Wednesday, August 12, 2009

இன்று வானில் தெரிகிறது எரிநட்சத்திரங்களின் மழை!


'எரி நட்சட்த்திரங்களின் மழை' - வானில் சுவர்க்கத்தினை கட்டியெழுப்ப, இன்றைய தினம், வானிலை மாற்றம் கொடுத்துள்ள அதிர்ஷ்டவசமான அனுமதி இது. ஆம், (ஆகஸ்ட் 11-12 ) இன்று நள்ளிரவு, பூகோளத்தின் வடதிசையில் உள்ள பெரும்பாலான நாடுகளில், வானில் காணக்கூடிய காட்சிதான் இந்த 'எரி நட்சத்திரங்களின் மழை'
அண்டவெளியில் உடைந்து போய் மிதந்து கொண்டிருக்கும் எரிநட்சத்திர துகள்களின் ஊடாக பூமியின் சுற்றுப்பாதை அமைகிறது.

எமது பூமி அந்த பாதையில் பயணிக்க போகிறது. எனவே தான் நமக்கு இதனை காணக்கூடிய அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இறுதியாக இவ்வாறு 1992 ஆம் ஆண்டு மிகப்பெரிய எரிநட்சத்திரங்களின் மழை வானில் தெரிந்தது. வால் வெள்ளியில் இருந்து விண்கற்கள் பொழியும் மழை எனவும் இதனை குறிப்பிடலாம்.

இன்று காட்சியளிக்க போகும் இவ் எரி நட்சத்திரங்களின் மழையில் உள்ள தூசி துகள்கள் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்தவை. அத்துடன் 1862 ஆம் ஆண்டு துகள்களாக்கப்பட்ட எரிநட்சத்திரங்களுடன் தொடர்புடையவகவும் இருக்கிறது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: