Monday, September 21, 2009

மண்டபம் பகுதி மீனவர்களின் ஆடைகளை களைய சொல்லி, சிறிலங்கா கடற்படை அட்டூழியம்?,

மண்டபம் பகுதி மீனவர்களிடம், ஆடைகளைக் களையச் சொல்லி, அவமானப்படுத்தியதோடு அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால்களையும் கடற்படையினர் பறித்துச் சென்றுள்ளனர் என மீனவர்கள் முறைப்பாடு தெவித்துள்ளனர். முறைப்பாட்டில் அவர்கள் மேலும் தெவித்திருப்பதாவது
மண்டபம் வடக்கு கடல் பகுதியிலிருந்து 424 விசைப்படகுகளில் வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு ஐந்து பைபர் படகில் வந்த கடற் படையினர், மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் மீனவர்களிடம் ஆடைகளைக் களையச் சொல்லி உள்ளாடையுடன் அமரவைத்து, சுற்றிநின்று தாக்கினர். அத்தோடு எங்கள் படகையும் பாம்பன் படகையும் சிறைப்பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து வாசிக்க...

No comments: