Monday, January 21, 2013

வலைப்பதிவர்களே வாருங்கள் !

வரும் 27ந் திகதி ஞாயிற்றுக் கிழமை திருப்பூரில் நடைபெறவுள்ள 'டாலர்நகரம்' புத்தக அறிமுகவிழாவில், வலைப்பதிவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
'டாலர் நகரம்' தொடரை எழுதியுள்ள ஜோதிஜி, இணையத்தில், மிக நல்ல பதிவுகளை எழுதிய சிறந்த வலைப்பதிவராக அறியப்பட்டவர். வலைப்பதிவுலகில் இவரது நட்புவட்டம் மிகச் சிறப்பானதும், விரிவானதுமாகும்.  இவ் விழாவில் திருப்பூர், மற்றும் திருப்புரைச் சூழவுள்ள வலைப் பதிவர்கள் தொடர்பான, ஒரு அறிமுக விபரப் புத்தகமொன்றினையும் வெளியிடுவதற்கான முயற்சிகள் ஜோதிஜியால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
சக வலைப்பதிவர்களின் ஒன்று கூடலாகவும் அமையும் இவ்விழாவில், திருப்பூருக்கு வெளியேயுள்ள வலைப்பதிவர்களும் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் வலைப்பதிவர் புதுகை அப்துல்லா, இவ் விழா தொடர்பான தன் விருப்பங்களைப் பதிவு செய்வதோடு, சக வலைப்பதிவர்களுக்கான அன்பின் அழைப்பினையும விடுத்துள்ளார். அதன் கானொளித் தொகுப்பினை இங்கே காணலாம்.

No comments: