ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்கள் பெயர் வைக்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் முத்துவேலர், அஞ்சுகம் பெயர் சூட்டப்பட்டது. மேலும்,அவர்களின் சிலையும் இங்கு நிறுவப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையத்தை அக்டோபர் 13 ம் தேதி அன்று தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில், ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைத்து, அங்கு அவரது சிலையையும் வைக்க வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment