நடிகர் விஜர் அரசியல் பிரவேசம் குறித்து, சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று மனம் திறந்துள்ளார்.கடந்த சில தினக்களாகவே எந்த பத்திரிகையை திறந்தாலும் எனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்தி தான் முதலில் நிற்கிறது. உண்மையை சொன்னால் நான் அந்தளவுக்கு பெரிய ஆள் கிடையாது.சினிமா தன எனக்கு முக்கியம். அரசியல் பிரவேசம் குறித்து முடிவேதும் எடுக்கவில்லை.
ராகுலை சந்தித்து நான் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை.
ராகுலை சந்தித்த போது அவர் என்னை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும், காங்கிரஸும் இளைஞர்களை அணுகுவதில் ஒரே அணுகுமுறையை தான் வைத்துள்ளோம். அவரை டெல்லியில் சந்தித்த போது எனது திரைப்படங்கள், நான் செய்து வரும் மக்கள் பணிகளை பற்றித்தான் பேசினார். அரசியல் பற்றியும் பேசினோம். ஆனால் அதை இப்போது சொல்வது நாகரீகமாக இருக்காது.
தொடர்ந்து வாசிக்க....
No comments:
Post a Comment