Friday, September 25, 2009

உலகத்தமிழர்கள் துயர் துடைக்க என்ன செய்தார் கருணாநிதி? - ஜெயலிதா

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில், ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு வருகிற 2010 ஜனவரி மாதம் நடைபெறுவதற்கு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

உலகத்தமிழ் மாநாட்டினை கொண்டாடும் சூழ்நிலையிலா தமிழ் மக்கள் இருக்கிறார்கள்? 1966 ஆம் ஆண்டு முதல் உலக மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று, இரண்டாம் தர குடிமக்களாக தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத்தமிழர்கள், இன்று சொந்த மண்ணிலே அகதிகளாக, முகாம்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நடைபெற்ற அனைத்து உலகத்தமிழர் மாநாடுகளும், சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன.ஆனால், கருணாநிதியின், உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பில், சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் குறித்து எந்தவித தகவலும் இல்லை.தன்னிச்சியாக இந்த மாநாடு நடத்தப்படுமாயின், 9 வதி உலகத்தமிழ் மாநாடு என்ற தகுதியை அந்த மாநாடு பெறமுடியாது.

No comments: