Monday, August 17, 2009

அழுத்தங்களுக்கு பயந்து முகாம் மக்களை விடுதலை செய்ய முடியாது - கோத்தபாய ராஜபக்ச


'உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக, இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது' என திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, 'அவ்வாறு அவர்களை விடுதலை செய்தால் அகதிகளுடன் மறைந்திருக்கும், வி.புலிகளின் உறுப்பினர்களும், வெளியே வந்து வன்னியில் மறைத்து வைத்திருக்கும், ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை தொடங்குவார்கள்' எனவும் கூறியுள்ளார்.

வன்னியில் பெரும் தொகையான ஆயுதங்களும், வெடி பொருட்களும், புதைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வன்னியின் கிழக்கு பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முகாம் மக்களை விடுதலை செய்தால், அவர்கள் அவ் ஆயுதங்களை பயன்படுத்தி மீண்டும் தாக்குதலை தொடங்கிவிடுவதற்கான சாத்தியம் இருக்கிறது. அப்போது, அரசு பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதே எதிர்கட்சி குழுவினரே முன்வைப்பாரகள்' என இது தான் அவர்களது இறுதியான துருப்புச் சீட்டாக இருக்கும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க...

No comments: