சிறிலங்காவின் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களையும், துயரங்களையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என சிறீலங்கா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரத்.என்.சில்லா கூறியுள்ளார்.
நீர்கொழும்பின் மரவிலா, எனுமிடத்தில் நீதிமன்ற வளாகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய சரத்.என்.சில்வா தனது நிவாரண கிராமங்களுக்கான விஜயத்தின்
அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதன் போது அவர் கூறியவை 'வன்னியில் இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள செட்டிக்குளத்தில் உள்ள முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டேன். அவர்கள் கடுமையான மன அழுத்தத்திலும், விவரிக்க முடியாத துயரத்திலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.நாம் கட்டிடங்களை கட்டிக்கொண்டு வாழ்கிறோம், அவர்கள் ஒரு கூடாரத்தில் 10 பேர்களாக வாழ்கிறார்கள். கூடாரத்தின் மையப்பகுதியில் ஒருவர் மட்டும் நிமிர்ந்து நிற்க முடியும்.
மேலும் வாசிக்க
No comments:
Post a Comment