இலங்கை விமானப்படையினரின் மிக் வைற்றர் ஜெட் ரக போர் விமானம் ஒன்று இன்று புதன்கிழமை வன்னிப் போர்முனையில் பறப்பில் ஈடுபட்டிருந்த சமயம் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் உள்ள வன்னிபடைத் தலைமையகத்தை மேற்கோள் காட்டி, வன்னி வான்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று விமானப்படையினர் விமானத்தில் இருந்துள்ளனர் எனவும், இரஷ்யத் தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் , லேசர் கருவி வசதி, ரொக்கட், ஏவுகணைகள் மற்றும் பல்வகைப்பட்ட பெருந்தொகையான குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடிய வசதியும் மிக்கது.
விடுதலைப்புலிகளின் இலக்குகள் எனச் சொல்லிக்கொண்டு, வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுவீச்சுகள் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இச் செய்தி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை .
No comments:
Post a Comment