அன்பிற்கினிய உறவுகளே!
நீங்கள் ஊடகத்துறைசார் ஆர்வமுடையவரா? அப்படியானால் உங்களுக்குரிய சந்தர்ப்பம் இது.
2008ம் ஆண்டு முதல் தமிழ்மொழியில் தனித்துவமான செய்தி இணையத்தளமாக இயங்கி வரும் 4தமிழ்மீடியாவின் ஊடகநடுநிலைச் செயற்பாடுகள் குறித்து நீங்கள் தெளிவுற அறிந்திருப்பீர்கள்.
இந்திய, இலங்கை, மலேசிய, ஊடக நண்பர்களின் இணைவில், ஐரோப்பாவில் பதிவு
செய்யப்படுள்ள செய்தி இணையத் தளமான 4தமிழ்மீடியா, பல்வேறு தடைகளையும்
தாண்டி, பல பரிணாமங்களுடன் வளர்ந்து வருகிறது.
இந்த வளர்ச்சிநிலையின் தொடர்ச்சியாக 4தமிழ்மீடியாவின்
பணிகளை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் புதிய திட்டங்களை
செயற்படுத்தும் நோக்கில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேலும் புதிய
ஊடகத்துறைச் செயற்பாட்டாளர்களைப் பகுதி நேரமாகவும், முழுநேரமாகவும்
இணைத்துக் கொள்ள விரும்புகின்றோம்.
உங்கள் விண்ணப்பங்களுடன், கல்வி, முன்அனுபவம், ஆர்வத்துக்குரிய துறை, உள்ளடங்கிய உங்கள் சுயவிபரக் கோப்பினை அனுப்பி வைக்கவும்.
மேலும் உங்களுக்குரிய இணைய வசதி, தொலைபேசி வசதி, எதிர்பார்க்கும் வேதனம், என்பவை குறித்த விபரங்களையும் குறிப்பிடவும்.
மொழி (தமிழ், ஆங்கிலம்) ஆளுமை, தகமை, அனுபவம், என்பவற்றுக்கான முன்னுரிமையுடன் உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இருபாலரும் விண்ணபிக்கலாம். வயதெல்லை கிடையாது. திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
உங்கள் விண்ணப்பங்களை எனும் editor.4tamilmedia@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கின்றோம்.
-என்றும் இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்
No comments:
Post a Comment