Monday, November 16, 2009

லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி ராமானுஜம் திடீர் பதவி மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு?

அரசு அதிகாரத்தில் இருந்த லஞ்சப் பேர்வழிகளை விரட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் இயக்குநர் ஏடிஜிபி கே. ராமானுஜம் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் டி. ஜோதி ஜெகராஜன் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை பின் வருமாறு : லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் இயக்குநராக இருந்த ஏடிஜிபி கே. ராமானுஜம், மாநில குற்ற ஆவண காப்பகத்தில் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
இதற்காக குற்ற ஆவண காப்பகத்தில் கூடுதல் இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மாநில குற்ற ஆவணக் காப்பகக் கூடுதல் இயக்குநர் பொறுப்புடன் காவல் துறையில் கணினிமயமாக்கல் பணியையும் கே. ராமானுஜம் கண்காணித்து வருவார்.

தொடர்ந்து வாசிக்க...

No comments: