இன்று அதே ரயில் பத்திரிகைகளின் முன்பக்க அட்டைப்படத்தில் மேம்பாலத்துக்கு குறுக்கே மோதுண்டு கிடக்கும் ரயில் பெட்டிகளும், சுற்றி நின்ற மக்கள் கூட்டமுமாக ஒரு படம் அச்சிடப்பட்டிருந்தது. 'இந்திய தேசத்து ரயில்கள்' என தலைப்பும் குத்திக்காட்டப்பட்டிருந்தது. காலை அலுவலக பயணத்துக்கு ரயிலையே அதிகம் உபயோகிக்கும் ஐரோப்பிய மக்களின் அடி மனதில், இந்திய தேசம் ஆழமாக பதிந்துவிட இன்னொரு மிகச்சிறந்த உதாரணத்தை இப்பத்திரிகைகள் தந்துள்ளது.

No comments:
Post a Comment