தற்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுடன் ஓய்வை அறிவித்திருக்கிறார் முரளிதரன். இந்த தருணத்தில் அவரின் சாதனைகளுக்கு பின்னால் இருந்த நிஜங்களை விவரிக்கிறார் ஆர்.அபிலாஷ் என்ற வலைப்பதிவர். அவரின் அனுமதியுடன் அப்பதிவை மீள்பிரசுரம் செய்கிறோம்.
4தமிழ்மீடியா
2010 ஜூலை 18-அன்று துவங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டு ஆட்டத்துடன் முத்தையா முரளிதரன் விடைபெறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஒரு கிரிக்கெட் அணியும் இப்படியான ஒரு தனிநபர் திறமையை தனது நிலைப்புக்காக நம்பி இருந்ததில்லை. இந்திய அணிக்கு டெண்டுல்கர், கும்பிளே, ஆஸ்திரேலியாவுக்கு பாண்டிங், வார்னே, மேற்கிந்திய தீவுகளுக்கு லாரா, ஆம்புரோஸ், வால்ஷ் போன்ற அதிமனிதர்கள் தொடர்ச்சியாக முன்னணியில் நின்று ஆடியுள்ள போதிலும் முத்தையா முரளிதரன் அளவுக்கு யாரும் அனாயசமாகவும் எண்ணிக்கையிலும் ஆட்டங்களை வென்று தந்ததில்லை. முரளி! எண்களைக் கடந்த வரலாற்று நிஜம்!
No comments:
Post a Comment