வியாழன் வெளியான புதிய ஆய்வுத் தகவல் ஒன்று சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் தமது சுற்றுவட்டப் பாதையில் இந்தக் கணத்தில் இருந்து இன்னமும் எவ்வளவு காலத்தில் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளக் கூடும் என்ற பல ஆச்சரியமான தகவல்களைத் தருகின்றது. 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவானதாக நம்பப்படும் நமது சூரியக் குடும்பத்தின் மையசக்தியான சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சிவப்பு இராட்சதனாக மாறி (அதாவது Redgiant நட்சத்திரமாக விரிவடைந்து) பூமி உட்பட உள் வட்டப் பாதையிலுள்ள புதன்,செவ்வாய்,வெள்ளி ஆகிய கிரகங்களையும் விழுங்கி விடும் என்பது இவ்வாய்வின் முடிவாகும்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment