ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்தாற் போல் திடீர் அக்கறையும் பாசமும் கொண்டு தமிழக அரசியற்கட்சிகள் களங் குதித்திருப்பது, கனவு போலத் தோன்றினாலும்இதுவொன்றும் புதுமையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர் மீதான பாசமும் பரிவும்.
ஆனால் அதை எப்போதும் ஒரேமாதிரியாக வெளிப்படுத்த விடுவதில்லை, தலைமையேற்கும் அரசியற்கட்சிகள். தமக்குச் சார்ப்பான சாதகமான, இலயிப்புக்களுக்கு பாமரர்களைத் தாளம் போட வைப்பன அவை. அதே அரசியற் கட்சிகள் பாமரரின் நாடிபிடிக்கத் தேடிவரும் நேரம் தேர்தல்காலமொன்றுதான்.
1 comment:
'தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர் மீதான பாசமும் பரிவும்.
ஆனால் அதை எப்போதும் ஒரேமாதிரியாக வெளிப்படுத்த விடுவதில்லை, தலைமையேற்கும் அரசியற்கட்சிகள்.'
10000000000000000% true.
'
Post a Comment