐரோப்பிய வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட, அத்தியாவசிய உணவு, மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த ஏப்ரல் 20 பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட 'வணங்காமண் கப்பல்', தற்போது சென்னை துறைமுகத்திற்கு அருகாமையில், இந்திய கடற்பரப்பினுள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Friday, June 19, 2009

நாசாவின் புதிய நிலாப் பார்வை

0 comments

சந்திர மண்டலத்தில் மனிதன் பாதுகாப்பாகத் தரையிறங்கும் பகுதிகளை அடையாளம் காணுதல், அங்கு மனிதக் குடியேற்றத்துக்கான ,அல்லது பூமியில் மனிதனின் சக்தித் தேவைக்கான வளங்களைத் தேடுதல்,நிலவின் கதிர்வீச்சு சூழல் மனிதனைப் பாதிக்கும் தன்மையை வகைப் படுத்துதல், புதிய தொழிநுட்பத்தைப் பரீட்சித்தல் ஆகிய இலக்குகளை அடைவதற்காகத் தயாரிக்கப்பட்ட LRO (Lunar Reconnaissance Orbitter) எனப்படும் சட்டிலைட்...

மேலும் வாசிக்க...

இயற்கையின் அகோரம் - டோர்னிடோ சூறாவாளியின் நவீன ஒளிப்பதிவு

0 comments

தண்டர்ஸ்டோர்ம் என்றழைக்கப்படும் அமெரிக்காவின் மிட்வெஸ்ட் மாநிலங்களிலேயே பொதுவாக ஏற்படும் டோர்னிடோ டுவிஸ்டர் வகை சூறாவாளிகளில் ஒன்று புதன் இரவு(ஜூன் 17) நேப்ரஸ்கா மாநிலத்தின் கிராண்ட் ஐலண்டிலிருந்து கிழக்கே 12 மெல் தொலைவில் 34ம் இலக்க வேகப்பாதையைக் கடந்து கொங்றீற் கட்டடம் ஒன்றை உடைத்து எறியும் காட்சி..

மேலும் வாசிக்க..

Thursday, June 18, 2009

பிரபாகரன் வீர மரணம் - விடுதலைப்புலிகளின் உளவுத்துறையும் உறுதி செய்கின்றது.

0 comments

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரும், பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துள்ளதை உறுதி செய்வதாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

அறிக்கையைக் காண

சிறிலங்கா கிரிக்கிகெட் அணிமீது தாக்குதல் நடாத்திய தீவிரவாதி பாகிஸ்தானில் கைது

0 comments

கடந்த மார்ச் மாத முதல்வாரத்தில், பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகருக்கு கிரிக்கெட் விளையாட சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது, இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய பாகிஸ்தானியப் போலீசார் எட்டுப்பேர் உயிர் இழந்தனர். இச்சம்பவம் பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்து வெளிநாடுகளில் மிகுந்த அச்சத்தைத் தோற்றுவித்திருந்தது. இத் தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கடும் தேடுதலை நடத்தி வந்த போலீசார், நேற்று இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கருதப்படும், முகம்மது ஜூபைர் நெக் என்ற...

மேலும் வாசிக்க...

உலகில் பெருகி வரும் அகதிகளே இன்றைய பூகோள சிக்கல் - ஐ.நா

0 comments

புதிதாக இலங்கையிலும் பாகிஸ்தானிலும் பெருகியுள்ள அகதிகளின் எண்ணிக்கை காரணமாக இவ்வருட மத்தியிலேயே உலகம் முழுதும் உள்ள மொத்த அகதிகளின் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட அதிகரிக்கும் வாய்ப்பு பெருகி விட்டது என்றும் இதுவே முக்கிய பூகோள சிக்கலாகத் தற்போது உருவெடுத்துள்ளதாகவும் ஐ.நாவின் அகதிகள் முகவர் பிரிவு தெரிவித்துள்ளது.அகதிகளுக்கான ஐ.நா இன் உயரதிகாரி அந்தோனியோ கட்டெரிஸ் செய்தி வெளியிடுகையில் இன்று சற்றும் தளர்வில்லாத உள்நாட்டு பிரச்சனைகள் மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கி வருவதைத் தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே என்று கூறுகிறார்.

மேலும் வாசிக்க...

எஸ்.வீ. சேகர் புதிய கட்சி ?

0 comments

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகிய போது, துணைமுதல்வர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசியது தொடர்பாக, அதிமுவினருக்கும், எஸ்விசேகரும், முறுகல் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று செ‌ய்‌தியா‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், அதிமுகவுடன் இனி எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

Wednesday, June 17, 2009

நாடுகடந்த தமிழீழ அரசு,சர்வதேச ரீதியில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும்?

0 commentsநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அது சிறிலங்கா அரசு முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக திகழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஷிஹான் பேரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

பாகிஸ்தான் மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பாளருக்கு இடமளிக்காதீர் - மன்மோகன்

0 comments

நவம்பரில் மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியப் பிரதமரும் பாகிஸ்தானின் அதிபரும் சந்திக்கும் முதாலாவது உயர்மட்ட சந்திப்பு ரஷ்யாவில் நேற்று (ஜூன்16)நடந்தது.மூன்று நாள் பயணமாக ஜுன் 15ம் திகதி ரஷ்யாவின் ஷாங்காய் கூட்டு மாநாட்டிலும் பிரேசில்,ரஷ்யா,இந்தியா,சீனா ஆகிய நாடுகளின் பிரிக் கவுன்சிலிலும் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்ய பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க...

சமாதானத்தின் பாதை வட கொரியாவுக்குத் திறந்தே இருக்கின்றது - ஒபாமா

0 comments

வடகொரியாவின் அணுசக்தி இலட்சியங்களை எட்ட அனுமதிப்பானது ஆசியாவின் சமவலுவை குலைப்பதுடன் உலகிற்கே அச்சுறுத்தலாக அமையும் என அதிபர் ஒபாமா தென்கொரிய அதிபர் லீ ம்யுங் பக் உடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் கருத்துக்களுடன் உடன்பட்ட லீ பின்னர் உரையாற்றும் போது சமீபத்தில் வட கொரியாவில் சிறைப் பிடிக்கப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர்களை வட கொரிய அரசு விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும் வாசிக்க...

கெளரவ நீதிபதியாக இந்தியர் - ஆஸ்திரேலிய அரசு நியமனம்

0 comments


இந்திய மாணவர்களுக்கெதிரான இனவெறித் தாக்குதல்கள் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவில், கெளரவ நீதிபதியாக இந்தியர் ஒருவரை ஆஸ்திரேலிய அரசு நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்திலேயே இந்நியமனம் நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில், 83ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வரும், மோதி விசா என்பவரே இவ்வாறு கெளரவ நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த, மோதி விசா 65 வயதுடையவர்.

தொடர்ந்து வாசிக்க

ஒபாமாவுக்கு என்னாச்சு..?

0 commentsஒபாமாவுக்கு என்னாச்சு..? ஏன் இந்தத் தடுமாற்றம். வீடியோ பாருங்க.

Tuesday, June 16, 2009

இன்று கூகிளில் தெரிவது என்ன?

0 comments

சில நாட்களில் முக்கியமான சம்பவம், அல்லது நினைவுதினம், அல்லது அன்றைய தினத்துக்குரிய செய்தி எதுவாயினும் அது சம்பந்தமாக, கூகிள் தேடுபொறியின் முகப்பிலுள்ள குறியீட்டுபடம் பிரசுரமாகி வருவதை அவதானித்திருப்பீர்கள். ஆனாலும் அது பற்றிய செய்திகள் முழுமையாக உங்களுக்குக் கிடைப்பதில்லை. உங்களது அந்தக் கவலையை நீக்க, வெளியாகும் படத்திற்குரிய மேலதிக விபரங்கள் 4tamilmedia வில் தமிழில் தரப்படுகின்றது.

இஸ்ரேலின் துப்பறியும் பணிக்கான நவீன இராணுவ உபகரணம்

0 comments

சிறிய மலைப்பாம்பு போன்ற உருவில் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்றின் தலைப் பாகத்தில் புகைப்படக்கருவியும் மைக்ரோபோனும் பொருத்தப்பட்ட நவீன இராணுவப் புலனாய்வு எந்திரம் ஒன்று இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் வாசிக்க...

நியூயோர்க் விமான விபத்தில் பலியான இந்திய வர்த்தகர் உடல் மீட்பு

0 comments

ஜூன் 14ம் திகதி ஞாயிறு அமெரிக்காவின் கிழக்கு நியூயோர்க் நகரின் மோகாக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிய விமானத்தில் பயணித்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. நியூயோர்க்கின் அல்பானி நகரில் பல ஹோட்டல்களை நடத்தி வரும் 41 வயதுடைய இந்திய வர்த்தகரான மாதை கொலாத் ஜோர்ஜ் மற்றும் இவரின் மூத்த மகனான 11 வயதுடைய ஜோர்ஜ் கொலாத் மற்றும்...

மேலும் வாசிக்க...

மெக்சிக்கோவில் உலகின் மிக நீண்ட காற்சட்டை கண்காட்சியில்

0 comments

ஜூன் 14ம் திகதி ஞாயிறு மெக்ஸிக்கோவில் அல்மோலொயா டில் ரியோ நகரில் 60.1 மீற்றர் நீளமான மிக நீண்ட காற்சட்டை (pants) காட்சிப் படுத்தப்பட்டது. 30 மாடிக் கட்டடம் ஒன்றின் உயரத்திற்கு நிகராக தயாரிக்கப்பட்ட இந்த காற்சட்டை முன்னர் தயாரிக்கப்பட்ட 50 மீற்றர் உயரமான காற்சட்டையின் சாதனையை முறியடித்து கின்னஸ்ஸில் இடம்பிடித்துள்ளது.

மேலும் வாசிக்க...

ஈரானில் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரும் ஆர்ப்பாட்டம் - 7 பேர் பலி

0 comments

ஈரானின் முன்னாள் அதிபர் முஹமட் அஹ்மடிநிஜாத்தே 62 வீதம் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார் என்று அந்நாட்டின் அரச ஊடகங்கள் ஜூன் 13 இல் செய்தி வெளியிட்டதிலிருந்து அங்கு எதிர்த்தரப்பிலிருந்து கடும் ஆட்சேபமும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் கிளம்பத் தொடங்கி விட்டன. 1979 இல் ஈரானில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின் பின்னர் முதற் தடவையாக சுமார் இலட்சக்கணக்கான மக்கள் டெஹ்ரானில் ஒன்று கூடி அமைதியாகத் தமது கோரிக்கைகளை நேற்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க...

Monday, June 15, 2009

உருமாறிகள் 2 - பதிலடி ஆரம்பம்

0 comments

உருமாறிகள் என்ற பெயரில் 2007ம் ஆண்டு வெளி வந்த இயந்திர உருவங்கள் சண்டையிட்டுக் கொள்ளும் அட்டகாசமான திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். உருமாறிகளின் உயிர் ரகசியங்கள் அடங்கிய சிறிய சதுரப் பெட்டகம் ஒன்று அமெரிக்காவின் கொலராடோ நதியில் கண்டெடுக்கப்பட்டு இராணுவத்தால் ரகசியமாகப் பாதுகாக்கப் படுகின்றது.சிவப்புக் கண்களை உடைய தீய டிசெப்டிகோன் உருமாறிகளும் நீலக் கண்களை உடைய அவுட்டோபட்ஸ் உருமாறிகளும் இதைக் கைப்பற்றுவதற்காக பூமியில் மனிதர்களைக் கொன்று குவிக்கும் கடும் யுத்தத்தை செய்கின்றன.

மேலும் வாசிக்க...

கொலம்பியாவில் தக்காளிச் சண்டை ஆரம்பம்

0 comments

உலகில் பல இடங்களில் பல பிரிவினருக்கிடையே பல்வேறு சண்டைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனாலும் வெற்றி என்ற ஒன்றை இலக்காகக் கொண்டிராத சண்டை ஏதும் இவற்றில் இருக்க முடியுமா? இல்லை என்பவர் நீங்கள் எனில் கட்டாயம் நீங்கள் கொலம்பியாவில் இன்று நடைபெறும் தக்காளிச் சண்டையில் கலந்தே ஆக வேண்டும். ஆம்.கொலம்பியாவிலுள்ள நகர் ஒன்றில் வருடம் தோறும் நடை பெறும் தக்காளித் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வரும் இக்குறித்த தினத்தில் கொலம்பியாவிலுள்ள இந்நகரில் வீதிகள் தோறும் தக்காளி ஆறு ஓடும்.

மேலும் வாசிக்க..

ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதலா..?

0 comments

ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருகின்றார்கள். இது ஒரு இனவெறித் தாக்குதல் என்ற வகையில் மாணவர்கள் கருத்துக்களை முன் வைக்கின்ற போதும், அது தனிப்பட்ட தாக்குதலே என்ற வகையில் ஆஸ்திரேலிய மட்டத்தில் அபிப்பிராயங்கள் கிளம்மியுள்ளன. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்
தொடர

Sunday, June 14, 2009

புலிகளின் மற்றுமொரு நீர் மூழ்கி கண்டுபிடிப்பு - பாதுகாப்புத் தரப்பு.

0 comments
யுத்தம் நிறைவுற்ற நிலையில் , வன்னிப் பிரதேசத்தில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் மற்றுமொரு நீர்மூழ்கியைக் கண்டு பிடித்திருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு தெரிவித்திருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை முல்லைத்தீவு, வெள்ளை முள்ளி வாய்க்கால் பகுதியிலே இந் நீர் மூழ்கி கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

தொடர்ந்து வாசிக்க

உலகை உலுக்கும் பன்றிக் காச்சல் பயங்கரம், தமிழகத்திலும் ?

0 comments


மெக்சிக்கோ நாட்டில் உருவாகி, அமெரிக்க, ஐரோப்பியநாடுகளில், பரவி, தற்போது ஆசியநாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது பன்றிக் காச்சல்.
H1N1 எனும் வைரஸ் கிருமிகள் மூலம் பரவும் இந்த வைரஸ் காச்சலின் அச்சுறுத்தல் தற்போது இந்தியாவிலும் ஏற்பபட்டுள்ளது. இதுவரையில் சுமார் பதினாறு பேர் இவ்வகை வைரஸ்தாக்கத்திற்குட்பட்ட நோயாளிகளாக இனங் காணப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்

தொடர்ந்து வாசிக்க