நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?
இரு ஒட்டகங்கள் பேசிக்கொள்கின்றன!
பிள்ளை : அம்மா என்னிடம் சில கேள்விகள் உண்டு
தாய் : சொல்லு மகனே!
பிள்ளை : ஏன் எங்களுக்கு மட்டும் முதுகில் வீக்கம் இருக்கிறது?
தாய் : நாங்கள் பாலைவனத்தில் வாழ்பவர்கள்! பெருமளவான தண்ணீரை சேமித்து வைப்பதற்கு, அவை உதவி செய்யும்! எங்களுக்கு தண்ணீர் தான் அவசியம் தேவையென்பது தெரிந்து வைத்துக்கொள்!
பிள்ளை : ஏன் எங்கள் கால்கள் நீளமாகவும் பாதங்கள் வட்டமாகவும் இருக்கின்றன.
தாய் : பாலை வனத்தில் வேறெந்த விலங்குகளும் எங்களைபோல நடக்க முடியாது. இது எங்களுக்கே உரிய கால்கள்!
பிள்ளை : ஏன் எங்களது கண்களை சுற்றி பெரிய இமைகள் இருக்கிறது. சில நேரம் எனக்கு குத்துகிறது.
தாய் : எங்களது கண்களை பாதுகாப்பது இந்த இமைகள் தான்! நாங்கள் பாலைவனத்தில் வாழ்பவர்கள். காற்றில் அடிக்கும் மண் கண்களுக்குல் எந்நேரமும் விழலாம்! அதை தடுக்க இமைகள் உதவுகின்றன.
இந்த மூன்று கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்த தாய் ஒட்டகத்திற்கு அடுத்து கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க முடியவில்லை! என்ன கேள்வின்னு யோசிக்காதீங்க! உங்களுக்கும் பதில் அளிக்க முடியாது!
No comments:
Post a Comment