Wednesday, May 27, 2009

இன்னுமொரு கொரிய யுத்தம்?


வடகொரியா இனிமேலும் தான் 1953 ஆண்டின் அமெரிக்காவின் மேற்பார்வையுடனான யுத்தநிறுத்த ஒப்பந்தத்துடன் கட்டுப்படப் போவதில்லை என்றும் தமது நாட்டிற்கெதிராகத் தொழிற்பட்டு எமது சமாதான ஏவுகணைகளைத் தேடவோ அல்லது தடுக்கவோ முனையும் எந்தவொரு மிகச்சிறிய பகையாளியும் உடனடியான கடுமையான இராணுவத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்றும் அறிவித்துள்ளது.இவ்வெச்சரிக்கை தென்கொரியா அமெரிக்காவுடன் ஆயுதக் குறைப்பு செயற்திட்டம் ஒன்றில் இணைந்ததன் பின்னர் உடனடியாக இன்று(புதன்) விடப்பட்டுள்ளது. மேலும் வடகொரியா தனது மேற்குக் கரையோரப் பகுதியில் இடம்பெறும் கப்பற் போக்குவரத்துக்கான பாதுகாப்பை இனிமேலும் உறுதி செய்ய முடியாது என்றும் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் PSI(ஆயுதக் குறைப்பு ஒப்பம்) செயற்திட்டத்துடன் இணைவது என்ற சியோலின்(தென்கொரிய அரசு) நிலைப்பாடு யுத்த அறிவிப்புக்கு நிகரானது என்பதே அதிபர் 'ப்யொங்யாங்' இன் முடிவு என்று அந்த அறிக்கையில் மீளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

No comments: