
அடிப்படையில் மருத்துவ பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் அகதி முகாம்களுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், தாதியார்களும் தற்போது அங்கு பணிபுரிய விரும்பவில்லை எனக்கூறத்தொடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எமக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை எனவும், அங்கு பணிபுரிகையில் நாளொன்றுக்கு ஒரு தண்ணீர் போத்தல் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும்,' முகாம்களில் கடமை புரிந்து விட்டு அவசரமாக கொழும்பு திரும்பியவர்கள் தமது அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.இதனால் நாட்டின் ஏனைய பகுதிகளை சேர்ந்த மருத்துவ பணியாளர்களும் வவுனியா முகாம்களுக்கு செல்ல முன்வருவதில்லை, இதனால் தற்போது முகாம்களில் மருத்துவ பணியாளர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக அம்மருத்துவ அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment