Monday, August 11, 2008
ஒலிம்பிக் போட்டிகளில் இன்று
ஒலிம்பிக் போட்டிகளில் நாளாந்தம் நடைபெறுபவற்றில் முக்கியமானவைகளை, தொகுப்பாகத் தொகுத்துத் தருகின்றோம். இன்றைய போட்டிகள் குறித்த தொகுப்புக்களில்,
ஆடவர் பிரிவிற்கான துப்பாக்கி குறி பார்த்து சுடும் போட்டி (Shooting 10m) மூலம் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்க்ப்பதக்கை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்தார் பிண்ட்ரா அபினாவ்! மொத்தம் 700.5 புள்ளிகளை பெற்று அவர் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். இந்தியாவின் சண்டிகாரை வதிவிடமாக கொண்ட பிந்த்ராவிற்கு 26 வயதுதான் ஆகிறது. கடந்த அதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட போதும் 7 வது நிலையே இவருக்கு கிடைத்தது. தனது பயிற்சியாலும், விடா முயற்சியாலும் அவருடைய தங்கப்பதக்க கனவு இம்முறை நனவாயிற்று! ஏற்கனவே 699.1 புள்ளிகளுடன் 2006 ற்கான உலக சாம்பியன்சிப் போட்டிகளில் முதலாவது இடத்தையும், 2005 ற்கான ஆசிய சாம்பியன்சிப் போட்டிகளில் 4 ம் இடத்தையும் அவர் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 4tamilmedia
Labels:
4tamilmedia,
ஒலிம்பிக்,
விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment