Saturday, November 8, 2008

நீங்கள் நினைக்கும் நாங்கள் உங்களை போல் அல்ல!

உங்கள் வீடுகளில்
3 மணி நேர மின்வெட்டாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

உங்கள் தெருக்களில் உள்ள குழாய்களில்
நல்ல குடிநீர் வருவதில்லையாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

உங்கள் கிராமங்களில்
உள்ள தெருக்கள் குன்றும் குழியுமாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

உங்கள் நகரங்களில்
வாகன நெரிசல் அதிகமாமே!
எமக்கு அந்த பிரச்சினை இல்லை!

மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக
50 ரூபாய் எரியவைக்கும்
ஒரு தீப்பெட்டிக்கும் ,

ஆறடி ஆழத்தில்
தோண்டிய பின் கிடைக்கும்
அரைச்சொட்டு தண்ணீருக்கும்,

பதுங்கு குழி அமைப்பதற்கு
வேறிடமில்லாமல் கைவைக்கும்
மண் பாதை ஹைவேக்களுக்கும்

சைக்கிள்களையும், செல்ல நாய்க்குட்டிகளையும்
ஏற்றிச்செல்லவதற்காகவாவது, இடம் தரும் மாட்டுவண்டிகளுக்குமே
நாம் இப்போது அதிகம் முயற்சிக்கிறோம்!

ஸாரா

இங்கிருந்து எடுக்கப்பட்டது.

அனுமதித்த ஸாராவுக்கு நன்றி.

No comments: