உலகில் பல இடங்களில் பல பிரிவினருக்கிடையே பல்வேறு சண்டைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனாலும் வெற்றி என்ற ஒன்றை இலக்காகக் கொண்டிராத சண்டை ஏதும் இவற்றில் இருக்க முடியுமா? இல்லை என்பவர் நீங்கள் எனில் கட்டாயம் நீங்கள் கொலம்பியாவில் இன்று நடைபெறும் தக்காளிச் சண்டையில் கலந்தே ஆக வேண்டும். ஆம்.கொலம்பியாவிலுள்ள நகர் ஒன்றில் வருடம் தோறும் நடை பெறும் தக்காளித் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வரும் இக்குறித்த தினத்தில் கொலம்பியாவிலுள்ள இந்நகரில் வீதிகள் தோறும் தக்காளி ஆறு ஓடும்.
மேலும் வாசிக்க..
No comments:
Post a Comment