கடந்த இருபத்தைந்து வருடங்களுக்குமதிகமாக தாயகம் கோரிப் போராடும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவாகப் பல வருடங்களாகப் புலம் பெயர் தேசங்களிலும் அமைதிவழிப் போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் எனப் பல நடந்து வந்திருக்கின்றன. அன்மைக்காலத்தில் வன்னிப் பெரு நிலப்பரப்பில், போர் அதி உச்சநிலை அடைந்திருந்த போதும், புலம் பெயர் தேசங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மிகுந்த ஒழுங்கமைப்புடனேயே நடைபெற்று வந்தன.
நேற்று வன்னிப் பெருநிலப்பரப்புச் சமர்க்களங்களில் கொல்லப்பட்ட பல போராளிகளினதும், பொதுமக்களினதும், உடல்கள் கருகியும் சுருங்கியும் காணப்பட்ட படங்கள் படைதரப்பின் இணையத்தளங்களில் பிரசுரமானதும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் என அரசு அறிவித்ததும், பாதுகாப்ப வலயத்துள் சரணடைந்த மக்கள் மீது தாக்குதல் தொடுக்க அரசு முயல்கிறது என்ற ஊகத்தைப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஏனெனில் அவர்களது வாழ்நாளில் எத்தனையோ தடவைகள் அரசு இப்படி அறிவிப்பதும், அதன் பின் பலியெடுப்பதும் நடந்து வந்திருக்கிறது. இதை ஊகித்துக் கொண்ட தமிழ்மக்கள் உடனடியாகத் தாங்கள் வாழும் நாடுகளில் வீதிகளுக்க வந்து போராட்டத் தொடங்கினார்கள். இது வரை அமைதியாகப் போராட்டம் நடத்திய தமிழ்மக்கள் ஆர்பரித் தெழுந்தார்கள். பிரதான இடங்களில் உள்ள முக்கிய சாலைகளை மறித்தார்கள். பேசவந்த பெரியவர்களின் வசீகர வாக்குறுதிகளைக் கேட்க மறுத்தார்கள். செயல் ஒன்றே தேவை அது உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றே எனப் பலமாய் சொன்னார்கள். பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனச் சொல்லி வீதிகளிலேயே அமர்ந்தார்கள்.
No comments:
Post a Comment