இந்துசமுத்திரத்தில் கேந்திர நிலையங்களில் அமைந்துள்ள துறைமுகங்களில் ஒன்றான காங்கேசன் துறைமுகத்தை புதுப்பித்து அமைக்கும் பொறுப்பை இந்தியாவிடம் கையளிக்க இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அதன் தொடக்கமாக துறைமுகம் எவ்வாறு புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும் என இலங்கை விரும்புகிறது, எதிர்பார்க்கிறது என்பது குறித்த நீண்ட அறிக்கையை இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகாரசபை திட்ட வரைவு ஒன்றை, விரிவான அறிக்கை ஒன்றை இந்தியாவிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கை அண்மையில் கொழும்பிலுள்ள இந்தியத்தூதரக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.1995 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளிடம் இருந்து அரச படைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதிலிருந்து காங்கேசன்துறைமுகப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு படையினர் நிறைந்து காணப்படுகின்றனர்.
காங்கேசன் துறைமுகம் தென்னிந்தியாவுக்கு மிகச் சமீபமாக இருப்பதால் இந்தியாவுக்கும் கேந்திரமாகவும் மிகவும் வேண்டியதாகவும் அமைந்துள்ளது என்று "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment