அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியின் 'டேட் லைன்' என்ற பெட்டக நிகழ்ச்சியின் நிருபர், ந.வித்தியாதரன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோது கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்தவாறு பதில்களை வழங்கினார். இச் செவ்வி நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. சிறிலங்கா அரசின் உண்மை உருவை வெளிப்படுத்தும் வகையில் முக்கியதொரு ஆவணமாக அமைந்து வருகிறது.
இந்நிகழச்சி ஒளிபரப்பானபின் இதன் இணையத்தளத்தில் பார்க்க முடிகின்ற அந்த செவ்வியம், அது தொடர்பாக எழுதப்படுகின்ற பார்வையாளர் குறிப்புக்களும் (இப் பத்தி எழுதப்படும் போது, 500க்கும் அதிகமான கமென்ட்டுக்கள் எழுதப்பட்டுள்ளன), செவ்வியில் சொல்லாத அல்லது மறைமுகச் சொல்லுகின்ற பல விடயங்களை எடுத்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment