Wednesday, November 25, 2009

புதிய,இலகு முகப்பு!,இணைய ஒலி!

நண்பர்களே!

4தமிழ்மீடியாவுடன் தொடர்ச்சியாக இணைந்து வரும் உங்களுக்கு நன்றிகள் !. உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தமிழில் தரும் 4 தமிழ் மீடியாவின் செய்திச் சேவையை பலரும் பாராட்டி வந்த போதும், இணைய வேகம் குறைந்த இடங்களில் 4தமிழ்மீடியாவின் முகப்புப் பக்கம் திறப்பதற்கு அதிக நேரம் செல்வதாக வாசகர்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார்கள்.

4தமிழ் மீடியா வெளியிடும் செய்திகளுக்கு உரிய காட்சிப்படங்களை இணைத்துத் தருவது அதன் தனிச்சிறப்பு என்பது நீங்கள் அறிந்ததே. வாசகர்கள் பலருக்கும் பிடித்தமாகவிருந்த இந்தப் பயன்பாட்டினைத் தரும் தொழிநுட்பச் செயற்பாடு காரணமாகவே, இணைய வேகம் குறைந்த இடங்களில், தளத்தின் இணைய முகப்பு திறக்கும் வேகம் குறைவாக இருந்தது.

இந்தப் பிரச்சனைக்கு முறையான தீர்வொன்றினை, 4தமிழ்மீடியாவின் தொழில் நுட்பப் பிரிவு, தற்போது அறிமுகம் செய்துள்ளது. புதிய தொழில் நுட்டபத்தினடிப்படையில் அமைந்துள்ள இத்தீர்வின் வழி, இணைய வேகம் குறைந்தவர்கள், இலகுவாக 4தமிழ்மீடியாவின் உட்பிரிவுகளுக்குள் இலகுவாகச் செல்வதற்கு ஏற்ற வழிமுறையில், இலகு முகப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள்.




விபரமாக அறிந்து கொள்ள

No comments: