நேற்று (சனிக்கிழமை), போர்ட் எலிசபெத் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஒரு வழியாக 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி ஜேர்மனி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. ஜேர்மனிக்கு ஆரம்பம் முதலே அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்தது கறுப்பு உடை. இன்றும் அப்படியே களமிறங்கியது! இராசியான உடை தான்! பாதகமான சூழ்நிலையிலும் வெற்றியை கொடுத்திருக்கிறது.
ரொனால்டோவின் ஆல் டைம் ரெகார்ட்டான 15 கோல்கள் முறியடிக்கும் எண்ணத்திலிருந்த குளோசேக்கு நேற்றைய போட்டியில் காயம் காரணமாக விளையாட அனுமதிக்கப்படாதது துரதிஷ்ட்டம்! அவர் 13கோல்கள் தான் அடித்திருக்கிறார். 32 வயது. அடுத்த முறை உலககிண்ணத்தில் விளையாடுவதும் சந்தேகம்!

முதல் கோலையும், ஜேர்மனுக்காக அவரே அடித்தார். 19 வது நிமிடத்தில், மைதானத்தில் பாதி தூரத்திலிருந்து ஜேர்மனியின் சக வீரர் அடித்த கோலை, லாவகமாக பிடிக்க முயன்றார் உருகுவேயின் சூப்பர் கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெரா. கொட்டத்தொடங்கிய பாதி மழையின் நடுவே பந்து அவர் கையில் பட்டு மீண்டு வெளியில் வர, ஆப்சைட்டில் நின்று பாய்ந்தடித்தார் முல்லெர். கோலானது ஜேர்மனிக்கு! இம்முறை வளர்ந்து வரும் வீரர்களுகக்கான விருது அவருக்கு வழங்கப்படலாம்!

உருகுவே வீரர்களின் தலைகள் நடுவர் பக்கம் திரும்பி ஆப்சைட் கேட்டு ஏமாற, ஜேர்மனி ரசிகர் பட்டாளம் உற்சாக மிகுதியில், கூக்குரலிட்டது. ஆனால் 28 வது நிமிடத்தில் உருகுவேயின் எடின்சன் கவானி, அடித்த மிக வேகமான கோல், தென்னமெரிக்க கடைசி நாடு இன்னமும் துணிச்சலுடன் விளையாடுகிறதென ஆபிரிக்க மண்ணில் உரக்க கூறிக்கொண்டிருந்தது!
1:1 என சமநிலையில் கழிந்தது முதல் பாதி நேரம்! ஆரம்பத்தில் சிறிது கவனயீனமிருந்தாலும், ஜேர்மனியிடம் பயப்பட தேவையில்லை என்பதை தாமதமாக உணரத்தொடங்கியது உருகுவே! 51 வது நிமிடத்தில் நட்சத்திர ஸ்ரைக்கர் டியாகோ போர்லரின் சுழன்றடித்த கோல் 2:1 என உருகுவேயை தூக்கி நிறுத்தியது!
தொடர்ந்து வாசிக்க...

No comments:
Post a Comment