Tuesday, June 21, 2011

4தமிழ்மீடியா என்னாயிற்று..?

அன்பிற்கினிய வாசக உறவுகளுக்கு!

4தமிழ்மீடியாவின் தொடர்ச்சியான சேவையில் தற்போது ஏற்பட்டிருக்கும் தடைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, இன்னும் ஒரிரு தினங்களில், தனது தொடர்ச்சியான செய்திச் சேவையை மீளவும் திருப்திகரமாக வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், 4தமிழ்மீடியாவிற்கு என்ன நடந்தது என்பது குறித்தும் அதன் வாசகர்களுக்கு அறியத் தரவும் கடமைப்பட்டுள்ளோம்.

அதிகரித்துச் செல்லும் வாசகர்கள் மற்றும் சிறந்த சேவையை வழங்குவது என்பது தொடர்பில் 4தமிழ்மீடியா இணையத்தை புதிய தொழில்நுடப வளங்களுடன் கூடிய, வேறு ஒரு இணைய வழங்கிக்கு, மாற்றும் பணிகளை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தோம். அவ்வாறான மாற்றங்கள் நிறைவாக செய்து முடிக்கப்பட்ட போது எதிர்பாராத விதமான புதிய ஒரு சிக்கலைச் சந்தித்துள்ளோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன், 4தமிழ்மீடியா மீது தொடுக்கப்பட்டிருந்த இணையவழித் தாக்குதல் ஒன்றின் பொறிமுறை எச்சங்கள், கோப்புக்களில் மறைந்திருந்து செயற்படுவதனால், நாங்கள் எதிர்பார்த்திருந்த திருப்தியான சேவையினைப் பெற முடியாதிருந்தது. அதனால் அனைத்தையும் துல்லியமாக ஆராய்ந்து, தூய்மைப்படுத்தும் பணிகளினால் தாமதமும், தடங்கலும், ஏற்பட்டுள்ளது. ஆயினும் எமது தொழில் நுட்பப் பிரிவினர் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர். ஆதலால் விரைவில் அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களிலும் இருந்து மீண்டு, தொடர்ச்சியான சேவையை வழங்குவோம். அதுவரை வாசகர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மன்னிக்க வேண்டுகின்றோம்.

விரைவில் மீண்டும் புத்துணர்ச்சியுடனும், புதிய வளங்களுடனும் உங்கள் கணினித் திரைகளில் காட்சி தரும் 4தமிழ்மீடியா

நன்றி!

4தமிழ்மீடியா குழுமம்

No comments: