Sunday, May 31, 2009

இனவெறித் தாக்குதலுக்கு எதிராக மெல்பேர்னில் மாணவர் பேரணி

0 comments



கடந்த ஞாயிறன்று அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய மாணவரான 25 வயதுடைய சரவணகுமாரை இனவெறி காரணமாக ஸ்க்ரூ டிரைவரில் கொடூரமாகத் தாக்கிக் காயப்படுத்திய சம்பவத்தை அடுத்து கொதிப்படைந்த இந்திய மாணவர்கள் இது போன்று முன்னரும் நிகழ்ந்துள்ள பல இனவெறித் தாக்குதல்களையும் கண்டித்து மாபெரும் அமைதிப் பேரணியை இன்று மெல்பேர்னில் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

அங்கவை, சங்கவை அரட்டையில் இன்று

0 comments

வாங்க சார் வாங்க!, வாங்க மேடம் வாங்க! அரட்டை அடிப்போமா..?

" ஜோதியில ஐக்கியமாயிடச் சொல்றீங்க

..ம்... பாத்துப் பண்ணுங்கப்பா.."

"ஆஹா! நாம நாட்டு நடப்பு பேச வந்த நேரம் பொம்பளைங்க பொறுப்புக்களில வாறாங்களோ..?"

மேலும் பார்க்க, படிக்க

சீனாவில் கனியச்சுரங்க விபத்து 30 பேரைப் பலி கொண்டது

0 comments

சனிக்கிழமை சீனாவின் தென்மேற்கு நகரமான சொங்க்கிங் இல் உள்ள நிலக்கீழ் எண்ணெய்ச் சுரங்கமொன்றில் கசிந்த விஷ வாயுவினால் 30 பேர் இதுவரை பலியானதுடன் 59 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் உள்ளே வெடிப்பு நிகழ முன்னர் இவர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.காலை 11 மணியளவில் கியூஜியாங் பிரதேசத்தின் அன்வென் நகரிலுள்ள இந்த தொங்குவா கனியச் சுரங்கத்தில் விஷவாயு கசிந்து வெடிப்பு நிகழும் சமயத்தில்..

மேலும் படிக்க..

Saturday, May 30, 2009

கலிபோர்னியாவில் ஆர்னல்ட் தலைமையில் பாரிய லேசர்கதிர் மின்நிலையம் திறப்பு

1 comments

பாசிமணி அளவேயுள்ள உருளையில் ஹைட்ரஜன் மூலக்கூற்று அணுக்கருக்களை 192 லேசர் கதிர்களைக் கொண்டு வெப்பமேற்றுவதன் மூலம் சூரியனுக்கு நிகரான சக்தியை உருவாக்கக் கூடிய பரிசோதனை ஆய்வுகூடம் ஒன்று கலிபோர்னியாவின் லாரன்ஸ் லைவ்மோர் விஞ்ஞானக் கூடத்தில் நேற்று(வெள்ளி) ஆளுநரும் முன்னாள் ஹாலிவுட் நடிகருமான ஆர்னல்ட் சொசனாங்கர் தலைமையில் திறக்கப்பட்டது. இதுவே உலகின் மிகப் பெரிய மற்றும் அதிசக்தி வாய்ந்த லேசர் சக்திப் பொறியாகும்.

மேலும் படிக்க...

நடக்க வேண்டும் நாம் இன்னும் தூரம்

0 comments


வன்னியில் 20 ஆயிரத்திற்கும் அதிமான மக்களை படுகொலை செய்து தடையங்களை அழித்துள்ளது ராஜபக்சே அரசு. சிறீ லங்காவில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக ஐ.நா மனித உரிமை சபையின் 11வது சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆதரவுடன் ஜெர்மனி அழைப்பு விடுத்திருந்தது.

அங்கவை சங்கவை அரட்டை அறிமுகம்

0 comments

நாங்க அங்கவை சங்கவை. அக்கா தங்கச்சின்னு வைச்சுக்கிட்டாலும் சரி, அப்பிடில்ல சிநேகிதகள்னு முடிவுபண்ணிக்கிட்டீங்கன்னாலும் சரி, எங்களுக்குப் பிரச்சனை இல்ல. நாங்க இனைஞ்சே இருப்போம். ஆனா சும்மா இருக்க மாட்டோம். எங்க காதில விழுகிற செய்திகளுக்கு கமென்ட் அடிச்சுக்கிட்டே இருப்போம். அது அறுவையா இருக்கலாம், அலட்டலா இருக்கலாம், அர்தமுள்ளதாகவும், இருக்கலாம். அதெல்லாம் எடுதுக்கிற ஒங்க அனுபவத்தைப் பொறுத்தது.
தொடர்ந்த வாசிக்க

கர்நாடக மந்திரியின் திருமணச் செலவு ரூ 20 கோடி

0 comments

கர்நாடக சுகாதார அமைச்சர் சிரிராமுலு தனது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான 27 வயதுடைய சுரேஷ் பாபுவின் திருமணத்துக்கு சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவளித்துள்ளதாக நம்பப்படுகின்றது.இத் திருமண வைபவத்தில் கர்நாடகாவின் முக்கிய மந்திரிகள் மற்றும் ஆந்திராவின் எதியூரப்பா உட்பட அவரது கபினெட் உறுப்பினர்கள் அனைவரும் முக்கிய அரசியற் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க...

உக்ரைனின் நிலக்கீழ் எரிபொருட் குழாய்கள்(gas pipes) விவாகாரம் - புட்டின் எச்சரிக்கை

0 comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் கால்வாசி சக்தித் தேவை ரஷ்யாவின் கனிய எரிசக்தி(gas) மூலமே நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இவ்வெரிசக்தி விநியோகம் பெரும்பாலும் (80%) உக்ரேயினூடாகவே நிலக்கீழ் குழாய்கள் மூலம் கொண்டுவரப்படுகின்றது. எனினும் கடந்த 7 வருடங்களில் எரிசக்தி விநியோகத்துக்கான வரிப்பணமாக உக்ரெயின் செலுத்தவுள்ள 5 பில்லியன் டாலர்களை ஏற்க முடியாது என மாஸ்கோ அறிவித்துள்ள நிலையில் உக்ரேயின் ஜூன் 7 ம் திகதி தனது வரிப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு புதிய சக்திப் பிரச்சனையை (gas war) ஐரோப்பா முகங் கொடுக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்

மேலும் வாசிக்க...

Friday, May 29, 2009

மறைக்கப்பட்ட தமிழர் புதைகுழிகள் வெளிச்சத்துக்கு வந்தன - 20 000 பேர் படுகொலை

0 comments

இங்கிலாந்தின் டைம்ஸ் நாளிதழால் ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கையின் யுத்தப் பாதுகாப்புவலயத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை மீதான ஆய்வின் மூலம் வெளியுலகிற்கு மறைக்கப்பட்டு முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழரின் இன அழிப்பை உறுதி செய்யும் படங்கள் இன்று அதன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

Thursday, May 28, 2009

சூப்பர்ஸ்டார், கலாபவன், இணையும் எந்திரன்.

0 comments

புரட்சித் தலைவர் எம்.ஜி ஆர் நடிக்கும் படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக உள்ளது போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் படங்களில் நகைச்சவைக்காட்சிகள் சிறப்பாக இருக்கம். அவருடைய படங்களில், அவருடைய பாத்திரத்துக்கு இணையாகவே நகைச்சுவைப் பாத்திரங்களும், உருவாக்கப்பட்டிருக்கும்.

தொடரும் செய்திகள்

வால்ட் டிஸ்னியின் பூமி

0 comments

வால்ட் டிஸ்னி என்ற பேரைக் கேட்டதுமே புகழ்பெற்ற கார்ட்டூன் உருவங்களும் மிகச் சிறந்த சிறுவர் நாவல்களைக் கதையாகக் கொண்ட வர்ணஜாலத் திரைப்படங்களுமே எம் ஞாபகத்துக்கு வரும். ஆனால் முதன் முறையாக பிபிசி இன் இயற்கை வரலாற்றுப் பிரிவுடன்(BBC Natural History) சேர்ந்து டிஸ்னி 'பூமி' (Earth) என்ற விவரணப் படத்தை உலகப்புவி தினமான ஏப்ரல் 22ம் தேதி வெளியிட்டிருக்கிறது. இது உங்களுக்கு அதிசயமான செய்தியாக இருக்கலாம். ஆனால் தாமதிக்காமல் பூமியைப் பார்த்து விடுவது பேரதிசயத்தை உங்களுக்குக் கொண்டு வரும்.

மேலும் வாசிக்க...

Wednesday, May 27, 2009

உலகப் பொருளாதார மந்த நிலை இவ்வருடம் மாறும் - பொருளியல் வல்லுநர்கள் கருத்து

0 comments

வாசிங்டனில் இன்று வெளியிடப்பட்ட சர்வதேச வர்த்தகப் பொருளாதார சங்கத்தின்(NABE) கூட்டறிக்கையில் 90% வீதமான பொருளியல் வல்லுநர்கள் உலகளாவிய பொருளாதார மந்த நிலை இவ்வருடம் மாறும் என்றும் முன்னேற்றம் சற்று முன்பின்னாக இருக்கலாம் என்றும் ஒருமிக்கக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவ்வறிக்கை NABE ஐச் சேர்ந்த முதன்மை வல்லுநர்கள் மூலம் ஒரு கருத்துக்கணிப்பிலிருந்து தயாரிக்கப்பட்டதுடன் வெளித்தோற்றம் பொதுப்படையாக அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட NABE இன் அவைத் தலைவர்(Chairman) 'பென் பேர்னான்க்கி' மற்றும் அவரது உதவியாளர்களால் வடிவமைக்கப்பட்டதாகும்.

மேலும் படிக்க...

இன்னுமொரு கொரிய யுத்தம்?

0 comments

வடகொரியா இனிமேலும் தான் 1953 ஆண்டின் அமெரிக்காவின் மேற்பார்வையுடனான யுத்தநிறுத்த ஒப்பந்தத்துடன் கட்டுப்படப் போவதில்லை என்றும் தமது நாட்டிற்கெதிராகத் தொழிற்பட்டு எமது சமாதான ஏவுகணைகளைத் தேடவோ அல்லது தடுக்கவோ முனையும் எந்தவொரு மிகச்சிறிய பகையாளியும் உடனடியான கடுமையான இராணுவத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்றும் அறிவித்துள்ளது.இவ்வெச்சரிக்கை தென்கொரியா அமெரிக்காவுடன் ஆயுதக் குறைப்பு செயற்திட்டம் ஒன்றில் இணைந்ததன் பின்னர் உடனடியாக இன்று(புதன்) விடப்பட்டுள்ளது. மேலும் வடகொரியா தனது மேற்குக் கரையோரப் பகுதியில் இடம்பெறும் கப்பற் போக்குவரத்துக்கான பாதுகாப்பை இனிமேலும் உறுதி செய்ய முடியாது என்றும் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் PSI(ஆயுதக் குறைப்பு ஒப்பம்) செயற்திட்டத்துடன் இணைவது என்ற சியோலின்(தென்கொரிய அரசு) நிலைப்பாடு யுத்த அறிவிப்புக்கு நிகரானது என்பதே அதிபர் 'ப்யொங்யாங்' இன் முடிவு என்று அந்த அறிக்கையில் மீளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

ஐ.நா மனித உரிமை பேரவையின் நேற்றைய விவாதத்தில்...

0 comments

நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை), ஜெனீவாவில், மனித உரிமை பேரவையின், சிறிலங்கா தொடர்பான விசேட அமர்வு ஆரம்பமாகியது. இதன் போது, மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள், இரு அணிகளாக பிளவு பட்டு, சிறிலங்காவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.

தொடர்ந்து வாசிக்க

Tuesday, May 26, 2009

தலிபான்களை ஒடுக்குவதில் சீனாவின் பங்களிப்பை நாடும் அமெரிக்கா

0 comments

ஸ்வாட் பள்ளத்தாக்கின் முக்கிய வர்த்தக நகரமான 'மிங்கோரா' இன் முக்கிய பகுதிகளை பாகிஸ்தானிய இராணுவம் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் பெரும் அவதிகளுக்குள்ளாகி வருகின்றனர். கிட்டதட்ட 375 000 மக்களுக்கான வீடுகளைக் கொண்ட அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளத் திரும்புமாறு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ள வேளையில் அவர்கள் வசம் போதிய உணவும்,குடிநீருமின்றி இன்னமும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.(இதுவரை ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை UN அறிக்கைப்படி கிட்டத்தட்ட 24 லட்சம்)

மேலும் வாசிக்க...

கல்கத்தாவைத் தாக்கிய 'அயிலா' புயல் : வங்காளதேசத்தில் 33 பேர் பலி

0 comments

கடந்த இரு நாட்களாக வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் நேற்று காலை கல்கத்தா நகரைத் தாக்கி நிலைகுலையச் செய்தது.'அயிலா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சைக்கிளோன் புயல் காரணமாக வெள்ளத்தினாலும் புயலினாலும்(60 mph) வங்காளதேசத்தில் மட்டும் 5 லட்சம் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.கல்கத்தாவில் 7 பேர் கொல்லப்பட்டும் 500 மரங்கள் சரிந்தும் போக்குவரத்து முக்கிய சாலைகளில் ஆங்காங்கே ஸ்தம்பித்துள்ளது. மின்கம்பங்கள் அறுந்து தொங்குவதால் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களும், வியாபார ஸ்தாபனங்களும் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...

Monday, May 25, 2009

எயிட்ஸ் நோய்த்தடுப்பு மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது

0 comments

இன்றைய உலகின் தடுப்பு மருந்தே இல்லாத ஆட்கொல்லி நோய்களில் முதலிடத்தில் இருப்பது எயிட்ஸ் என்னும் தொற்று நோயாகும்.

குருதி மூலம் பரவக்கூடிய இந்நோய்,உடலின் பாலுறுப்புக்கள், மூக்கு,காது,வாய்,குதம் போன்ற பாகங்களுடனான நேரடித் தொடர்பில் தொற்றுவதன் மூலமும் உடலிலுள்ள பாயங்கள் மூலமும் பரவுகின்றது. 2007ம் ஆண்டுக் கணிப்பின் படி 33.2 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 330 000 சிறுவர்கள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இதனால் இறந்துள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதி ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியின் கீழ் வாழும் மக்கள் ஆவர்.

மேலும் படிக்க...

Sunday, May 24, 2009

'அட்லாண்டிஸ்' விண்கலம் கலிபோர்னியாவில் தரையிறக்கம்?

0 comments

கடந்த 18 ம் தேதி 'ஹபிள்' தொலைக்காட்டியின் சீர்திருத்தப் பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில் 3 நாள் பயணத்தின் பின்னர் 21ம் தேதி பூமியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்ட 'அட்லாண்டிஸ்' ஓடத்தின் வருகை, அது ஏவப்பட்ட அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள 'கென்னடி' விண்நிலையத்தில் 2 நாட்களுக்கும் மேலாக நிலவும் மோசமான காலநிலையால் (கடும் மழை) நேற்றும்(சனி) பிற்போடப்பட்டது. இதேவேளை இன்றும் இந்த நிலை தொடரும் பட்சத்தில் கலிபோர்னியாவின் 'எட்வார்ட்' விண்நிலையத்தில் உள்ள சாதகமான வானிலையைப் பயன்படுத்தி அங்கு தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

சீனா பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு அச்சுறுத்தலானது

0 comments

இந்தியா மிகச்சிறிய அளவே 'பீஜிங்' இன் ஆயுதக் கொள்வனவை அறிந்து வைத்திருப்பதாகவும் இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தானைக் காட்டிலும் மிகப் பெரிய அச்சுறுத்தல் எனவும் நியூ டெல்லியில் இன்று(ஞாயிறு) பத்திரிகை ஒன்றிற்கு விமானப்படைத் தலைமை அதிகாரி(IAF Chief) பேட்டியளித்துள்ளார்.962 ம் ஆண்டு கிட்டத்தட்ட 3500Km நீளமான இமாலய எல்லைப்பகுதியின் சில பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கு இரு நாடும் மோசமான யுத்தத்தை மேற்கொண்டன என்பதும் இரு தரப்புமே எதிரணி அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்திருப்பதாக ஒருவரும் இல்லாத சூனியப் பிரதேசத்தைச் சுட்டிக்காடின என்பதும்..

மேலும் வாசிக்க...

Saturday, May 23, 2009

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை

0 comments

உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் தனது சேவைக்காலத்தில் நிகழ்ந்த தவறுகளால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி மேலிட்டதன் காரணமாக தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி 'ரோ மூ ஹயுன்' (Roh Moo-hyun) இன்று(சனி) காலை 8.15a.m அளவில் தனது கிராமத்திலுள்ள மலையுச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இத்தகவல் அவரது சட்டத்தரணி 'மூன் ஜாயி'(Moon Jae) ஆல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க..

உலகெங்கும் தமிழ்மக்கள் மே22ல் கரிநாள் அனுட்டிப்பு

0 comments

வன்னி நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இனப்படுகொலையில், மனிதப் பேரவலத்துக்குள் பலியான , பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை நினைவு கூரும் நாளாக மே 22ந்திகதியை புலம்பெயர் தமிழ்மக்கள் பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.

இந்த நாளில் உலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழ் மக்கள் மீது நடைபெற்ற வன்முறைகளுக்கெதரிரான கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும், இப் பெருந்துயரில் பலியான தமிழ்மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணமும், கரிநாளாக அனுட்டிக்கப்பட்ட இந்நாளில், பல்வேறு நாடுகளிலும், படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களுக்கான அஞ்சலி வணக்க நிகழ்வுகளும், சிறிலங்கா அரசுக்கெதிரான கண்டனக் கவனயீர்ப்பு நிகழ்வுகளையும் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக அந்தந்த நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள செய்திக்குறிப்புக்கள்:

மேலும் வாசிக்க

இந்திய நாடாளுமன்றம் ஜூன் முதலாம் தேதி கூடும்

0 comments

இந்திய நாடாளுமன்றத்தில் 15வது புதிய அமச்சரவையின் முதலாவது கூட்டத்தொடர் ஜூன் 1ம் தேதி கூடவுள்ளது. பிரதமரை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த புதிய அமைச்சரவைக் குழு தங்களது பதவிப்பிரமாணங்களை ஜூன் 1ம் மற்றும் 2ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.

மேலும் வாசிக்க..

Friday, May 22, 2009

இலங்கைப் போர்க்குற்றங்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் - அமெரிக்க காங்கிரஸ்

0 comments

இலங்கையில் போர் முற்றிய போது சர்வதேச சமூகத்துக்கு மறைக்கப்பட்டு நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும் அவற்றை வழிநடத்திய அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ ராணுவக் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மிக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களான டாம் லாண்டோஸ் மனித உரிமைகள் கமிஷன் இன் அதிகாரிகள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குக் கடிதம் மற்றும் மின்னஞ்சல் ஊடாக வினவியுள்ளனர்.

மேலும் வாசிக்க

தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்

0 comments

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்பதை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க

Thursday, May 21, 2009

இடைத்தங்கல் முகாம் கொடுமைகளை வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகம்

0 comments

பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கு வந்த தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் நடைபெறும் கொடுமைகள் பற்றி மற்றுமொரு சர்வதேச ஊடகம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் Chanel4 தொலைக்காட்சிச் சேவை முதல் தடவையாக இடைத்தங்கல் முகாம்களில் வதியும் மக்களின் துயரங்களைப் பதிழவு செய்தது.

தொடர்ந்து வாசிக்க

Monday, May 18, 2009

இந்தியாவின் அனுசரனையில் அரசியல் தீர்வு காண விடுதலைப்புலிகள் விருப்பம்.

0 comments

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள முக்கியத்துவம் சார்நிலையில் முதன்மைபெறும் இந்தியாவுடன் இணைந்து, ஈழத்தமிழ்மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண விடுதலைப்புலிகள் விரும்புகின்றார்களென விடுதலைப்புலிகளின் சர்வதேச ராஜரீகத் தொடர்பாளர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். 'தமிழ்நெற்' இணையத்தளத்துக்கு இன்று அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இச் செவ்வியில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சாராம்சத் தொகுப்பினைச் சுருக்கமாகத் தருகின்றோம்.
தொடர்ந்து வாசிக்க

பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார் - விடுதலைப்புலிகள்.

0 comments

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விடுதலைப்புலிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் விடுதலைப்புலிகளின் தலைவரை பிடித்துவிட்டோம், தப்பிச் செல்கையில் சுடப்பட்டார் என பல்வேறு ஊகங்களினடிப்படையிலான செய்திகளை, அரசு சார் ஊடகங்களின் வாயிலாகப் பரப்புரை செய்தது. இதனால் தமிழமக்கள் அனைவரது மத்தியிலும், துயரம் குடிகொண்டது.
தொடர்ந்து வாசிக்க

30- 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதை மறைக்க முயல்கிறது சிறிலங்கா இராணுவம்

0 comments

வன்னி நிலப்பரப்பில் கடந்த சில தினங்களில் சிறிலங்க அரச படைகளின் பாரிய எறிகணை வீச்சுக்களால் கொல்லப்பட்ட 30 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையிலான மக்களின் உடலங்கள் ,பாதுகாப்பு வலயப்பிரதேசமெங்கும் சிதறிக்கிடக்கின்றன. இந்நிலையில் தாம் மேற்கொண்ட இந்த இன அழிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேசத்தின் கண்களுக்கு மறைக்கும் வகையில், அழித்தொழிக்கும் முயற்சியில் சிறிலங்காப்படைகள் ஈடுபடுவதாக, சர்வதேச ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க

Sunday, May 17, 2009

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்க . புனித பாப்பரசர் அவசர வேண்டுகோள்.

0 comments

போர்ப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு போரில் ஈடுபட்டுள்ள தரப்புக்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கும் புனித பாப்பரசர் ஜோன் போல், அவர்களுக்கு உடனடித் தேவையாகவிருக்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவதற்கு உதவி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

ஆரம்பமாகியது தமிழின அழிப்பின் இறுதிக்கட்டம்

0 comments
புதினம் இணையத்தளத்தின் வன்னிச் செய்தியாளர் இன்று காலையில் வழங்கிய செய்திக்குறிப்பு, புதினத்தால் வெளியிடப்படடுள்ளது. அதிலே தமிழின அழிப்பிற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புதினத்தின் செய்தியை அப்படியே தருகின்றோம்.
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து 'புதினம்' செய்தியாளர் செய்மதி தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட 'புதினம்' செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே:

தொடர்ந்து வாசிக்க

பிரபாகரன் வாழ்வும் வதந்தியும்

0 comments

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து நேற்று தமிழகத்தில் பரவலாக ஒரு வதந்தி எழுந்தது. சிறிலங்கா இராணுவதரப்பை மேற்கோள் காட்டி சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அப்படியான செய்திகள் எதையும் வெளியிடவில்லை எனவும், உறுதிப்படுத்தப்படாத சந்தேகங்களினடிப்படையில் சில உடலங்கள் தம்மிடம் கிடைத்துள்ளதாகவும், சொல்லித் தப்பித்துக் கொண்டது சிறிலங்கா இராணுவ தரப்பு. ஆனால் இந்தச் செய்தி இராணுவதரப்பினால் கசியவிடப்பட்டு, சிங்கள இணையத்தளங்களினால் பரப்பரை செய்யபட்டே வெளியில் வந்திருந்தது.

தொடர்ந்து வாசிக்க

சூயஸ் கால்வாய் தாண்டி செங்கடலால் வன்னிநோக்கி விரைகிறது 'வணங்காமன் '

0 comments

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காகன அத்தியாவசிய பொருட்களுடன் புறப்பட்ட 'வணங்கா மண்' - கருணைத்திட்ட நடவடிக்கை கப்பல், சுயெஸ் கால்வாயை கடந்து சிறிலங்காவை நோக்கிய தனது பயணத்தை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸின் Fos-Surp-Mer எனப்படும் இடத்தில் இருந்து தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்த இக்கப்பல் தற்போது தனது பயணத்தின் இராண்டாங் கட்டத்தில் முன்னேறுகிறது.

ஆயுதங்களை கீழே வைக்க தயார் !- சானல்4க்கு பத்மநாதன் செவ்வி

2 comments

பாதுகாப்பு வலயத்தினுள் இறுதிக்கட்ட தாக்குதல்கள் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளயில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உட்பட 2000 போராளிகள் இன்னமும் அங்குதான் இருப்பதாகவும், ஆயுதங்களை கைவிட்டு, மகக்கள் நலனை முன்னிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தையிலும், அரசியல் ஜனநாயக நீரோட்டத்திலும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அங்கிருந்து தகவல்கள் பிறப்பிக்கப்பட்டதாக, விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளர்.

தொடர்ந்து வாசிக்க

மக்களின் துப்பாக்கிகள் மெளனிக்கிறது - புலிகள், அனைத்துலகத்தின் மெளனம் ஏன்?

0 comments
"வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

இறுதி மணித்தியாலங்கள் எண்ணப்படுவதாக வன்னியிலிருந்து சூசை

0 comments
பாதுகாப்புவலயத்தில் மிகப்பெரும் பாரிய மனித இனப்படுகொலை நடைபெறும் இறுதி மணித்தியாலங்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என தமிழீழ விடுதலை புலிகளின் கடற்படை தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

மேலும் ஓடியோ இணைப்பு

Friday, May 15, 2009

காகிதக் கணைகளும் கலைந்து போகும் நம்பிக்கைகளும்.

0 comments

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியாவின் - பொது உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் [PEOPLE’S UNION FOR CIVIL LIBERTIES - PUCL] கொலைக் களமாகிவிட்ட - வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட - இலங்கையின் போர்ப் பிரதேசத்தில் இடம்பெறும் போர்க் குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளதாகிய செய்தி 15.05.09ல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் மீதும் இராணுவம் துப்பாக்கிச் சூடு, பலர் பலி

0 comments

வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று காலை முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

வன்னியில் இறுதிக்கட்ட போர் ஆரம்பம் - சர்வதேசமே மக்களைக் காப்பாற்ற விரையுங்கள்

0 comments

வன்னியில் சிறீலங்கா படையினர் தமது முழுப்படைக்கல சூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். ஆட்டிலறி எறிகணைஇ பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

Wednesday, May 13, 2009

தமிழ் மக்களை காப்பதற்கான துரித நடவடிக்கையில் ஒபாமா!

0 comments

சிறிலங்காவின் மோதல் பிரதேசத்தில் நடைபெறும் தொடர்ச்சியான மோதல்களினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி, மிகப்பெரிய அழிவாக மாற்றமடைய முன்னர் தடுக்க,அவசர நடவடிக்கை எடுக்கவேண்டி உள்ளது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தொடர்்ந்து வாசிக்க

பாதுகாப்பு சபையில் முதலாவது சம்பிரதாய விவாதம்!

0 comments
ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் பாதுகாப்பு சபையில், சிறிலங்கா விவகாரம் பற்றிய சம்பிரதாய பூர்வமான முதலாவது விவாதம் (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ராஜதந்திரிகள் கருத்து தெரிவிக்கையில், மோதல் வலயத்தில் சிக்கியுள்ள மக்கள் பிரதேசங்கள் மீது, சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் ஷெல் தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மௌரிஸ் ரிபர்ட் மற்றும் ஏணைய மேற்கத்தேய பிரதிநிதிகள், இம்மூடிய கதவு விவாதத்தினுள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

கனடா அடங்காப் பற்று ( நேரடி ஒளிபரப்பு)

0 comments
கனடாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடங்காப்பற்று நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினைக் காணலாம்
www.4tamilmedia.com
இங்கே காணலாம்.

இலங்கையில் இரத்த ஆறு ஓடும் அபாயம் இன்றிரவு ஏற்படலாம்.- சர்வதேச மன்னிப்பு சபை

0 comments

பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட 3 Km இற்கும் குறைவான பரப்பில் அகப்பட்டுள்ள கிட்டத்தட்ட 50 000 மக்கள் கனரக ஆயுதங்கள் மூலம் கொல்லப்படவும்,அதிக எண்ணிக்கையில் காயப்படுத்தப்படவும்,காயங்கள் குணப்படுத்தப்படாமல் நோயினாலும்,போசாக்கின்மையாலும் இறக்கவும் வாய்ப்புக்கள் பெருகி விட்டன என சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது. 'கடந்த சில தினங்களாக, இந்தியாவின் மிக வலுவான மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் கொல்லப்படுவதிலிருந்து சிறு பாதுகாப்பு வழங்கியிருந்த போதும் இன்று தேர்தல் முடிந்தவுடன் இந்த வழியும் அடைக்கப்பட்டு விடும். அத்துடன் இலங்கை அரசாங்கம் மேலும் மிக வலுவான கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தத் தொடங்கும்.

தொடர்ந்து வாசிக்க

கமல் வாக்களிக்கவில்லை.கலைஞர் வாக்களித்தார.?

0 comments

தமிழகத்தில் இன்று காலை முதல் பரபரப்பாக வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் வாக்களிப்புக்கான பல ஆயத்தங்களும், ஏற்பாடுகளும் நேர்த்தியாகத் திட்டமிட்டிருப்பதாகத் தேர்தல் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட போதிலும், பல பகுதிகளிலும் வாக்கப் பதிவுகளில் குழப்பங்கள் அல்லது தாமதங்கள் நிகழ்வதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க

Tuesday, May 12, 2009

பிரித்தானியா தமிழ்மக்களின் பாராளுமன்ற முற்றுகைப் போராட்டம்.

0 comments

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை, தமிழ் இளையோர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இளையவர்களின் கோரிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் ஆக்கபூர்வமான பதில் நடவடிக்கை உடனடியாக எடுக்கத்தவறி வருவதாகவும் கடந்த வார இறுதிப்பகுதியில் அரச படைகளின் தாக்குதல்களில் , மக்கள் உயிரிழப்புக்கள் அதிகமானதையும் கருத்திற் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக நேற்றைய தினம் தமது போராட்டத்தினை தீவிரப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

Monday, May 11, 2009

ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம்

0 comments
இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கூட்டம் முடிந்ததும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மிலிபாண்ட்,

பிரான்ஸ் பிரதிநிதி 'பேர்னர்ட் கௌச்னே' உடன் சேர்ந்து தலைமை வகித்து ஐ.நா பாதுகாப்புச் சபையின் சர்வதேச பிரதிநிதிகளுக்காகவும், இலங்கையில் செயற் திறனுடன் உள்ள அரச சார்பற்ற மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களுக்காகவும் நடத்திய கூட்டத்தில் பாதுகாப்புச்சபையின் 8 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து வாசிக்க

திமுகவின் தூண்டுதலா? திருமாவின் வேண்டுதலா?

1 comments

ஈழத்தமிழர்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதிப்பதில், தமிழக முதல்வருடன் போட்டி போடும் மற்றொருவராக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளன் மாறிவருவதாகத் தெரிகிறது. தமிழக அரசியற் தலைவர்களில் விடுதலைச்சிறுத்தைகளின் தவைலர் மீது மிகுந்த நேசமிக்க பல தமிழர்கள் ' இவரும் இப்படியா..? ' என முனுமுனுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

தேர்தலுக்காகத் திமுக காங்கிரஸ் கூட்டணியில் திருமா இணைந்ததை, தமிழகத்தில் அவரது அரசியற் தலைமைத்துவத்தின் அரசியற் தளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு சகித்துக் கொண்டவர்கள் கூட, தொடரும் அவரது போக்கைக் கண்டு கடும் அதிருப்தியுற்று வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

Sunday, May 10, 2009

மக்களே! பெரியாரின் பேரன் சீமான் கேட்கின்றேன். தமிழகத்திலிருந்து காங்கிரசை விரட்டுங்கள்.

0 comments

தமிழகத் தேர்தற்களத்தின் பிரச்சாரக் களத்தில், இறுதிக்ட்டப்பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருகிறார். சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து. திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசவுள்ளார்.

சென்னைத் தீவுத்திடலில் இன்று மாலை இப்பிரச்சாரக் கூட்டம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. சோனியாந்தியின் வருகையை முன்னிட்டு இப்பிரதேசங்களிலெல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆயிரக் கணக்கான பொலிசார் சென்னையின் பல பாகங்களிலும் குவிக்கபட்எருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

Saturday, May 9, 2009

ஒரே இரவில் ஆயிரக் கணக்கான தமிழ்மக்கள் கொலை. நள்ளிரவில் பயங்கரம்.

0 comments
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

பாதுகாப்புவலயத்தில் 180,000 பொதுமக்கள் எஞ்சியிருக்கிறார்கள் - சிறிலங்கா இராணுவம்

0 comments

யுத்த சூனிய பிரதேசத்தில், இன்னமும் 180,000 மக்கள் எஞ்சி இருப்பதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவத்தினரிடம் உள்ளதாகவும், வன்னிபிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ளஇராணுவத்தினரின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக இராணுவத்தினரின் 53,58 ஆம் படைப்பிரிவு தளபதிகளுடனும், 8 வது துரித நடவடிக்கை படைப்பிரிவின் தளபதியுடனும், வன்னி பிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நடாத்திய கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை சிறீலங்கா தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி செய்திப்பிரிவும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து வாசிக்க

சிறிலங்காவிலிருந்து 'Channel 4' செய்தியாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்

0 comments


சிறிலங்கா இடைத்தங்கல் முகாங்களிற்குள், நடக்கும் கொடுமைகள் பற்றி உலகின் கண்களுக்கு முதலில், நேரடி அனுபவங்களை உள்ளடக்கிய காட்சித்தொகுப்பின் மூலம் கொண்டு வந்த 'Channel 4' ஊடகவியலாளர்களின் விசாவினை, சிறிலங்கா அரசு இரத்து செய்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

Thursday, May 7, 2009

இனியும் இந்தத் தொலைக்காட்சிகள் உங்களுக்குத் தேவையா..?

1 comments

புலம் பெயர் தேசத்தில் வாழும் ஈழத்து உறவுகளுக்கென விழித்து, தமிழகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மடலை, அம் மடலில் குறிப்பிட்டுள்ள விடயங்கள், கேட்கப்படும் கேள்விகளில் உள்ள உண்மைகள், கருதி அப்படியே தருகின்றோம். ஆயினும் சில குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களின் பெயர்களை மட்டும் தவிர்த்திருக்கின்றோம்.

அன்பான புலம் பெயர் தமிழ் உறவுகளே,

உங்கள் உறவுகளின் சோகங்களில் நிலைகுலைந்திருக்கும் உங்களிடம் இப்போது இதனைக் கேட்பது நியாயமாகாது என்பதை நன்கறிவேன். ஆனால் இதை இப்போதுதான் உங்களிடம் கேட்க வேண்டியுமுள்ளது. நாளைக்கே காட்சிகள் மாறிப் போய்விடக் கூடும். ஆனால் நியாயங்களும் உண்மைகளும் மாறிப்போய்விடாது. ஆதலால் இம் மடல் உன்னைக் கவலைக்குள்ளாக்குமாயின் மன்னித்துவிடு.

Tuesday, May 5, 2009

சோனியாகாந்தி பிரச்சார மேடையில் கலைஞர் ..?

2 comments

இன்று தமிழக்திலும், புதுவையிலும், திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய, புதுடில்லியிலிருந்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னைக்கு வருகின்றார். முற்பகலில் டில்லியிலிருந்து விமான மூலம் சென்னைக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், புதுவைக்குச் செல்கின்றார் , பிற்பகலில் புதுவையில் நடைபெறும் தேர்தற் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின், மீண்டும் சென்னை வந்து , மாலை யில், சென்னைத் தீவுத்திடலில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

புத்தர் போல் ஜெயலலிதாவும் திடீர் ஞானம் பெற்றாரா..? - கனிமொழி

0 comments

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில், தமது கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ஆற்றவிருக்கும் செயற்திட்டங்கள் பற்றிப் பிரச்சாரம் செய்வதற்காக நடைபெறும் பிரச்சார மேடைகள், ஒரு கட்டத்தின் பின், எதிர் போட்டியாளரைத் தாக்கிப் பேசுவதே பிரச்சாரம் என்றாகிவிட்டது. இதற்கு விதிவிலக்காக ஒருசில பேச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞரின் மகளுமாகிய கனிமொழியும் ஒருவர். ஆனால் தற்போது அவரும் எதிர்த் தாக்குதல் பிரச்சாரத்தில் குதித்துவிட்டது போல் தெரிகிறது. திருவொற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், போதிமரத்து புத்தர்போல் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு திடீர் ஞானோதயம் வந்துள்ளமை ஆச்சரியமானது. ஆனால் அது வெறும் தேர்தற்கால அக்கறைதான். தேர்தல் முடிந்ததும் ஈழத்தமிழர் பிரச்சினையை அவர் மறந்து விடுவார் எனக் குறிப்பிட்டார்.
மேலும் வாசிக்க