Wednesday, September 9, 2009

'நந்தி' திரைப்பட துவக்க விழாவில் ஈழத்தமிழ் ஜோடிகளுக்கு திருமணம்


'நந்தி' திரைப்பட துவக்கவிழாவும், படப்பூஜையும் அண்மையில் நடைபெற்றது.
தென்னிந்திய திரைப்படங்கள் எப்போதும் மிகப்பிரமாண்டமான முறையில் படப்பூஜை போடப்படுவது வழக்கம்! எனினும் இத்திரைப்படத்தினை, விஷன் எக்ஸ் சார்பில் தயாரிக்கும் தினேஷ் கார்த்திக், ஒரு பொது நல நோக்கோடு நடாத்தியுள்ளார்.

சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதி முகாம்களில் தங்கியிருந்த ஐந்து ஜோடிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சீரும் சிறப்புடனும், படக்குழுவினரின் செலவிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர்.


சிறிலங்கா இடைத்தங்கல் முகாம்களில் வாழ்விழந்து, ஆதரவின்றி, நிர்க்கதியாய், சுமார் 3 இலட்சம் மக்கள் தவித்துக்கிடக்க, தப்பிப்பிழைத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு தத்தளித்து ஓடி வந்தனர். அங்கும் தமது எதிர்காலம் கேள்விக்குறியாய், சிறிலங்காவிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் தவித்து வாழ்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க....

No comments: