இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஐ.நா. ஊழியர்கள் இருவரின் விடுதலை கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன எனத் தெரிய வருகிறது.
ஐ.நா. ஊழியர்களான சார்ள்ஸ் ரவீந்திரன், கந்தசாமி சுரேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும்,
இம்மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன என்றும் மனித உரிமைகள் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment