Wednesday, August 14, 2013

6வது ஆண்டில் 4தமிழ்மீடியா ! நல்லவை எண்ணி நடக்கின்றோம் !

ஐந்து வருடங்கள் நிறைவாகி ஆறாவது ஆண்டினைத் இன்று தொடங்குகிறது 4தமிழ்மீடியா. 2008 ஆகஸ்ட் 14ந் திகதி, தனது அதிகாரபூர்வமான செய்திச் சேவையைத் தொடங்கிய 4தமிழ்மீடியாவின் இந்த ஐந்தாண்டுப் பயணத்தில், உடன் வந்த வாசகர்கள், செய்தியாளர்கள், ஆர்வலர்கள் என அனைவருக்குமான நன்றிகளை முதலில் தெரிவித்து அகம் மகிழ்கின்றோம்.
கடந்த வருடம் 4தமிழ்மீடியாவின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில், 4தமிழ்மீடியாவின் செயற்பணிகள் குறித்த விரிவான தொடர் கட்டுரை ஒன்றினைத் தந்திருந்தோம். நீண்ட கால நோக்கிலான செயற்திட்டங்களுடன் தொடரும் இப் பயணத்தில், இந்த ஆண்டு தொடங்கிய பணிகள் பலவாக இருந்த போதும், அவற்றின் அறுவடைக்கான காலம்  இப்போதாக அமையவில்லை. அதனால் அவை குறித்து முழுமையாக இப்போதைக்கு அறியத் தரவும் முடியவில்லை. ஆனால் நிறைவு கண்ட பணியாகவும், இந்த ஆண்டின் முற்பகுதியில், புதிய தொடக்கமாகவும், 4தமிழ்மீடியா வெளியிட்ட திருப்பூர் ஜோதிஜியின் ' டாலர் நகரம் ' புத்தகத்தினைக் குறிப்பிடலாம்.
 நல்லவை எண்ணி நடக்கின்றோம் !

No comments: