Wednesday, October 28, 2009

கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்

AddThis Social Bookmark Button இலங்கை அகதிகள் 78 பேரை ஏற்றிச் சென்ற அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலிலுள்ள அகதிகளை இந்தோனேஷியாவின் கிஜாங் துறைகத்தில் இறக்குவதற்கு அம்மாகாண ஆளுநர் அனுமதி மறுத்துள்ளார்.

இந்தோனேஷியா அகதிகளை கொண்டுவந்து குவிக்கும் இடமல்ல என்று ஆளுநர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவை நோக்கி இலங்கையர்கள் சென்று கொண்டிருந்த படகு கடந்த வாரம் சுமாத்ரா தீவுக்கருகில் கோளாறுக்குள்ளானதை அடுத்து அதிலிருந்த இலங்கையர்களை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேஷியா அவுஸ்திரேலியாவுக்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

அகதிகளை நடத்துவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அமுலாக்கத்தின் முதல் நடவடிக்கையாகவே தற்போது இலங்கை அகதிகள் இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: