Thursday, October 2, 2008

மூன்று தசாப்தங்களாக ஒடுக்கப்படும் ஈழத்தமிழ்மக்களுக்காக இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். - மத்திய குழு உறுப்பினர் டி. ராஜா

மகாத்மா காந்தி நினைவு நாளான இன்று தமிழகமெங்கும், ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடாத்தப் போவதாக, அகில இந்திய கம்யூனிஷ்ட் கட்சி அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜய்காந் ஆகியோரும் மேலும் பல கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி மாநிலத்தின் பல் வேறு பகுதிகளிலும் இப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சேப்பாக்கத்திலிருந்து நேரடி ஆடியோ செய்தியைக் கேட்க

2 comments:

தங்க முகுந்தன் said...

குரல் கொடுத்து தனது படையையும் அனுப்பி அவப்பெயர் கெட்டதோடு பாரதத்தின் பிரதமரையே கொன்ற நன்றி கெட்ட தமிழர்கள் நாங்கள் எப்படி உங்கள் முகங்களில் விழிப்பது என ஏங்கிக் கொண்டிருக்கிறோம். நீங்களோ நடந்ததை மறந்து எம்மை இன்னும் நேசிக்கிறீர்கள். கொன்றவர்கள் - அதாவது சம்பந்தப் பட்டவர்கள் இதுவரை சொன்னது - துக்ககரமான நிகழ்வு என்பது மாத்திரமே! அப்பாவிப் பொதுமக்களை அழிவிலிருந்து காப்பாற்ற இந்தியா ஆரம்ப காலங்களில் எடுத்த முயற்சிகளை தற்போது சிலர் மறந்திருந்தாலும் வரலாறு ஒருபோதும் மறக்காது. தங்கள் ஆதரவுக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் (நன்றியோடு இன்றும் உயிருடன் இருப்பவன் என்ற முறையில்) எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். மீண்டும் அவமானப்பட இந்தியா ஒன்றும் முட்டாளாக இருக்க மாட்டாது என நான் கருதுகிறேன். உதாசீனம் செய்ததோடு மாத்திரமல்ல இன்றைக்கும் இந்தியாவைக் குறை சொன்னபடிதானே நாம் இருக்கிறோம். நீங்கள் ஏன் எமக்காக வீணாக .......(என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் நான் மனிதனாக வாழ விரும்புகிறேன்)

Anonymous said...

ஈழ தமிழர் ஆதரவு உலகெங்கும் பெருக வேண்டும்.