தமிழகத்தின் தேர்தல் களத்தில் என்றுமில்லாதவாறு, இம்முறை ஈழப்பிரச்சனையின் எதிரொலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. இது தேர்தல் முடியும் வரை தொடருமா, திசை மாறுமா, என்பதெல்லாம் விடை தெரியா கேள்விகளே. ஆனாலும், இத் தேர்தலில் முக்கியமாக அவதானிக்கப்படும் ஒரு விடயம் இப்பிரச்சினையை தேர்தல் முடியும்வரை இழுத்துச் செல்லுமென்றே எண்ணத் தோன்றுகிறது.
ஏனெனில் கட்சிகளுக்கிடையிலான பிரச்சாரத்தையும் தாண்டி, ஈழப்பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பரப்புரையை தனி அமைப்புக்கள் பல முன்னின்று நடத்தி வருகின்றன. அந்த வகையில் இதுவரையில் பல இறுவட்டக்கள் , துண்டுப்பிரசுரங்கள் , இப்பரப்புரையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் எமக்கும் சில கிடைத்திருந்தன. அந்த வகையில், ஈழத்தின் இனப்படுகொலைகளைக் கண்டுகொள்ளாது, அதற்குத் துணை போன, மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசை விமர்ச்சித்தும், ஈழப்படுகொலைகள், சிறிலங்காப்படைகளின் தமிழக மீனவர் படுகொலைகள் , என்பவற்றையும், உள்ளடக்கியும் 'இறுதி யுத்தம்' என்ற தலைப்பில் இந்த இறுவட்டு வெளிவந்துள்ளது.
'இறுதி யுத்தம்' இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையின் தீவிரத்தை காட்டுவதோடு, அதற்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினையும் கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்வதோடு தமிழ்நாட்டிலில் இருந்து காங்கிரசினை துரத்தியடிக்கும் நோக்கத்தினையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. அத்தடன் இந்த இறுவட்டு ஈழத்தின் இனப்படுகொலையில் காங்கிரசின் பங்கு என்ன எனும் வகையில் மிகச்சிறந்த ஆவணப் படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த ஆவணத்தின் தொகு நேர்த்தியும், பொருத்தமான வசனங்கள், என்பனவும், தொகுப்பைப் பார்க்கும் போது தரும் தாக்கம் மிகுதியாக உள்ளது. வெளியிடுவதற்கு முன்னதான பார்வைக்குட்படுத்தியபோது, ஈழத்தின் துயர் மிகுந்த பல காட்சிகளையும் ஏற்கனவே பார்த்திருந்தவரகளாக இருந்த எமது செய்திப்பிரிவினரே தொகுப்பு முடிந்தது சில நிமிடங்கள் வரை மெளனமாகிவிட்டார்கள். அனைவர் கண்களிலும் கண்ணீர்.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட இக் காணொளி தமிழகத்தில் தடைசெய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உண்டு. ஆயினும் தமிழர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டுமெனும் நோக்கில் அதை அப்படியே தருகின்றோம். இறுதியுத்தம் யாருக்கு ..?
No comments:
Post a Comment