Monday, June 28, 2010

காலிறுதிக்கு நுழையும் பிரேசில் - நெதர்லாந்து!

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற Round Of 16 போட்டிகளில் பிரேசில், நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றதால், இவ்விரு அணிகளும் காலிறுதிப்போட்டியில் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன.

நேற்றைய போட்டியில் லோவாக்கியாவை எதிர்த்து விளையாடிய நெதர்லாந்து 2:1 என வெற்றி பெற்றது. 18 வது நிமிடத்தில் அர்ஜென் ரொபேனும், 84 வது நிமிடத்தில் வெஸ்லி ஸ்னெஜ்டெரும் நெதர்லாந்துக்கு கோல் அடித்தனர்.

ஸ்லோவாக்கியா கோல் அடிக்க எடுத்த பல முயற்சிகள் மயிரிழையில் பிசகின. 90 நிமிடங்களை கடந்து மேலதிகமாக கொடுக்கப்பட்ட 4 நிமிடங்களில், ரொபேர்ட் விட்டேக், ஸ்லோவாக்கியாவிற்கு ஒரு கோல் அடித்தார். அவருக்கு பெனால்ட்டி மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. இறுதியில் 2:1 என ஸ்லோவாக்கியா வீழ்ந்தது.

முதல் சுற்றிலிருந்து தொடர்ந்து 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நெதலாந்து அணி, காலிறுதி போட்டியில் பலமான பிரேசிலை சந்திக்கிறது.

இதுவரை இறுதிச்சுற்றுக்கு, 8 முறை தெரிவாகியுள்ள நெதர்லாந்து, 1998 உலக கிண்ண போட்டிகளில், 4 வது இடத்தை பிடித்தது. அந்த வருடத்தின் ஐரோப்பிய சாம்பியனாகவும் தெரிவானது. இம்முறை FIFA தரப்படுத்தலில் 4 வது இடத்தை பிடித்துள்ளது.

நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் 3:0 என சிலியை வீழ்த்தியது பிரேசில். அணியின் முண்னனி வீரர்களான ஜுஅன், பபியானோ, ரிபொனியோ கோல் அடித்து பிரேசிலின் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சிலி கடும் பிரேயர்த்தனம் எடுத்த போதும், ஒரு கோலையும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 3:0 என ஆட்டம் முடிவடைந்தது. பிரேசிலும், கடைசி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு செல்கிறது.

1962 உலக கிண்ண போட்டிகளில், அரையிறுதிப்போட்டி ஒன்றில் இறுதியாக, பிரேசில் - சிலி மோதியிருந்தன. அதில் பிரேசில் வெற்றி பெற்றது.


தொடர்ந்து வாசிக்க...

No comments: