இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்ததாக, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதும், இராணுவத்தினர் மீதும் தமிழக தமிழின உணர்வாளர்கள் முதற்கொண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வரை குற்றம் சுமத்தியுள்ள வேளையில்,
இலங்கைத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் தொப்புள் கொடி உறவுகள், தமிழகத்தில் உள்ள வேளையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு விஜயம் மேற்கொள்ள சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.இதன் படி, சிறப்பு விமானம் மூலம் கொழும்பில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை வருகையளிக்கும் அவர், பின்னர் கால் மூலம் திருப்பதி மலைக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை நண்பகல் 1.30 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்வதுடன், அவருக்கு தேவஸ்த்தானம் சார்பில் சிறப்பான வரவேறு அளிக்கப்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment