ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இசுரு பாலபட்டபந்தி நெதர்லாந்தின் இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவை மாத்திரமல்லாது நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தி ஆகிய இருவரையுமே மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தியின் மகனான இசுரு பாலபட்டபெந்தி, பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் மகளையே மணம்முடித்துள்ளார். அசோக டி சில்வாவின் மகள் தற்போது நெதர்லாந்தில் உயர் கல்வி பயின்று வருவதனால் அவரது கணவரான இசுரு பாலபட்டபெந்தியை நெதர்லாந்திற்கு அனுப்ப ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், நெதர்லாந்தில் கல்விபயின்றுவரும் நீதியரசின் மகளுக்கு, தனது கணவரான இசுரு பாலபட்டபெந்தியுடன் இலங்கை அரசாங்கத்தின் செலவில் வாழக்கூடிய அதிர்ஸ்டம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் வசிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் செலவில் நெதர்லாந்தில் சொகுசு வீடொன்றைப் பெற்றுக்கொடுக்கவும் வெளி
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment