ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்திய மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சென்னையிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன்பாக, தீக்குளித்து மரணமான முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்த, தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சென்னை கொளத்தூருக்கு வந்த வண்ணமிருப்பதாகத் தெரிகிறது.
மாணவர்கள், இளைஞர்கள், அலுவலகர்கள் எனபல்வேறு தரப்பினரும் குழுக்களாக வந்து குவிந்த வண்ணமிருப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அங்கிருந்து எமது செய்தியாளர் சற்று முன் வழங்கிய ஒலிவழிச் செய்தி மற்றும் காணொளி இணைப்பு
No comments:
Post a Comment