(ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது) சிறிலங்கா அரச படைகளின் வல்வளைப்புக்குள்ளாகியிருக்கும், தமிழமக்களின் உயிர் காக்க வேண்டி, போரை உடன் நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் உடல்நிலையில் சற்று சோர்வு காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.
இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டதாகவும், பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் சோர்வோடு அமர்ந்திருக்கவும் காணப்பட்டதாகத் தெரியவருகிறது. வைத்தியர்கள் அவ்வப்போது, அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருவதாகவும், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாகவும், வைத்தியர்கள் தெரிவி்க்கின்றனர்.
இந்நிலையில் முதலுதவிக்குழுவொன்றும், அம்புலன்ஸ் வண்டியொன்றும், வைத்தியர் குழுவும், தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, திருமாவளவனின் தாயார் பெரியம்மா, தம்பி செங்குட்டுவன் ஆகியோரும் உண்ணாவிரத மேடையில் அவர் அருகிலேயே இருந்து கவனித்து வருகின்றனர்.
ஓடியோ செய்தி
No comments:
Post a Comment