Sunday, February 22, 2009

தொடரும் தமிழக வக்கீல்கள் போராட்டம் பிற மாநிலங்களுக்கும் விரிவுபெறலாம்


தமிழகத்தில் வக்கீல்களுக்கும், காவற்துறையினருக்குமான மோதல் அரசியல் முக்கியத்துவம் மிக்கப் பிரச்சனையாக மாறிவருகிறது. ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கோரி முத்துக்குமார் தீக்குளித்த நாள் முதலாக பல்வேறு போராட்டங்களைத் தமிழகத்தில் வக்கீல்கள் முன்னெடுத்து வந்தனர்.

இந்தப் போராட்டங்களைத் திசை திருப்பும் வகையில், சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலை முன் வைத்து வக்கீல்கள் மீது காவற்துறை ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் வக்கீல்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த உத்தரவு உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டுமென்றும், இல்லையென்றால் இன்று தடையை மீறி உள் நுழையும் போராட்டம் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு ( தமிழகத்தின் இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகளின் ஆடீயோ இணைப்பு )

No comments: