Tuesday, October 13, 2009

பா.ம.க- விலகல் பாதிப்பு இல்லை - ஜெயலலிதா !

அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க.விலகியதால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலிலிதா கூறியுள்ளார்.சென்னையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் வந்த ஜெயலலிதா, செய்தியாளர்களிடம் கூறியதாவது
அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியதால் அ.தி.மு.க- வுக்கு இழப்பு இல்லை. கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இருப்பதை அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

கூட்டணியிலிருந்து விலகிய பின்பு அ.தி.மு.க. குறித்து ராமதாஸ் கூறிய கருத்துக்கு நான் மதிப்பளிக்க விரும்பவில்லை. பதில் அளித்து எனது தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.

ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. அவரது கொள்கைகள் மற்றும் அவர் எடுத்துள்ள நடவடிக்கைகளால் உலகத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணரும் முன்பே விருது வழங்கப்பட்டு விட்டது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: