Thursday, April 30, 2009

சிறிலங்காவின் போர்குற்றங்களை ஐ.நா சபை அறிந்திருக்கிறதா..?

0 comments

பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சிறிலங்காவின் வடகிழக்கு பகுதியின் நிலபரப்பை ஐ.நாவின் செயற்கை கோளின் உதவியுடன் ஏப்ரல் 19-26 வரையில் அவதானித்து துல்லிய முப்பரிமாண தோற்றத்துடன் கூடிய செய்மதி புகைப்படத்துடன், 10 பக்கங்கள் கொண்ட PDF ஆக அறிக்கைப்படுத்தியது ஐ.நாவின் UNOSAT பிரிவு.

பாதுகாப்பு வலயத்தினுள் வான் தாக்குதல்கள், கனரக ஆயுதப்பாவணை தொடர்ந்து மக்கள் குடியிருப்புக்கள் மீது இடம்பெற்றிருப்பதற்கான சாட்சியங்களை தெள்ளத்தெளிவாககாண்பிப்பதால் இவ்வறிக்கை, சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தற்போது அந்த அறிக்கையினை பார்வையிடுவதற்கான இணைப்புக்கள் UNOSAT இனால் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் 'இன்னர் சிட்டி பிரஸ்' இது பற்றி முதலில் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தாலும்,ரொய்ட்டர் செய்தி தளமும் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளது.


தொடர்ந்து வாசிக்க

ஊடக ப் போராட்டத்தில் ஒரு மாற்று - சுவிஸ் 30 மினுடென்

0 comments

இலங்கைத் தீவில் ஒரு இனப்படுகொலை திட்டமிட்டவாறு நடந்து கொண்டிருக்கையில், அதனை உள்நாட்டு யுத்தமென்றும், பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டமென்றும், சிறிலங்கா அரசு செய்த பரப்புரைகளை அரச தரப்பு ஆதாரங்களாக வைத்துக் கொண்டு சர்வதேச ஊடகங்கள் பல இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில், புலம் பெயர் தேசங்களில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டங்கள் பல ஊடகங்களின் பார்வையை, இது குறித்த செய்திகளின் பக்கம் திருப்பியிருந்தன. ஆயினும் சில நாடுகளில் சில ஊடகங்கள், சிறிலங்கா அரசின் பரப்புரைகளுக்கமைவாக ஏஜென்சிச் செய்திகள் வழங்கும் செய்திகளையே வெளியிட்டுவந்தன.



தொடர்ந்து வாசிக்க

அமெரிக்க மிச்சிகனில் தமிழர்களின் அதிரடி போராட்டம்!

0 comments


வட அமெரிக்காவின் மிசிஹன் மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படவிருந்த சிறிலங்கா அரசின் வெற்றிவிழா, நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும்,சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்குஆதரவு அளித்து வருவதாக,நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையின் தீவிரபோக்கு மீதான சர்வதேசத்தின் முதவாவது மனிதாபிமான அழுத்தம்.

1 comments

பல நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு வலியுறுத்திய போதும், அதனைக் கருத்திற்கொள்ளாது, தீவிர போக்குடன் யுத்தம் புரியும் இலங்கைக்கு முதன் முறையாக மனிதாபிமான அழுத்தமொன்றை ஏற்படுத்தும், நடவடிக்கையொன்று, சர்வதேச மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Wednesday, April 29, 2009

தமிழக மக்களே சிந்தியுங்கள் ! - பரமேஸ்வரன்

0 comments

ஈழத்தில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி, பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்னால் கடந்த 24 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வருகின்றார் இளைஞன் சுப்பிரமணியம் பரமேஸ்வரன். அவரது உடல்நிலை மெல்ல மெல்ல பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், நேற்று 23ம் நாள் மக்களிடம் இறுதி வேண்டுகோள் என உருக்கமான ஒரு வேண்டுகோளை சன்னமான குரலில் வெளிப்படுத்தினார்.

தன் புலன்கள் அடங்கிப்போகு முன் சுய சிந்தனையுடன் அந்த வேண்டு கோளை முன் வைப்பதாக் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க

ஜெனீவா ஐ.நா சபை முன் அடங்காப்பற்றென ஆர்பரித்து நிற்கும் தமிழ்மக்கள்.

0 comments

ஐ.நா சபையில் இலங்கை பற்றிய உரையாடல் இன்று நடைபெறுவதால், சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபையின் முன்றலில் முன்பாக சுமார் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடி, ஜஅடங்காப்பற்று' எனும் குறியீட்டுப் பெயருடன், கவனயீர்ப்பு நிகழ்வொன்றினை நடாத்திக்கொண்டிருக்கின்றனர். இலங்கையில் உடனடி யுத்த நிறுத்தினை வலியுறுத்தி ஐ.நா நடவடிக்கை எடுக்குமாறு, கோரிக்கையினை முன்வைத்து இக் கண்ணடன கவனயீர்ப்ப ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்திரா காந்தி வழியில் ஈழத்திற்கு குரல் கொடுப்பேன். - ஜெயலலிதா

0 comments

இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

Sunday, April 26, 2009

இறுதி யுத்தம் யாருக்கு ?

0 comments

தமிழகத்தின் தேர்தல் களத்தில் என்றுமில்லாதவாறு, இம்முறை ஈழப்பிரச்சனையின் எதிரொலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. இது தேர்தல் முடியும் வரை தொடருமா, திசை மாறுமா, என்பதெல்லாம் விடை தெரியா கேள்விகளே. ஆனாலும், இத் தேர்தலில் முக்கியமாக அவதானிக்கப்படும் ஒரு விடயம் இப்பிரச்சினையை தேர்தல் முடியும்வரை இழுத்துச் செல்லுமென்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில் கட்சிகளுக்கிடையிலான பிரச்சாரத்தையும் தாண்டி, ஈழப்பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பரப்புரையை தனி அமைப்புக்கள் பல முன்னின்று நடத்தி வருகின்றன. அந்த வகையில் இதுவரையில் பல இறுவட்டக்கள் , துண்டுப்பிரசுரங்கள் , இப்பரப்புரையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் எமக்கும் சில கிடைத்திருந்தன. அந்த வகையில், ஈழத்தின் இனப்படுகொலைகளைக் கண்டுகொள்ளாது, அதற்குத் துணை போன, மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசை விமர்ச்சித்தும், ஈழப்படுகொலைகள், சிறிலங்காப்படைகளின் தமிழக மீனவர் படுகொலைகள் , என்பவற்றையும், உள்ளடக்கியும் 'இறுதி யுத்தம்' என்ற தலைப்பில் இந்த இறுவட்டு வெளிவந்துள்ளது.

'இறுதி யுத்தம்' இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையின் தீவிரத்தை காட்டுவதோடு, அதற்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினையும் கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்வதோடு தமிழ்நாட்டிலில் இருந்து காங்கிரசினை துரத்தியடிக்கும் நோக்கத்தினையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. அத்தடன் இந்த இறுவட்டு ஈழத்தின் இனப்படுகொலையில் காங்கிரசின் பங்கு என்ன எனும் வகையில் மிகச்சிறந்த ஆவணப் படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த ஆவணத்தின் தொகு நேர்த்தியும், பொருத்தமான வசனங்கள், என்பனவும், தொகுப்பைப் பார்க்கும் போது தரும் தாக்கம் மிகுதியாக உள்ளது. வெளியிடுவதற்கு முன்னதான பார்வைக்குட்படுத்தியபோது, ஈழத்தின் துயர் மிகுந்த பல காட்சிகளையும் ஏற்கனவே பார்த்திருந்தவரகளாக இருந்த எமது செய்திப்பிரிவினரே தொகுப்பு முடிந்தது சில நிமிடங்கள் வரை மெளனமாகிவிட்டார்கள். அனைவர் கண்களிலும் கண்ணீர்.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட இக் காணொளி தமிழகத்தில் தடைசெய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உண்டு. ஆயினும் தமிழர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டுமெனும் நோக்கில் அதை அப்படியே தருகின்றோம். இறுதியுத்தம் யாருக்கு ..?

உலகக்கோரிக்கையை ஏற்று விடுதலைப்புலிகள் போர்நிறுத்தம்

3 comments

ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

Friday, April 24, 2009

புலிகளின் தலைவரை கோட்டை விட்டது சிறிலங்கா கடற்படை?

1 comments

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிறிலங்கா கடற்படை கோட்டை விட்டுவிட்டதாக, களத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.விடுதலை புலிகளின் கடல் நகர்வு குறித்து சிறிலங்கா இராணுவத்தலைமைக்கும், கடற்படைக்கும் இடையே முரண்பாடான தகவல்களும், கருத்து மோதல்களும் இடம்பெற்றுருப்பதாக கொழும்பு தகவல்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தன. நீர் மூழ்கி கப்பல் மூலம் பிரபாகரன் நகர்வை மேற்கொண்டிருக்கலாம் எனவும்,
மேலும் வாசிக்க

Thursday, April 23, 2009

இனி உங்களுக்கு என்ன சொல்ல? - வன்னியின் கதறல் (வீடியோ)

0 comments

இனி உங்களுக்கு என்ன சொல்ல? வன்னியிலிருந்து ஒரு கண்ணீர் குரல். கண்ணிருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய், முடமாகிப்போனவர்களிடம், எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளில் ஒலிக்கும் வன்னியின் கதறல்.

வாய்திறக்குமா..? வாளாதிருக்குமா..? இவ் வையகம்.

பாரக்க

Wednesday, April 22, 2009

தூரத்தே தெரியும் நம்பிக்கை வெளிச்சம்

1 comments


ஆழ்கடலில, படகுப் பயணம். நடுநிசியில் பெருவிபத்து. இருளில் கடலில் வீசப்படுகின்றோம். ஏதொ ஒன்று தட்டுப்பட அதையே பிடித்து அலைகளின் நடுவே நீந்துகின்றோம். அடித்துத் தூக்கும் அலைகளின் மேலாய் தூரத்தே ஒரு சிறு வெளிச்சம். யாரோ எவரோ ? ஏதோ ஓர் இடம் இருக்கிறதென்னும் நம்பிக்கையில் அலைகளை எதிர்த்து நீத்துகின்றோம் அந்த வெளிச்சம் இருக்கும் திசையில். இப்படித்தான் இன்று புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களின் இயல்புநிலைப் போராட்டம். ஆனால் நீந்திச் செல்லச் செல்ல தூரத்தில் தெரியும் சிறு வெளிச்சம் மெல்ல மெல்ல பெரிதாகின்றது. சோர்ந்து போன மக்களுக்கு நம்பிக்கை தருகின்றது.

அப்பாவி மக்கள் மீது அரச படைகள் எறிகணைத் தாக்குதல் - பிபிசிக்கு விடுதலைப்புலிகள்

0 comments

பாதுகாப்புவலயத்தில் உள்ள அப்பாவிப் பொது மக்கள் மீது அரச படைகள் எறிகணைத் தாக்குதலை மேற்கொள்கின்றன என பிபிசி க்கு விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளர் திலீபன் பாதுகாப்பு வலயத்திற்குள் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் பகுதியிலிருந்து நேரடியான ஒலிவழிச் செவ்வியினை வழங்கியுள்ளார்.

அதே செவ்வியின் தொடர்ச்சியில் பிபிசியின் செய்தியாளர் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் இது குறித்துக் கேட்டபோது அரசபடைகள் எறிகணைவீச்சுக்கள் எதையும் செய்யவில்லை எனவும் தாங்கள் சிறு ஆயுதங்கள் மூலமே தாக்குதல் செய்வதாகவும், தெரிவிக்கின்றார்.

செவ்வியை நேரடியாகக் கேட்க

Monday, April 20, 2009

இந்திய இராணுவ உதவிக்கு எதிரான வழக்கறிஞர் செவ்வி

1 comments

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தில் இந்திய இராணுவ உதவி, மற்றும் பொருளாதார உதவி, இந்திய இராணுவ வீரர்களின் இழப்பு என்பன குறித்து வழக்கொன்றினைத் தாக்கல் செய்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் திரு: கருப்பன் அவர்களுடனான கானொளிச் செவ்வி.

Wednesday, April 15, 2009

சென்னையில் 3வது நாளாக 100 பெண்கள் தொடரும் சாகும் வரையிலான உண்ணா நிலைப் போராட்டம்

0 comments


சென்னையில் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து மரணமான முத்துக்குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நூறு பெண்கள் முன்னெடுத்திருக்கும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றா வது நாளாகவும் தொடர்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, வெவ்வேறு அமைப்புகளிலிருந்து வந்த பெண்கள்,பேராசிரியை சரஸ்வதி தலைமையில் போரினால் ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாக்க கோரி, இந்தச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு

Tuesday, April 14, 2009

பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் உள் நுழைய பயங்கரத் தாக்குதலை ஆரம்பித்தது சிறிலங்கா

0 comments


தன்னிச்சையாகத் தானே அறிவித்த புத்தாண்டுகாலப் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று அதி காலைமுதல் அதி உச்ச தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தினுள் பாவித்தவண்ணம் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிறிலங்காப் படைகள் உள் நுழைய முனைவதாக வன்னியிலிருந்து சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் போராளிகள் மறைந்திருப்பதாக் கூறிக்கொண்டு நிராயுதபாணிகளான மக்கள் மீது போர் தொடுத்து மாபெரும் இன அழிப்பொன்றினை சிறிலங்கா அரசு முன்னெடுத்திருப்பதாகத் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

Sunday, April 12, 2009

48 மணிநேரப் போர்நிறத்தமொன்றை சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

0 comments
சர்வதேச நாடுகளில் தன்னிச்சையாகத் தமிழ்மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களின் காரணமாக சிறிலங்கா அரசு போர்நிறுத்மொன்றை அறிவிப்பது குறித்து அரச மட்டத்தில் ஆராயப்படுவதாகச் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில்,

மேலதிக செய்திகள்

இவர்களுக்கு என்ன சொல்லப் போகின்றீர்கள்..?

0 comments
குழந்தைகள் எல்லோரும் வெள்ளையுள்ளத்துடனேயே பிறக்கின்றார்கள். பின் அவர்களது வாழ்நிலையை மாற்றி விடுவதில், சூழலுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு செவ்வியில், தமிழர்களுக்காகப் போராட வேண்டுமெனும் எண்ணம் தோன்ற, தனது நான்காவது வயதில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரமும் ஒரு காரணம் என்று சொன்னார். இளவயதுகளில் மனதில் பதிந்து விடும் நினைவுகள் எளிதில் மறைந்துவிடுவதோ, மறக்கப்படமுடிவதோ இல்லை.

மேலும்

விஜய.டி.ராஜேந்தர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா ?

0 comments
http://4tamilmedia.com/images/stories/demo/artist/d_r.jpgதமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அதரவாகவும், இந்திய இறையாண்மைக்க எதிராகவும் பேசினார்கள் என்ற குற்றச் சாட்டில், தமிழுணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான சீமான், பெரியார் பாசறை கொளத்தூர் மணி

மேலும்

Saturday, April 11, 2009

பிரித்தானியாவில் வரலாறு காணாத மக்கள் எழுச்சி

0 comments
பிரித்தானியாவில் கடந்த ஒரு வார காலமாகவே தன்னெழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் இன்று மேலும் ஒரு உச்சநிலையாக, பிரித்தானி தமிழர் பேரவை விடுத்த அழைப்பை ஏற்று சுமார் இரண்டுலட்சம் தமிழ்மக்கள் பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் அணிதிரண்டனர். இன்று இலண்டன நேரம் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் சுமார் ஆறு மைல்களுக்கமதிகமான நீளமாக நீண்டிருந்தது.

மேலும் அறிய

இப் பேரணிகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை பிரதிநிதி சுரேன் அவர்களின் கருத்து ஒலி வடிவில்:

Friday, April 10, 2009

தற்போது நடைபெற்று வரும் இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் மடிகின்ற இந்திய இராணுவ வீரர்கள் விவகாரம் குறித்த பொது நல வழக்கு தாக்கல்

0 comments
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கதின் முன்னாள் தலைவர் கருப்பன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தற்போதைய நடுவனரசு
ஆயிரக்கணக்கான் இந்திய இராணுவ

மேலும் அறிய

Tuesday, April 7, 2009

ஐரோப்பிய நாடுகளெங்கும் ஆர்பரித்தெழும் தமிழர்கள்.

0 comments

கடந்த இருபத்தைந்து வருடங்களுக்குமதிகமாக தாயகம் கோரிப் போராடும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவாகப் பல வருடங்களாகப் புலம் பெயர் தேசங்களிலும் அமைதிவழிப் போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் எனப் பல நடந்து வந்திருக்கின்றன. அன்மைக்காலத்தில் வன்னிப் பெரு நிலப்பரப்பில், போர் அதி உச்சநிலை அடைந்திருந்த போதும், புலம் பெயர் தேசங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மிகுந்த ஒழுங்கமைப்புடனேயே நடைபெற்று வந்தன.

நேற்று வன்னிப் பெருநிலப்பரப்புச் சமர்க்களங்களில் கொல்லப்பட்ட பல போராளிகளினதும், பொதுமக்களினதும், உடல்கள் கருகியும் சுருங்கியும் காணப்பட்ட படங்கள் படைதரப்பின் இணையத்தளங்களில் பிரசுரமானதும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் என அரசு அறிவித்ததும், பாதுகாப்ப வலயத்துள் சரணடைந்த மக்கள் மீது தாக்குதல் தொடுக்க அரசு முயல்கிறது என்ற ஊகத்தைப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஏனெனில் அவர்களது வாழ்நாளில் எத்தனையோ தடவைகள் அரசு இப்படி அறிவிப்பதும், அதன் பின் பலியெடுப்பதும் நடந்து வந்திருக்கிறது. இதை ஊகித்துக் கொண்ட தமிழ்மக்கள் உடனடியாகத் தாங்கள் வாழும் நாடுகளில் வீதிகளுக்க வந்து போராட்டத் தொடங்கினார்கள். இது வரை அமைதியாகப் போராட்டம் நடத்திய தமிழ்மக்கள் ஆர்பரித் தெழுந்தார்கள். பிரதான இடங்களில் உள்ள முக்கிய சாலைகளை மறித்தார்கள். பேசவந்த பெரியவர்களின் வசீகர வாக்குறுதிகளைக் கேட்க மறுத்தார்கள். செயல் ஒன்றே தேவை அது உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றே எனப் பலமாய் சொன்னார்கள். பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனச் சொல்லி வீதிகளிலேயே அமர்ந்தார்கள்.

தொடர்ந்து வாசிக்க

Monday, April 6, 2009

இந்தியனெனும் பெருமை கொல், தமிழனாய் பெருமை கொள்

2 comments



தமிழத்தின் தாயுறவே! புலத்தில் உறவுகளையும், புலம் பெயர் தெசத்தில் வாழ்வினையும் தொலைத்து விட்டு நிற்கும் புலம் பெய தேசத்துறவொன்றின் இந்த மடலுக்காய் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கு, ஒன்றித்து வாசி, உடன் செயற்படு. உன் உடன் பிறப்பெனும் உரிமையில் கேட்கின்றேன்.

ஈழத்தின் இறுதிக்கட்டப் போரினை இன்று முடித்து விடுவோம், நாளை முடித்து விடுவோம் என்று இறுமாந்திருந்த சிங்களத்தின் சிந்தனைகளை , சீறியெழுந்த போராளிகள் சிதறடித்தது கண்டு கலங்கிற்று சிங்களச் சிறிலங்கா. ஈந்த நாட்களுக்குள் முடித்து விடும் என்று நம்பி, இந்தியத் தேர்தலுக்கும்ட நாள் குறித்தாகி விட்ட நிலையில், இன்னமும் போர் முடியவில்லை என்பதும், கேள்வி மேல் கேள்வி கேட்கும் சர்வ தேசங்களுக்கு இந்தியாவைக் கேளுங்கள் என சிங்களம் கைகாட்டுவதும் மத்திய அரசுக்கு மகா தலையிடியாயிற்று. இந்நிலையில் எப்பாடு பட்டாயினும், இன்னும் ஒரு வாரத்தில் போரை முடித்துவிட வேண்டும் என விரும்பிய இரு நாடும், நாகரீகம் தொலைத்து நச்சுக் குண்களை நம் மக்கள் மீது பாவிக்கத் தொடங்கிவிட்டன. நரபலி எடுக்கத் தொடங்கிவிட்டன. தொடர்ந்து வாசிக்க

Saturday, April 4, 2009

அவுஸ்ரேலியாவில் நடந்தது என்ன? வீடியோ

0 comments

அரசு எவ்வழி! குடிகள் அவ்வழி! No Comments!

வீடியோ இணைப்பு

டுவிட்டரை வாங்குமா கூகுள்?

0 comments

இணையத்தில் உலாவரும் லேட்டஸ்ட் வதந்தி டுவிட்டரை வாங்குவதற்கு கூகுள் முதல் கட்ட பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது என்பதாகும். இன்னொரு டுவிட்டரை உருவாக்க கூகுளுக்கு அதிக நேரம் ஆகாது. ஆனாலும் டுவிட்டரின் பவர் கூகுளுக்கு தெரிந்ததாலேயே அதை வாங்குவதற்கு தயாராவதாக கருதப்படுகிறது.

டுவிட்டரை கூகுள் வாங்கினால் அது இணைய வளர்ச்சிக்கு நன்மை , தீமை, இரண்டும் , வாக்கெடுப்புக்கு

Thursday, April 2, 2009

இலங்கையில் போர் நிறுத்தமும், வணங்கா மண்ணும்

0 comments

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்கே மக்கள் யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். தாய்மார்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் காங்கிரஸ் தலைமைப்பீடமும், முக்கிய உறுப்பினர்களும், திடீர் ஞானோதயம் பெற்றவர் போல் குரல் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு முழுவதுமே திரண்டெழுந்து இந்த அநிதிக்கு எதிராக ஆர்பரித்த போதெல்லாம், கண்டு கொள்ளாதிருந்த காங்கிரஸ் தலைமைக்கு என்ன இந்தத் திடீர் பாசம் என எண்ணத் தோன்றுவது இயல்பு.

ஈழத் தமிழ் மக்கள் மீதான பரிவை இரண்டு தசாப்த காலமாக, நீறுபூத்த நெருப்பெனத் தங்கள் இதயங்களுக்குள் மறைத்து வைத்திருந்த தாய் தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தா.பாண்டியன் விடுத்த அழைப்பில் விழித்துக் கொண்டது. ஆர்பரித்தெழந்த மக்கள் உணர்வுகளை கண்டு அதிர்ந்து போன அரசியற் கட்சிகளெல்லாம் தாமும் ஆதரவுதான் என்பதில் அக்றைகொண்டன. இப்படியாகுமா என எண்ணியிருந்த சிலருக்கு இது பெரும் இடியாகவே இருந்தது. குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காறருக்கு இதுவரை காலமும் தாம் கட்டிவைத்த கட்டுக் குலைந்து போனதாகவே தோன்றியது. ஆனாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தாமும் உள்ளதாகவே காட்டிக் கொண்டனர். தமிழக முதல்வர் முடிந்தவரைக்கும் அறிக்கைப் போராட்டங்களை நடத்திக் காங்கிரசின் கைப்பிள்ளையாக நடந்து கொண்டார்.

இந்த நேரத்தில்தான் முத்துக்குமரன், ஈழத்தமிழர்களுக்காய் தியாக வேள்வி வளர்த்தான். அரசியல்பாணி ஆர்ப்பாட்டங்களில் ஓடிக்கொண்டிருந்த கட்சிகளும். கட்சிப் பிரமுகர்களும் ஒரு கணம் ஆடிப்போயினர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் மக்கள் தங்கள் உள உணர்வின் வெளிப்பாட்டில் வேஷங்கட்டிக் கோஷம் போட்டவர்களுக்கு எதிர்பினைக் காட்டினார்கள். ஆனாலும் அரசியலில் பழந்தின்று கொட்டைபோட்ட அரசியற்தலைவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அசந்து விடுவார்களா? தேர்தல் வரட்டும் தேற்றிவிடலாம் என கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டனர்.

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு என்பது தமிழக மக்களின் மனஉணர்வாக இருந்தாலும், தேர்தல் என்று வரும் போது மக்கள் தேடிக் கொள்ளும் பிரச்சனைகள் வேறாகத்தான் இருக்கும் என்பதே அரசில்வாதிகளதும், அரசியற்துறை ஆய்வாளர்களதும் கணிப்பாக இருந்தது. ஆனால் அந்த நிலையில் சற்ற மாற்றம் தெரிவது போலவும், அந்த மாற்றத்திற்கு அரசியலில் நிலை கொள்ளாதிருந்த சிலர் பேச்சுக்கள் காரணமாக இருப்தையும் கண்டு கொண்டதும், சீமான் ,கொளத்தூர் மணி, உட்டபட்ட சில பேச்சாளர்களை தேர்தல் முடியும் வரை வெளியே வராதவாறு சிறையில் தள்ளியது தமிழக அரசு. அதன் பிறகு அடங்கிப் போகும் ஈழ உணர்வு என்று எண்ணியதுபோலும். ஆனால் தமிழக மக்களின் மனங்களில் முத்துக்குமரன் முதலான தியாகிகளினால் மூட்டப்பட்ட தீ கனன்று கொண்டேயிருக்கிறது. சீமான் போன்றொர் சிறைப்பிடிக்கப்பட வேண்டுமென அதுவரையில் ஆர்பரித்த அதிமுக தலைவி கூட ஈழத்தமிழர்களுக்காக எழுந்திருக்கும் ஆதரவு கண்டு, அடையாள உண்ணாவிரதமிருந்தார்.
தொடர்ந்து வாசிக்கவும், வீடியோவைக் காணவும்

Wednesday, April 1, 2009

திருமா செய்தது சரியா..?

0 comments

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், ஈழத்தமிழர்பிரச்சனையில் தீவிரமாகச் செயற்பட்டவர். விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை மிகுதியாக நேசிப்பவர். ஆயினும் இப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். இது ஈழவிடுதலை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது.

இந்நிலையில் தொல். திருமாவளவனின் இந்தப் பேட்டி அவரது சுயநிலையை ஒரளவுக்கு விளக்குவதாக இருக்கிறது.ஒடுக்கபட்ட ஒரு சமூகத்தின் தலைமைப்பொறுப்பிலிருப்பவரின் தொலை நோக்குப் பார்வையைத் துலக்குவதாகவும் இருக்கிறது. திருமாவுக்கு என்னாச்சு என்னும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இருக்கிறது. திருமாவை போற்றுபவர்கள் தூற்றுபவர்கள் எவராயினும் அவசியம் பார்க்க வேண்டிய செவ்வி இது.

ஊடகவியலாளர் சுதாங்கனின் கேள்விகளும், திருமாவின் பதில்களும் மிக நேர்த்தியாக வருகிறது. கீழேயுள்ள இணைப்புக்களில் தொடர்ச்சியாகக் காணலாம்.

இணைப்புக்குச் செல்ல முன் கீழேயுள்ள குறிப்பினையும் வாசித்துச் செல்லுங்களேன்.


thamilbest.com இணையத்தளம், இனிவரும் காலங்களில், 4tamilmedia.com இணையத்தளத்துடன் இணைந்து, புதிய மேம்படுத்தல்களுடன் இனிய சேவையினை வழங்கவுள்ளதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். தயவு செய்து உறுப்பினர்கள் அனைவரும் மீளவும் உங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

மேலும் உங்கள் வலைப்பதிவிலிருந்து வாக்களிக்கும் வசதியும் புதிதாக ஏற்படுத்தப்ட்டிருக்கிறது என்பதையும் அறியத்தருகின்றோம். அதை செயற்படுத்த கீழ் உள்ள நிரலை blogger.com இல் layout - edit HTML சென்று Expand Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து இன் பின்னால் இணையுங்கள். அதன் பின் நீங்கள் குறிப்பிட்ட பதிவை திறந்து அதை thamilbest.com இல் இணைக்கலாம் மற்றும் வாக்களிக்கலாம்.