
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகொப்டர் விபத்தில் பலியான அதிர்ச்சியினால், ஆந்திரா முழுவதும் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. இது, ராஜசேகர ரெட்டியின் குடும்பத்தினரிடையே மிகுந்த கவலையையும், அச்சத்தையும் ஏறபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை இத்தொகை, 10 இல் இருந்தும், 30 ஆக மாறி தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு ராஜசேகர ரெட்டியின் மரணம் தொடர்பாக மூன்று நாட்களுக்கு மேலாக, ஊடகங்களும், செய்தி நிறுவனங்களும் கொடுத்து வரும் தொடர்ச்சியான தாக்கமே காரணம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment