பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சிறிலங்காவின் வடகிழக்கு பகுதியின் நிலபரப்பை ஐ.நாவின் செயற்கை கோளின் உதவியுடன் ஏப்ரல் 19-26 வரையில் அவதானித்து துல்லிய முப்பரிமாண தோற்றத்துடன் கூடிய செய்மதி புகைப்படத்துடன், 10 பக்கங்கள் கொண்ட PDF ஆக அறிக்கைப்படுத்தியது ஐ.நாவின் UNOSAT பிரிவு.
பாதுகாப்பு வலயத்தினுள் வான் தாக்குதல்கள், கனரக ஆயுதப்பாவணை தொடர்ந்து மக்கள் குடியிருப்புக்கள் மீது இடம்பெற்றிருப்பதற்கான சாட்சியங்களை தெள்ளத்தெளிவாககாண்பிப்பதால் இவ்வறிக்கை, சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தற்போது அந்த அறிக்கையினை பார்வையிடுவதற்கான இணைப்புக்கள் UNOSAT இனால் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் 'இன்னர் சிட்டி பிரஸ்' இது பற்றி முதலில் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தாலும்,ரொய்ட்டர் செய்தி தளமும் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment